இன்று நிறைவுற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் இசிபதன கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றியை சுவீகரித்துக் கொண்டதுடன், பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டது.

அதேவேளை, இன்று ஆரம்பமான போட்டிகளின் முதல் நாள் போட்டி நிறைவில் புனித சில்வெஸ்டர் கல்லூரி மற்றும் மலியதேவ கல்லூரி அணிகள் முன்னிலையில் உள்ளன.

இசிபதன கல்லூரி எதிர் ஸ்ரீ சுமங்கல கல்லூரி

கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இசிபதன கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய ஸ்ரீ சுமங்கல கல்லூரி 69.5 ஓவர்களில் 295 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் அசத்திய ஹரித் லக்ஷான் 138 ஓட்டங்களையும் புளித யசஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஹேஷான் பெர்னாண்டோ மற்றும் லஹிரு டில்ஷான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இசிபதன கல்லூரியும் சிறப்பான துடுப்பெடுத்தாட்டத்தில் ஈடுபட்டது. அதிரடியாக ஆடிய பெதும் நிஸ்ஸங்க 152 ஓட்டங்களையும் களன பெரேரா 79 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, இசிபதன கல்லூரி முதல் இன்னிங்சில் 296 ஓட்டங்களைக் குவித்து ஒரு ஓட்டத்தினால் முன்னிலை பெற்றுக் கொண்டது. சிறப்பாக பந்து வீசிய  சமித் யசந்த (6/58) மற்றும் நிபுண தேஷான் (4/96) ஆகியோர் தமக்கிடையே 10 விக்கெட்டுகளையும் பங்கிட்டுக் கொண்டனர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த ஸ்ரீ சுமங்கல கல்லூரி எதிரணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. போட்டியை சமநிலையில் முடிக்கும் நோக்கில் மந்தமான கதியில் துடுப்பெடுத்தாடிய அவ்வணி 43.4 ஓவர்களில் 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் அசத்திய மதுஷிக சந்தருவன் 12 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஆட்டம் நிறைவடைய சிறிது நேரமே எஞ்சியிருந்த நிலையில் 103 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இசிபதன கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹேஷான் பெர்னாண்டோ ஆட்டமிழக்காது 69 ஓட்டங்கள் விளாச, இசிபதன கல்லூரி வெறும் 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 103 என்ற வெற்றி இலக்கைக் அடைந்தது.

அணிக்கு தனது பங்களிப்பை வழங்கிய களன பெரேரா 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சமித் யசந்த 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி இசிபதன கல்லூரி 8 விக்கெட்டுகளினால் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

ஸ்ரீ சுமங்கல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 295 (69.5) – ஹரித் லக்ஷான் 138, புளித யசஸ் 53, நிபுண தேஷான் 27, ஹேஷான் பெர்னாண்டோ 49/4, லஹிரு டில்ஷான் 49/4

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 296 (62.2) – பெதும் நிஸ்ஸங்க 152, களன பெரேரா 79, சமித் யசந்த 58/6,  நிபுண தேஷான் 96/4

ஸ்ரீ சுமங்கல கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 103 (43.4) – மதுஷிக சந்தருவன் 12/5, சஞ்சுல பண்டார 20/2, நிரஞ்சன் வன்னியாரச்சி 30/2

இசிபதன கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 103/2 (9) – ஹேஷான் பெர்னாண்டோ 69*, களன பெரேரா 40, சமித் யசந்த 23/2

முடிவு: இசிபதன கல்லூரி 8 விக்கெட்டுகளினால் வெற்றி


சாஹிரா கல்லூரி எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

நாணய சுழற்சியில் வென்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி அபாரமாக துடுப்பெடுத்தாடிய அவ்வணியின் பிரின்ஸ் பெர்னாண்டோ 108 ஓட்டங்களையும் திலான் நிமேஷ் 75 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, பிரின்ஸ் ப் வேல்ஸ் கல்லூரி 78.3 ஓவர்களில் 282 ஓட்டங்களைக் குவித்தது. சாஹிரா கல்லூரி சார்பாக சாஜித் மற்றும் மெஹ்தி நமீஸ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய சாஹிரா கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. பிரின்ஸ் ப் வேல்ஸ் கல்லூரி அணியின் பந்து வீச்சாளர்களான திலான் நிமேஷ் 3 விக்கெட்டுகளையும், தாருக பெர்னாண்டோ மற்றும் சந்துன் பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த, சாஹிரா கல்லூரி 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மொஹமட் ரிபாத் அதிகபட்சமாக 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய பிரின்ஸ் ப் வேல்ஸ் கல்லூரியினர் வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினர். அவிந்து பெர்னாண்டோ 74 ஓட்டங்களையும் திலான் நிமேஷ் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, அவ்வணி 32.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

ஆட்டம் நிறைவடைய சொற்ப ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் 302 என்ற பாரிய இலக்கை நோக்கி களமிறங்கிய சாஹிரா கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓய்வறை திரும்பினர். 8 ஓவர்களினுள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றிய மொஹமட் ஷமாஸ் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, சாஹிரா கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 96 ஓட்டங்களை பெற்றிருந்தது. பிரின்ஸ் ப் வேல்ஸ் கல்லூரி சார்பாக அஞ்சுல சஹன் 3 விக்கெட்டுகளையும் தாருக பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ்ப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 282 (78.3) – பிரின்ஸ் பெர்னாண்டோ 108, திலான் நிமேஷ் 75, சந்துன் பெர்னாண்டோ 32, சாஜித் 71/4, மெஹ்தி நமீஸ் 87/4

சாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 157 (52) – மொஹமட் ரிபாத் 36, திலான் நிமேஷ் 44/3, தாருக பெர்னாண்டோ 11/2, சந்துன் பெர்னாண்டோ 17/2

பிரின்ஸ் ப் வேல்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 176/6d (32.1) – அவிந்து பெர்னாண்டோ 74, திலான் நிமேஷ் 51, இஷான் சம்சுதீன் 67/3

சாஹிரா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 96/6 (26) – மொஹமட் ஷமாஸ் 70*, அஞ்சுல சஹன் 17/3, தாருக பெர்னாண்டோ 08/2

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. பிரின்ஸ் ப் வேல்ஸ் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


புனித சில்வெஸ்டர் கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி

தர்மராஜ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித சில்வெஸ்டர் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அவிந்து ஹேரத் (81), மனுஜ பெரேரா (72) மற்றும் மஞ்சித் ராஜபக்ஷ (41) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க, புனித சில்வெஸ்டர் கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 281 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பந்து வீச்சில் ருக்மல் திஸ்ஸாநாயக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய தர்மராஜ கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 43 ஓட்டங்களை பெற்றிருந்தது. சுழற்பந்து வீச்சாளர் சுசித் டி சொய்சா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

நாளை ,இப்போட்டியின் இரண்டாவது நாளாகும்

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி – 281/9d (76.3) – அவிந்து ஹேரத் 81, மனுஜ பெரேரா 72, மஞ்சித் ராஜபக்ஷ 41, ருக்மல் திஸ்ஸாநாயக 75/4, தேஷான் குணசேகர 21/2

தர்மராஜ கல்லூரி – 43/3 (16) – சுசித் டி சொய்சா 07/2


மலியதேவ கல்லூரி எதிர் புனித சேர்வேஷஸ் கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் மலியதேவ கல்லூரியும் புனித சேர்வேஷஸ் கல்லூரியும் மோதிக் கொண்டன. மலியதேவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித சேர்வேஷஸ் கல்லூரி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

சுபுன் சுமணரத்ன (49), சுலங்க ஹெட்டியாராச்சி (37*) மற்றும் பவித்ர லியனகே (36) ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்க, மலியதேவ கல்லூரி 254 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் அசத்திய சஷிக துல்ஷான் 73 ஓட்டங்களை வழங்கி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய புனித சேர்வேஷஸ் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களை பெற்றிருந்தது. சுபுன் காவிந்த 26 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். மலியதேவ கல்லூரி சார்பாக சஞ்சீவ பிரியங்கர 3 விக்கெட்டுளைப் பெற்றுக் கொண்டார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

மலியதேவ கல்லூரி – 254 (73.4) – சுபுன் சுமணரத்ன 49, சுலங்க ஹெட்டியாராச்சி 37*, பவித்ர லியனகே 36, சஷிக துல்ஷான் 73/6,

புனித சேர்வேஷஸ் கல்லூரி – 64/4 – (24) – சுபுன் காவிந்த 26, சஞ்சீவ பிரியங்கர 20/3