ரவீனின் அபார பந்து வீச்சினால் தோல்வியை சந்தித்த ஸாஹிரா கல்லூரி

185

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 1 (Division 1) கிரிக்கெட் தொடரின் ஸாஹிரா கல்லூரி அணியுடனான போட்டியில் புனித அலோசியஸ் கல்லூரி அணி இலகு வெற்றி ஒன்றை பதிவு செய்தது.

மருதானை, ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நேற்று (17) ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஸாஹிரா அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். எனினும் தனது சொந்த மைதானத்தில் ஆடிய ஸாஹிரா அணி தனது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களையே பெற்றது. அவ்வணியின் உப தலைவர் ரிபாத் ரிஸ்வான் அதிகபட்சாக 67 ஓட்டங்களை பெற்றதோடு யசித் நிர்மல 23 ஓட்டங்களை குவித்தார்.

சிங்கர் பிரீமியர் லீக் T20 இறுதிப் போட்டியில் டிமோ – யுனிசெல்லா

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில்…

இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹரீன் புத்தில மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவின்து சன்ஜன ஆகியோர் சிறப்பாக பந்துவீசி அலோசியஸ் அணிக்காக தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.     

இந்நிலையில் பதிலுக்கு ஆடிய புனித அலோசியஸ் கல்லூரி எதிரணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை கடந்து 206 ஓட்டங்களை குவித்தது. வலது கை துடுப்பாட்ட வீரர் பசின்து நாணயக்கார அரைச்சதம் எடுத்ததோடு ரவின்து சன்ஜன (47) மற்றும் அஷேன் பண்டார (44) ஆகியோர் அணிக்காக துடுப்பாட்டத்தில் முக்கிய பங்காற்றினர். 13 வயதுக்கு உட்பட்ட வீரரான மொஹமட் ராஹித் ஸாஹிரா அணி சார்பில் 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஸாஹிரா கல்லூரி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி 20.2 ஓவர்களில் 53 ஓட்டங்களுக்கே சுருண்டது. ஹரீன் புத்தில அபாரமாகப் பந்துவீச்சி தனது உத்திகளை பயன்படுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு இடது கை சுழற்பந்து வீச்சாளர் கவிக்க டில்ஷான் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தினுக்க லக்மால் இருவரும் இணைந்து மொத்தம் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

பின்னர் புனித அலோசியஸ் கல்லூரி அணியினருக்கு 37 ஓட்ட வெற்றி இலக்கு வழங்கப்பட்டது. அவர்கள் குறித்த ஓட்ட இலக்கை 8 விக்கெட்டுகள் கைவசம் இருக்க எட்டினர்.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி, மருதானை (முதல் இன்னிங்ஸ்) – 189 (70.3) – மொஹமட் சிபாத் 67, யசித் நிர்மல 23, மொஹமட் ஷஹதுல்லா 20, ரவின்து சன்ஜன 4/22, ஹரீன் புத்தில 4/52

புனித ஆலோசியஸ் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 206 (51.2) – ரவின்து சன்ஜன 47, அஷேன் பண்டார 44, பசின்து நாணக்கார 52, நித்மிக்க நிமேஷ் 3/54, மொஹமட் ராஹித் 4/58, இம்டியாஸ் ஸ்லாசா 2/09

ஸாஹிரா கல்லூரி, மருதானை (இரண்டாவது இன்னிங்ஸ்) 53 (20.2) – மொஹமட் ஷமாஸ் 19, ஹரீன் புத்தில 5/32, தினுக்க லக்மால் 2/15, கவிக்க டில்ஷான் 3/02

புனித ஆலோசியஸ் கல்லூரி, காலி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 39/2 (7.4)  

முடிவு புனித அலோசியஸ் கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி