சவிந்து, சதுரங்கவின் சிறப்பாட்டத்தால் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் வெற்றி

249

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதின் கீழ் டிவிசன் 1 பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகள் இன்று நிறைவுற்றன.

திருத்துவக் கல்லூரி, கண்டி எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற திருத்துவக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது.  

விஷ்வ சதுரங்கவின் சதத்தினால் வலுவடைந்துள்ள பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

சிங்கர் நிறுவன அனுசரணையில்…

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித ஜோசெப் கல்லூரி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய கண்டி வீரர்கள் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டனர். அவிஷ்க சேனாதீர 64 ஓட்டங்களை அதிகமாகப் பெற்றார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்களைப் பெற்ற வேளை போட்டி சமநிலையில் முடிவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

திருத்துவக் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 195/10 (61.4) ஹசிந்த ஜயசூரிய 88, அசேன் டேனியல் 7/44,

புனித ஜோசெப் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 165/10 (44.3) லக்ஷான் கமகே 68, ட்ரேவேன் பெர்சிவேல் 3/35, ருவின் பீரிஸ் 3/46, விமுக்தி நேதுமால் 3/53

திருத்துவக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 211/8d (51.3) அவிஷ்க சேனாதீர 64, ட்ரேவேன் பெர்சிவேல் 54, அசேன் டேனியல் 4/66, லக்ஷான் கமகே 2/38

புனித ஜோசெப் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 131/4 (37) ரெவென் கெல்லி 63, ஜொஹான் டி சில்வா 29, விமுக்தி நேதுமால் 2/39

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவை

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் சொந்த மைதானத் தரப்பினர் இன்னிங்ஸ் மற்றும் 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பேதுரு கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி விஷ்வ சதுரங்கவின் சதத்தின் உதவியுடன் தமது முதல் இன்னிங்ஸுக்காக 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது. பேதுரு கல்லூரியின் அமீன் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

திமுத் கருணாரத்ன – கௌஷால் ஜேடியினால் மற்றொரு இரட்டைச்சத இணைப்பாட்டம்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும்…

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி அணி 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தொல்வியடைந்தது. பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் சாவிந்து பீரிஸ் 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 124/10 (42.2) ரன்மத் ஜயசேன 26, ஹிமல்ஷ பெர்னாண்டோ 22, நாணயக்கார 5/30, நடுக பெர்னாண்டோ 2/21

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 299/8d (59.2) விஷ்வ சதுரங்க 125, சவிந்து பீரிஸ் 38, மொஹமட் அமீன் 5/116, ருவின் செனவிரத்ன 2/50.

புனித பேதுரு கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 164/10 (64.1) ரன்மித் ஜயசேன 51, சிவான் பெரேரா 30*, சவிந்து பீரிஸ் 6/63, நாணயக்கார 3/62

முடிவு – பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.  


ஸாஹிரா கல்லூரி, மருதானை எதிர் மலியதேவ கல்லூரி, குருநாகல்

ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நேற்று  ஆரம்பமான இப்போட்டியில் மலியதேவ கல்லூரி அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சொந்த மைதான வீரர்கள் முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்ஸில் 84 ஓட்டங்களுக்கே சுருண்டனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மலியதேவ அணி முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய ஸாஹிரா கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது. யசித் நிர்மல 40 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்னர் 116 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மலியதேவ கல்லூரி அணி 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கினை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 84/10 (27.5) தில்சார சமிந்த 33, மதுரங்க நவீன் 3/30, துலாஜ் ரணதுங்க 2/00, சுபுன் நிஸ்ஸங்க 2/11

மலியதேவ கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 152/10 (38.2) சஞ்ஜீவன் பிரியதர்சன 48, ரித்மிக நிமேஷ் 3/24, அரவிந்த் ராஜேந்திர 3/37.

ஸாஹிரா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 183/10 (54.1) யசித் நிர்மல 40, அரவிந்த் ராஜேந்திர 38, பசிந்து தென்னகோன் 3/26, நிசன்ஜய ஹெட்டியாராச்சி 2/25, துலாஜ் ரணதுங்க 2/70   

மலியதேவ கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 116/5 (23.5) கவீன் பண்டார 38*, துலாஜ் ரணதுங்க 22, ரித்மிக நிமேஷ் 3/42.

முடிவு – மலியதேவ கல்லூரி அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி.

இளையோர் உலகக் கிண்ணத்திலிருந்து இலங்கை அணி வெளியேற்றம்

19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண…

ஏனைய போட்டிகளின் முடிவுகள்   

றோயல் கல்லூரி, கொழும்பு எதிர் ஆனந்த கல்லூரி, கொழும்பு

றோயல் கல்லூரி (முதலாது இன்னிங்ஸ்) – 212/10 (53.3) பசிந்து சூரியபண்டார 69, தேவிந்து சேனாரத்ன 45, தாமின்த ரிஷான் 4/27, அசெல் சிஜேரா 3/59.

ஆனந்த கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 286/9d காமேஷ் நிர்மல 59, கவிந்து கிம்ஹான 56, லஹிரு ஹிரண்ய 50, கயான் திசாநாயக 3/27, காமில் மிஷாரா 2/22.

றோயல் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 300/5 (64.3) பசிந்து சூரியபண்டார 104, கமில் மிஷாரா 62, கயான் திசாநாயக 60, தமிந்த ரிஷான் 2/84.

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது  


வெஸ்லி கல்லூரி, கொழும்பு எதிர் புனித தோமியர் கல்லூரி, கல்கிஸை

வெஸ்லி கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 276/10 (80) திசுரக அக்மீமன 91, ஷேனால் தங்கல்ல 61, சகுந்த லியனகே 34, ஷனோன் பெர்னாண்டோ 7/66.

புனித தோமியர் கல்லூரி (முதலாம் இன்னிங்ஸ்) – 227/10 (64) மலீஷ ரூபசிங்ஹ 47, டெல்லோன் பீரிஸ் 35, சரிந்த பக்மீவெவ 3/48, மொஹமட் உபைதுல்லா 3/52

வெஸ்லி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 117/7d தேனுக்க பெரேரா 50*, டெல்லோன் பீரிஸ் 3/45.

புனித தோமியர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 88/2 (10) சிதார ஹபுஇன்ன 38. மோவின் சுபசிங்ஹ 2/24

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது