பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட டிவிசன் l கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவடைந்த போட்டியொன்றில் கொழும்பு புனித பேதுரு கல்லூரி மிகவும் சிறந்த முறையில் 9 விக்கெட்டுக்களினால் வெற்றியைக் கைப்பற்றியுள்ளது.

இன்று ஆரம்பமாகிய மற்றொரு போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை பெறும் நிலையில் நாலந்த கல்லூரி உள்ளது.

புனித பேருது கல்லூரி எதிர் கேகாலை புனித மரியார் கல்லூரி

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று கம்பளை விக்ரமபாகு விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பேதுரு கல்லூரி அணித்தலைவர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை எதிரணிக்கு வழங்கினார்.

அதன்படி முதல் இன்னிங்சில், எதிரணியின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் சவாலுக்குள்ளாகிய புனித மரியார் கல்லூரி அணி, முதல் இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதற்குப் பதில் ஆடிய புனித பேதுரு கல்லூரி வீரர்கள் நேற்றைய ஆட்ட நேர முடிவின்போது, 3 விக்கெட்டுகளை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில் அவ்வணி இன்று தமது ஆட்டத்தைத் தொடர்ந்தது.

மலியதேவ மற்றும் மகாநாம கல்லூரிகள் முதல் இன்னிங்சில் வெற்றி!

தமது அணி வீரர்களின் ஓரளவான சிறப்பாட்டத்தின் காரணமாக அவ்வணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக மனெல்க 79 ஓட்டங்களையும், சாலித் 77 ஓட்டங்களையும் அதிகபடியாகப் பெற்றனர்.

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த கேகாலை புனித மரியார் கல்லூரி அணியினர் எதிர் தரப்பின் அபாரமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 72 ஓட்டங்களுக்குள் சுருண்டனர்.

அவ்வணியின் எந்தவொரு வீரர்களையும் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற விடாமல் தடுக்கும் வகையில் பந்து வீச்சில் அமீன் 4 விக்கெட்டுகளையும், சசின் மற்றும் ஒபேசேகர ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின்னர் வெற்றிக்கான புனித பேதுரு கல்லூரி அணிக்கு வெறும் ஒரு ஓட்டமே தேவைப்பட்டது. எனினும் அந்த இலக்கை அடைவதற்குள் அவ்வணி ஒரு விக்கெட்டினையும் இழந்தது. எனவே, போட்டி நிறைவில் அவ்வணி 9 விக்கெட்டுகளினால் வெற்றி கொண்டது.

முதல் இன்னிங்ஸ்

புனித மரியார் கல்லூரி – 151 (50.4): கஜித கோட்டவேகோட 33, மிப்ளால் அமீன் 4/41, சத்துர ஒபேசேகர 3/46, சச்சின் சில்வா 3/19.

புனித பேதுரு கல்லூரி – 223 (64.2) – மனெல்க தி சில்வா 79, சாலித் ப்ரனாந்து 77, லசித உதாகே 4/61

இரண்டாவது இன்னிங்ஸ்

புனித மரியார் கல்லூரி – 72 (44.2) – சன்ஜே ரன்ஜித் 28*, அமீன் 4/30, சசின் சில்வா 3/18, சதுர உபேசேகர 3/21

புனித பேதுரு கல்லூரி – 04/1

போட்டி முடிவு – புனித பேதுரு கல்லூரி 9 விகெட்டுக்களினால் வெற்றி


கொழும்பு நாலந்த கல்லூரி எதிர் பன்னிபிடிய தர்மபால வித்தியாலயம்

A குழுவிற்கான இந்தப் போட்டி இன்று கொழும்பு நாலந்த கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நாலந்த கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி அக்கல்லூரி வீரர்கள் மிகவும் அழகாக செயற்பட்டு, 65 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ஓட்டங்களைக் குவித்ததும் தமது துடுப்பாட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

சிறந்த முறையில் எதிரணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட அவிஷ்க பெரேரா சதம் கடந்து 109 ஓட்டங்களைக் குவித்தார். பந்து வீச்சில் மஹிம வீரகோன் மாத்திரம் அதிகபடியாக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்சினைத் தொடர்ந்த தர்மபால கல்லூரி, நாலந்த கல்லூரியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியமையினால் இன்றைய ஆட்ட முடிவின்போது 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 65 ஓட்டங்களையே பெற்றது.

இதன்படி இப்போட்டியை வெற்றி கொள்வதற்கு தர்மபால கல்லூரி கடுமையாகப் போராட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது.

நாளை போட்டியின் இரண்டாவது மற்றும் இறுதி நாளாகும்.

நாலந்த கல்லூரி – 307/6 d (65) – அவிஷ்க பெரேரா 109, தசுன் செனவிரத்ன 48, கசுன் சந்தரருவன் 45, மஹிம வீரகோன் 3/89

தர்மபால கல்லூரி – 65/6 (28)