தர வரிசையில் முன்னிலையில் உள்ள பேதுரு கல்லூரியை முதல் இன்னிங்சில் வெற்றிகொண்ட ரிச்மண்ட் கல்லூரி

326
U19 Schools Cricket Roundup

பாடசாலைகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ணத்துக்கான தொடரின் 5 போட்டிகள் இன்றைய தினம் நடைபெற்றன. அதில் றோயல் கல்லூரி அணியின் துடுப்பாட்ட வீரர் இன்றைய நாள் பெற்றுக்கொண்ட சதம், போட்டி முடிவற்ற நிலையில் நிறைவுற்றதால் வீணானது. அதேநேரம், தர வரிசையில் முன்னிலையில் உள்ள வலிமைமிக்க புனித பேதுரு கல்லூரியை ரிச்மண்ட் கல்லூரி 118 ஓட்டங்களால் முதல் இன்னிங்சில் வெற்றிகொண்டது.

கண்டி புனித அந்தோனியர் கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி

ஆனந்த கல்லூரி இந்த போட்டியில் பல்வேறான திறமைகளை வெளிப்படுத்தியிருந்தாலும், போதிய நேரமின்மை காரணமாக குறித்த போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. எனினும் அவ்வணி, 126 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துகொண்டது.

81 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினை இழந்த நிலையில் இன்று களமிறங்கிய அவ்வணி, தமது முதல் இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துஷான் ஹெட்டிகே மற்றும் கவிஷ்க அஞ்சுல ஆகியோர் முறையே 59 மற்றும் 76 ஓட்டங்களை பதிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய அந்தோனியர் கல்லூரி அணி, இரண்டாவது இன்னிங்சிற்காக 6 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டம் வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது. அணி சார்பாக கூடிய ஓட்டங்களாக மொஹமத் அப்சர் 63 ஓட்டங்களை பெற்றார். சிறப்பாக பந்து வீசிய திலீப்ப  ஜயலத் 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 118 (39) மொஹமத் அல்பார் 47, சுனேற ஜயசிங்க 28, மொஹமத் அப்சர் 20, திலீப்ப ஜயலத் 4/16, கவிஷ்க அஞ்சுல 2/06, சுபுன் வாரகோட 2/40

ஆனந்த கல்லூரி, கொழும்பு(முதல் இன்னிங்ஸ்) : 244/6d (48.3) துஷான் ஹெட்டிகே 76, கவிஷ்க அஞ்சுல 59, சஹன் சுரவீர 39, அசெல் சிகர 35, கவிந்து கிம்ஹான 27

புனித அந்தோனியர் கல்லூரி(இரண்டாம் இன்னிங்கஸ்) : 153/6 (23) (42) மொஹமத் அப்சர் 63, தீக்ச குணசிங்க 26 *, திலீப்ப  ஜயலத் 5/42


கொழும்பு றோயல் கல்லூரி எதிர் தர்ஸ்டன் கல்லூரி

றோயல் கல்லூரி அணி 99 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ஹெலித விதானகே சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட 115 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சுக்காக அவ்வணி 8 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

>> மொவீன் சுபசிங்கவின் அதிரடி பந்து வீச்சில் 153 ஓட்டங்களுக்கு சுருண்ட செபஸ்டியன் கல்லூரி

தர்ஸ்டன் கல்லூரி சார்பாக நவீன் குணவர்தன மற்றும் ஜனுஷ்க பெர்னாண்டோ ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி அணி 114 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மழை குறுகிட்டது. எனவே இப்போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டதால் போட்டியில் எந்த முடிவும் வழங்கப்படவில்லை.

போட்டியின் சுருக்கம்

றோயல் கல்லூரி : 312/d (91.2) – ஹெலித விதானகே 115 *, ஹிமேஷ் ராமநாயக்க 38, மதரா தல்தவ 34, ரோனுக ஜெயவர்தன 33, நவீன் குணவர்தன 3/97, ஜனுஷ்க பெர்னாண்டோ 3/50

தர்ஸ்டன் கல்லூரி: 114/7 (28 )-  உமேஷ் விறங்க  65, குஷான்  குணரத்ன 3/13


புனித பேதுரு கல்லூரி எதிர் காலி ரிச்மண்ட் கல்லூரி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. இரு அணிகளும் சமபலத்துடன் காணப்பட்டாலும் முதல் இன்னிங்சில் திறமைகளை வெளிப்படுத்திய  ரிச்மண்ட் கல்லூரி 118 ஓட்டங்களால்  முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்து கொண்டது.

ரிச்மண்ட் கல்லூரி அணியின் அதிதிய சிறிவர்தன மற்றும் கசுன் தாரக்க ஆகியோர் முறையே 71, 44 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். சந்துன் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

அதே நேரம் எதிரணியின் ஓட்டங்களை மட்டுப்படுத்திய ரிச்மண்ட் கல்லூரியின் சத்துர ஒபேசேகற 92 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி: 181/9d (92) – சந்தோஷ் குணதிலக்க 72, சிவன் பெரேரா 21, அவிந்து தீக்ஷன 5/65, தனஞ்சயன் லக்சன்  2/41, ரவிஷ்க விஜசிரி 2/35

ரிச்மண்ட் கல்லூரி: 299 (102,3) அதிதிய சிறிவர்தன 71, கசுன் தாரக்க 44, சமிக்கற ஹேவகே 42, சந்துன் மெண்டிஸ் 38*, மொஹமத் அமீன் 2/97, சத்துர ஒபேசேகற 5/92


புனித செபஸ்டியன் கல்லூரி மொறட்டுவ  எதிர் வெஸ்லி கல்லூரி

இவ்விரு அணிகளுகிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற போதிலும் முதல் இன்னிங்ஸ் வெற்றியை வெஸ்லி கல்லூரி பதிவு செய்து கொண்டது.

1௦7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்றைய நாள் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த வெஸ்லி கல்லூரி அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சிற்காகக் பெற்றுக்கொண்டது.

செபஸ்டியன் அணியின் அதிரடி பந்து வீச்சில் துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், சகலதுறை ஆட்டக்காரர் மொவீன் சுபசிங்க ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்ஸ் வெற்றிக்கு வழிவகுத்தார். அதே நேரம், வினுஜ ரணசிங்க 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய செபஸ்டியன் கல்லூரி அணியினர் 69.5 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 27௦ ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டம் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 153 (34.1) – நிமேஷ் பண்டார 76, மலிந்த பீரிஸ் 41, ருசிக்க தங்கல்ல 3/25, மொவீன் சுபசிங்க 6/43

வெஸ்லி கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 161 (69.5) – மொவீன் சுபசிங்க 61*, ஷாமோத் அதுலமுதலாளி 28, சகுந்த லியனகே 17, வினுஜ ரணசிங்க 3/64, ஆசேர் வர்ணகுலசூரிய 2/24

புனித செபஸ்டியன் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) : 270/9 (36) துலாஜ் சாலிக்க 52, நிமேஷ் பண்டார 76, அசார் வர்ணகுலசுரிய 38, தருஷ பெர்னாண்டோ 32, மொவீன் சுபசிங்க 5/90, சகுந்த லியனகே 43/2


நாலந்த கல்லூரி எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

நாலந்த கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நாலந்த கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி, தமது சொந்த மண்ணில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரின் அதிரடி பந்து வீச்சினால் 52.3 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. மலிங்க அமரசிங்க  கூடிய ஓட்டங்களாக 38 ஓட்டங்களைப் பதிவு செய்தார். அதேநேரம், சிறப்பாக பந்து வீசிய திலன் நிமேஷ் மற்றும் நாணயக்கார ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து மூன்றாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, இன்றைய நாள் அட்ட நேர நிறைவின்போது 26 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 9௦ ஓட்டங்களை பெற்றுள்ளது. திலான் நிமேஷ் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.

நாளை இந்தப் போட்டியின் இரண்டாவது தினமாகும்.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி: 175 (52.3) – மலிங்க அமரசிங்க 38, அவிஷ்க பெரேரா 33, கழன பெரேரா 26, சுகன்க விஜவர்தன 22, திலன் நிமேஷ் 3/66, கமல் நாணயக்கார 3/19

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி : 29 / 1 (6)


மொறட்டு வித்தியாலயம் எதிர் அநுராதபுர மத்திய கல்லூரி

இவ்விரு அணிகளுக்கிடயிலான போட்டி சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டது.