சிங்கர் கிண்ண காலிறுதியில் தர்ஸ்டன் மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அணிகள்

725
Singer U19 Schools Cricket

டிவிஷன் – I (19 வயதுக்குட்பட்ட) பாடசாலை அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ”சிங்கர் கிண்ண” தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு தர்ஸ்டன் மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிகள் தகுதி பெற்றுள்ளன.

தர்ஸ்டன் கல்லூரி எதிர் டீ.எஸ் சேனநாயக்க கல்லூரி

இவ்விரு அணிகளுக்கு இடையிலான காலிறுதிக்கு முன்னைய சுற்றின் போட்டி தர்ஸ்டன் கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியது. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தர்ஸ்டன் கல்லூரி சரண நாணயக்கார, இமேஷ் விரங்க மற்றும் யெஷான் விக்கிரமாரச்சி ஆகியோரின் சிறப்பாட்டத்துடன், 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாமில் பல மாற்றங்கள்

சரண நாணயக்கார மொத்தமாக, 92 ஓட்டங்கள் விளாசி சதத்தினை தவறவிட்டதுடன், இமேஷ் விரங்க ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களினையும், யெஷான் விக்கிரமாரச்சி 56 ஓட்டங்களினையும் குவித்துக்கொண்டனர்.

பந்து வீச்சில், டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் டேனியல் கீதாஞ்சன  இரண்டு விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

பின்னர், சீரற்ற காலநிலை காரணமாக, 285 ஓட்டங்களாக மாற்றப்பட்ட வெற்றியிலக்கினை 42 ஓவர்களில்  அடைவதற்கு களமிறங்கிய டீ.எஸ் சேனநாயக்ககல்லூரி அணி, 116 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்துதர்ஸ்டன் கல்லூரியிடம் படுதோல்வியடைந்தது.

 

டீ.எஸ் சேனநாயக்க கல்லூரி சார்பாக, அதிகபட்சமாக கிஹான் குணசேகர 36 ஓட்டங்களைப் பெற்றதோடு, தர்ஸ்டன் கல்லூரியில் சிறப்பாக செயற்பட்ட வலது கை பந்து வீச்சாளர் நிப்புன் லக்ஷன் வெறும் 3 ஓட்டங்களுக்கு  3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி – 293/4 (50) சரண நாணயக்கார 92, இமேஷ் விரங்க 67*, யெஷான் விக்கிரமராச்சி 56, டேனியல் கீதாஞ்சன 61/2

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி – 116 (31) கிஹான் குணசேகர 36, நிப்புன் லக்ஷன் 3/03

போட்டி முடிவு – தர்ஸ்டன் கல்லூரி 169 ஓட்டங்களால் வெற்றி (பரபோல  முறை மூலம்)

இப்போட்டியில் வெற்றி பெற்றதன் காரணமாக, தர்ஸ்டன் கல்லூரி அணி இத்தொடரில் காலிறுப் போட்டியில் விளையாடும் தகுதியினைப் பெற்றுக்கொள்கின்றது.


புனித பேதுரு கல்லூரி எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

பேதுரு கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பித்த இப்போட்டியில், நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய புனித பேதுரு கல்லூரி, லக்ஷின ரொட்ரிகோ (87) மற்றும் ரன்மித் ஜயசிங்க (52) ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன், 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களினை குவித்துக்கொண்டது.  

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் பந்து வீச்சில், டிலங்க மதுரங்க மூன்று விக்கெட்டுகளையும், சஞ்சய பெர்னாந்து இரண்டு விக்கெட்டுகளையும் தமது அணிக்காக வீழ்த்தியிருந்தனர்.

இங்கிலாந்து லயன்ஸை வீழ்த்தி தொடரை சமப்படுத்திய இலங்கை A அணி

இப்போட்டியிலும் சீரற்ற காலநிலை நிலவியதால் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட (36 ஓவர்களிற்கு) 204 ஓட்டங்களை, 30.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களினை  இழந்து 205 ஓட்டங்களுடன் அடைந்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி தொடரின் அடுத்தகட்டமான காலிறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளில் ஒன்றாகதெரிவாகியது.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில், ஏற்கனவே பந்து வீச்சிலும் சிறப்பித்திருந்த திலங்க மதுரங்க அரைச் சதம் கடந்து 57 ஓட்டங்களினை விளாசியதோடு, இலங்கை கனிஷ்ட அணி வீரர் விஷ்வ சதுரங்கவும் அரைச் சதம் (56) கடந்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி – 239/9 (50) லக்ஷின ரொட்ரிகோ 87, ரன்மித் ஜயசிங்க 52, சலித் பெர்னாந்து 46, டிலங்க மதுரங்க 3/45, சஞ்சய பெர்னாந்து 2/21

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி – 205/6 (30.2) டிலங்க மதுரங்க 57, விஷ்வ சத்துரங்க 56, ரவிந்து சில்வா 2/54

போட்டி முடிவு பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 4 விக்கெட்டுக்களால் வெற்றி (பரபோல  முறை மூலம்)