புனித செபஸ்டியன் கல்லூரியுடனான போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரியின் மொஹீத் சோயிப் மற்றும் சங்கீத் சண்முகநாதன் ஆகியோரின் சிறந்த பந்து வீச்சின் மூலம் அவ்வணி 32 ஓட்டங்களால் வெற்றியை சுவீகரித்தது.
கொழும்பு ஸாஹிரா கல்லூரி எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி
கம்பளை விக்ரமபாகு மைதானத்தில் முதல் நாளாக ஆரம்பித்த இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸாஹிரா கல்லூரி முதலில் துடுப்பாடியது. அந்த வகையில், சஜித் சமீராவின் 114 ஓட்டங்களுடன், அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிறப்பாக பந்து வீசிய மஞ்சித் ராஜபக்ஷ 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனை தொடர்ந்து துடுப்பாடிய சில்வெஸ்டர் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நிறைவின்போது ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 58 ஓட்டங்களை பெற்றுள்ளது. தனுஷ்க ஜயசேகர ஆட்டமிழக்காமல் 3௦ ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.
நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
ஸாஹிரா கல்லூரி: 279 (63.4) – சஜித் சமீரா 114, முஹம்மத் ஷாஹதுல்லா 50, மஞ்சித் ராஜபக்ஷ 3/48, மனுஜா பெரேரா 2/28, தூசித் டி சொய்சா 2/45
புனித சில்வெஸ்டர் கல்லூரி: 58/1 (25) – தனுஷ்க ஜயசேகர 3௦*
டி.எஸ் சேனநாயக்க கல்லூரி எதிர் குருகுல கல்லூரி
மத்தேகொட இராணுவ மைதானத்தில் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குருகுல கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அந்த வகையில் களமிறங்கிய டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி முதல் இன்னிங்சுக்காக விஹான் குணசேகரவின் 1௦4 ஓட்டங்களின் உதவியுடன் 216 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதே நேரம், சிறப்பாக பந்து வீசிய லகிந்து அரோஷ 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி: 216 (68.1) – விஹான் குணசேகர 104, பசிந்து சானக 30, டேனியல் கீதாஞ்சன 22 *, லகிந்து அரோஷ 4/43, எம் டி நவீந்திர 4/37
குருகுல கல்லூரி: 83 / 4 (26) – தெஷான் மலிந்த 24 *, ப்ருதுவி ருசார 21
டி மெசனொட் கல்லூரி எதிர் புனித ஜோசப் வாஸ் கல்லூரி
வென்னப்புவ, ஆல்பர்ட் பீரிஸ் மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய டி மெசனொட் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 14௦ ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
கூடிய ஓட்டங்களாக மிதில கீத் 3௦ ஓட்டங்களை பதிவு செய்த அதே வேளை, சானக்க ப்ரிஷான் மற்றும் சேஹர ரணதுங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதனையடுத்து களமிறங்கிய ஜோசப் வாஸ் கல்லூரி, சேஹர ரணதுங்க ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 67 ஓட்டங்களுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்
போட்டியின் சுருக்கம்
டி மெசனொட் கல்லூரி: 140 (41.4) – மிதில கீத் 30, சானக்க ப்ரிஷான் 2/21, சேஹர ரணதுங்க 2/21, நிபுன் தனஞ்சய 2/40
புனித ஜோசப் வாஸ் கல்லூரி: 222/5 (51) – சேஹர ரணதுங்க 67*, அஞ்சன ருக்மால் 40, சந்தருவன் பெர்னாண்டோ 35, யோஹான் பிரிஸ் 31, தனுஷ்க நிரஞ்சன 32*, நிமேஷ் பண்டார 4௦/2
மஹாநாம கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி
வெஸ்லி கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்த இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மஹாநாம கல்லூரி ருசிக்க தங்கலவின் அதிரடி பந்து வீச்சில் 15.5 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 6௦ ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்லி கல்லூரி, 7௦.3 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் அவ்வணி 93 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. அணி சார்பாக கூடிய ஓட்டங்களாக ருசிக்க தங்கல 37 ஓட்டங்களைப் பதிவு செய்தார். அதே நேரம் சிறப்பாக பந்து வீசிய ஹசான் சந்தீப 63 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்
போட்டியின் சுருக்கம்
மஹாநாம கல்லூரி: 60 (15.5) – பிஷன் மென்டிஸ் 20, ருசிக்க தங்கல 5/38, சகுந்த லியனகே 3/0
வெஸ்லி கல்லூரி: 144/9 (66) – ருசிக்க தங்கல 37, ஹமோத் அதுலமுதலாளி 28, ஜேசன் டி சில்வா 27, ஹசான் சந்தீப 6/63
இசிபதன கல்லூரி எதிர் காலி மஹிந்த கல்லூரி
இரண்டாம் நாளாக தொடர்ந்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், இரு அணிகளும் இறுதிவரை விக்கெட்டுகளை இழக்காமல் கூடிய ஓட்டங்களை பெற்றுகொண்டதால், இந்த போட்டி சமநிலையில் முடிவுற்றது.
இசிபதன கல்லூரி முதல் இன்னிங்சுக்காக 7 விக்கெட்டுகளை இழந்து 313 ஓட்டங்களை பெற்ற நிலையில், பின்னர் களமிறங்கிய மஹிந்த கல்லூரி நவோத் பரணவிதான பெற்ற 88 ஓட்டங்களுடன் இன்றைய ஆட்ட நேர நிறைவின் போது 3௦௦ ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்திருந்தது.
இசிபதன அணிக்காக சிறப்பாக பந்து வீசிய ஹெஷான் பெர்னாண்டோ 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
இசிபதன கல்லூரி: 313/7 (93) – 115 சஞ்சுல அபேவிக்ரம, சஞ்சுல பண்டார 61, லேஷான் அமரசிங்க 51 *, ஹர்ஷ ரத்நாயக்க 31
மஹிந்த கல்லூரி: 300/8 (95) – நவோத் பரணவிதான 88, கவிந்து எதிரிவீர 52*, ரவிந்து ஹன்சிக 51, அஷேன் கண்டம்பி 37, ஹெஷான் பெர்னாண்டோ 3/55, அயன சிறிவர்தன 2/69, லஹிரு தில்ஷன் 2/64
போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
ஜனாதிபதி கல்லூரி, கோட்டே எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு
புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்த இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஜனாதிபதி கல்லூரி 59.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 2௦1 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிறப்பாக பந்து வீசிய ஹவின் பெரேரா 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனையடுத்து, 2௦1 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஜோசப் கல்லூரி, இன்றைய நாள் ஆட்டம் நிறைவு பெறும்பொழுது 3 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை பெற்றுள்ளது. சிறப்பாக துடுப்பாடிய தினித் ஜயகொடி 68 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தினித் மதுருவெல ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்
போட்டியின் சுருக்கம்
ஜனாதிபதி கல்லூரி: 201 (59.2) – P C விக்ரமசூரிய 57*, ஹஷான் பிரியதர்ஷன 26, கசுன் மலிங்க 31, கனிந்து தேவ்மின 28, ஹவின் பெரேரா 4/44, ஹரீன் குரே 2/47, ருச்சிர ஏக்கநாயக்க 2/27
புனித ஜோசப் கல்லூரி: 103/2 (25) – தினித் ஜயகொடி 68, தினித் மதுருவேல 58*, கமேரோன் துருகே 20, P C விக்ரமசூரிய 2/25
திரித்துவக் கல்லூரி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி
ஏற்கனவே முதல் இன்னிங்சில் 52 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாம் நாளாக இன்று துடுப்பாடிய திரித்துவக் கல்லூரி இரண்டாவது இன்னிங்சில் 3௦.1 ஓவருக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 1௦6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அந்த வகையில் வெற்றி பெற மொத்தமாக 158 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய புனித செபஸ்டியன் கல்லூரி மொஹீத் சோயிப் மற்றும் சங்கீத் சண்முகநாதன் ஆகியோரின் அதிரடி பந்து வீச்சில் 29 ஓவர்களுக்குள் 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 32 ஓட்டங்களால் தோல்வியுற்றது.
சிறப்பாக பந்து வீசிய மொஹீத் சோயிப் 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் சங்கீத் சண்முகநாதன் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் சுருக்கம்
திரித்துவக் கல்லூரி : 189 (73.1) ட்ரேவோன் பெர்சிவேல் 37, ரூவின் பீரிஸ் 30, நிமேஷ் பண்டார 5/62, ஆசேர் வர்ணகுலசூரிய 3/27
புனித செபஸ்டியன் கல்லூரி: 137 (49.4) – த்ரிஷேன் பெர்னாண்டோ 38, நிமேஷ் பண்டார 28, துலாஜ் சில்வா 26, சங்கீத் சண்முகநாதன் 6/38, விமுக்தி நேத்மல் 3/28
திரித்துவக் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 106 (30.1) – டி பானுகோபன் 29, ட்ரேவோன் பெர்சிவேல் 24, சங்கீத் சண்முகநாதன் 22, நிமேஷ் பண்டார 3/31, வானிது பெர்னாண்டோ 3/12, ஆசேர் வர்ணகுலசூரிய 2/10
புனித செபஸ்டியன் கல்லூரி: 126 (29) தருஷ பெர்னாண்டோ 34, பிரவீண் குரே 22, மொஹீத் சோயிப் 5 / 25, சங்கீத் சண்முகநாதன் 3/42, விமுக்தி நேத்மல் 2/46
போட்டி முடிவு : கண்டி திரித்துவக் கல்லூரி 32 ஓட்டங்களால் வெற்றி