சிங்கர் கிண்ண போட்டியில் புனித பேதுரு கல்லூரி முதல் இன்னிங்ஸில் வெற்றி

292
Aloysius VS Peters

சிங்கர் கிண்ணத்திற்கான (டிவிஷன் 1) தமது முதலாவது போட்டியில் பம்பலபிட்டிய புனித பேதுரு கல்லூரி, புனித அலோசியஸ் கல்லூரிக்கு எதிராக முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று சிறந்த முறையில் இந்தத் தொடரை ஆரம்பித்துள்ளது.  

பம்பலபிட்டிய புனித பேதுரு கல்லூரி, தனது முதலாவது போட்டியினை புனித அலோசியஸ் கல்லூரிக்கு எதிராக விளையாடியது. இதில் முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்களை பெற்று கொண்ட  புனித பேதுரு கல்லூரி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

தொடர்ந்து, களம் இறங்கிய அலோசியஸ் கல்லூரி 65.5 ஓவர்களில் 130 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. எனவே, அவ்வணி பல்லொ ஒன் முறையில் தொடர்ந்து தமது இரண்டாம் இன்னிங்ஸை விளையாடியது.

அதிலும் அவ்வணியின் ஆரம்ப வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில்  26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் அலோசியஸ் கல்லூரி அணி இருந்தது.

எனினும் பின்னர் அவ்வணியின் துடுப்பாட்ட வீரர் #நவிந்து நிர்மல் களம் இறங்கி கடின போராட்டத்தின் மத்தியில் பெற்றுக்கொண்ட 62 ஓட்டங்கள் மூலம், ஆட்ட முடிவின் போது 157 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து, அலோசியஸ் கல்லூரி தோல்வியை தவிர்த்துக்கொண்டது.

தனது நேர்த்தியான பந்து வீச்சில் அலோசிஸ் அணியை துவம்சம் செய்த #மிப்லால் அமீன் முதல் இன்னிங்ஸுக்காக 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், இரண்டாம் இன்னிங்சில் 68 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி 265/9 (87) – லக்க்ஷிண ரொட்ரிகோ 75, ரன்மித் ஜயசேன 51, மானெல்கர் டீ சில்வா 49,
அஷென் பண்டார 31/3, ஹரீன் பித்துல 93/2, நிலுக்ஷ துல்மின 16/2

புனித ஆலோசிஸ் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்) 135/10 (65.5) –
நவிந்து நிர்மல் 28, சந்துஷ் குணதிலக்க 26/3, மிப்லால் அமீன் 27/3 மானெல்கர் டீ சில்வா 27/3

புனித ஆலோசிஸ் கல்லூரி(இரண்டாம் இன்னிங்ஸ்) 157/8 (50) – நவிந்து நிர்மல் 62, அஷென் பண்டார 33, மிப்லால் அமீன் 68/4, ஒபேயசேகர 30/1