சிங்கர் கிண்ணத்திற்கான 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளுக்காக இன்றைய தினம் 6 போட்டிகள் நடைபெற்றன. அதில் சஹான் சுரவீர மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் சதம் கடந்து தத்தமது அணிகளை வலுப்படுத்தினர். அதேநேரம், இன்றைய தினம் சிறப்பாக பந்து வீசிய மதீஸ் தீக்ஷன மற்றும் மலிந்த ஜயோத் ஆகியோர் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி தமது அணிக்கு பாரிய பங்களிப்பினை வழங்கினர்.
ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு
இன்றைய தினம் கொழும்பு ஆனந்த கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆனந்த கல்லூரி 7 விக்கெட் இழப்பிற்கு 361 ஒட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
சந்தோஷ் குணதிலகவின் 85 ஓட்டங்களால் தோல்வியை தவிர்த்த பேதுரு கல்லூரி
ஆனந்த கல்லூரி சார்பாக சஹான் சுரவீர 1௦4 ஓட்டங்களைப் பெற்ற அதேநேரம், கவிஷ்க அஞ்சுல மற்றும் சம்மு அஷான் ஆகியோர் அரைச் சதம் கடந்தனர். மறுமுனையில், ஜோசப் கல்லூரி சார்பாக எதிரணியின் ஓட்டங்களை கட்டுப்படுத்திய நிபுன் சுமணசிங்க 68 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனையடுத்து களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 5 ஓட்டங்களை பெற்றுள்ளது. நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
ஆனந்த கல்லூரி, கொழும்பு: 361/7d (64) சஹான் சுரவீர 104, கவிஷ்க அஞ்சுல 73, சம்மு அஷான் 66, அசெல் சிகர 32, காமேஷ் நிமால் 26*, துஷான் ஹெட்டிகே 23, நிபுன் சுமணசிங்க 4/68, ஹரீன் குரே 2/123
புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு : 5/0 (2)
மொறட்டுவ வித்தியாலயம் எதிர் திருச் சிலுவைக் கல்லூரி, களுத்துறை
இவ்விரு அணிகளுகிடையிலான போட்டி இன்றைய தினம் மொறட்டுவ கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்தது. முதலில் துடுப்பாடிய மொறட்டுவ வித்தியாலயம் 26 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அதிரடியாக பந்து வீசிய மலிந்த ஜயோத் ஓட்டங்களை மட்டுப்படுத்திய அதேநேரம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனையடுத்து களமிறங்கிய திருச் சிலுவைக் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது 8 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்றிருந்தது. கூடிய ஓட்டங்களாக கவிந்து உமயங்கன 32 ஓட்டங்களை பதிவு செய்த அதேநேரம், நதீர மதுவந்த ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.
நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
மொறட்டுவ வித்தியாலயம்: 98 (26) – மலிந்த ஜயோத் 5/65, இயன் தேவின் 2/17, அவிஷ்க பெரேரா 2/10
திருச் சிலுவைக் கல்லூரி: 148/8 (43) – கவிந்து உமயங்கன 32, நதீர மதுவந்த 28*, லஹிறு தம்பவிட்ட 29, சேஹர சொய்சா 3/33, நஜ்ஜித் மிஷன்திர 2/18
புனித அலோசியஸ் கல்லூரி, காலி எதிர் புனித செபஸ்தியன் கல்லூரி, மொறட்டுவ
புனித செபஸ்தியன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அலோசியஸ் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 27௦ ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டது.
சிறப்பாகத் துடுப்பாடிய அஷேன் பண்டார 125 ஓட்டங்களை பதிவு செய்தார். அதேநேரம், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் பிரவீண் ஜயவிக்ரம ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதனையடுத்து களமிறங்கிய செபஸ்தியன் கல்லூரி அணி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது 1 விக்கெட் இழப்பிற்கு 14 ஓட்டங்களை பெற்றுள்ளது. நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்
போட்டியின் சுருக்கம்
புனித அலோசியஸ் கல்லூரி: 270 (80,3) அஷேன் பண்டார 125, நிலுக்க்ஷ துல்மின 43, ஹரீன் புத்தில 31, அவிஷ்க பெர்னாண்டோ 2/52, பிரவீண் ஜயவிக்ரம 2/64
புனித செபஸ்தியன் கல்லூரி: 14/1 (5)
கொழும்பு றோயல் கல்லூரி எதிர் ஸ்ரீ தர்மசோக கல்லூரி, களனி
தர்மசோக கல்லூரி அணி, 116 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இரண்டாம் நாளாக இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்தது. எனினும் அவ்வணி, கணித் சந்தீபவின் அதிரடி பந்து வீச்சில் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சமித்த ரங்க ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அதேவேளை, கணித் சந்தீப 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நல்ல நோக்கத்தோடு முதிய நட்சத்திரங்கள் விளையாடிய கால்பந்து தொடர்
அதனையடுத்து களமிறங்கிய றோயல் கல்லூரி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது. சிறப்பாக துடுப்பாடிய பசிந்து சூரியபண்டார மற்றும் கவிந்து ஆகியோர் அரைச் சதம் கடந்து முறையே 86, 6௦ ஓட்டங்களை பெற்றனர்.
போட்டியின் சுருக்கம்
றோயல் கல்லூரி: 128 (44.5) அபிஷேக பெரேரா 31*, ரோனுக்க ஜயவர்தன 30, தேவிந்து சேனாரட்ன 23, யுகீஷா திஷான் 4/28, மதுமாதவ அனுருத்த 2/36, வேனுரா கயேஷான் 2/26
ஸ்ரீ தர்மசோக கல்லூரி: 194 (71.4) சமித்த ரங்க 89*, மதுமாதவ அனுருத்த 58, கணித் சந்தீப 4/58, ஹெலித விதானகே 2/18, ஹிமேஷ் ராமநாயக்க 2/43
றோயல் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 228/5 (58) பசிந்து சூரியபண்டார 86, கவிந்து மதரசிங்க 60
போட்டியின் முடிவு : போட்டி சமநிலையில் முடிவுற்றது. ஸ்ரீ தர்மசோக்க கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி
புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி எதிர் புனித பெனடிக் கல்லூரி, கொழும்பு
இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பித்தது. முதலில் துடுப்பாடிய அந்தோனியார் கல்லூரி, மதீஸ் தீக்ஷனவின் அதிரடி பந்து வீச்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
சிறப்பாக பந்து வீசிய மதீஸ் தீக்ஷன 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பெனடிக் கல்லூரி 7௦ ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் சற்று இக்கட்டான நிலையில் இருக்கிறது.
நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
புனித அந்தோனியார் கல்லூரி: 128 (35.4) சதீஷ் விக்ரமாராச்சி 26, முஹம்மத் அப்சர் 19, டேவன் ஸ்டுடர் 19, மதீஸ் தீக்ஷன 5/23, சலன சங்கல்ப 2/33
புனித பெனடிக் கல்லூரி: 70/5 (28)
டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரி, கொழும்பு எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி
இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி தர்மராஜ கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 232 ஓட்டங்களை பெற்றுள்ளது. சிறப்பாக துடுப்பாடிய பசிந்து சானக மற்றும் முதித்த லக்ஷான் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 91 , 45 ஓட்டங்களுடன் களத்தில் இருகின்றனர்.
நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்
போட்டியின் சுருக்கம்
டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, கொழும்பு: 232/6 (71) பசிந்து சானக 91*, முதித்த லக்ஷான் 45 *, சசிக்க கமகே 36 கிஹான் விதாரண 2/39