10 விக்கெட்டுகளால் ஜனாதிபதி கல்லூரியை வீழ்த்திய ஜோசப் வாஸ் கல்லூரி

158

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 2017/2018 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் டிவிஷன் 1 பாடசாலைகளுக்கு இடையிலான தொடரின் 4 போட்டிகள் இன்று நடைபெற்றன.

ஜனாதிபதி கல்லூரி, கோட்டை எதிர் ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவை

கொடிகமுவ MB மைதனத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நடைபெற்ற இப்போட்டியில் ஜோசப் வாஸ் கல்லூரி அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜனாதிபதி கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து113 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ஜோசப் வாஸ் கல்லூரி அணி யொஹான் பீரிஸின் சதத்தின் உதவியுடன் 320 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

வீரர்களின் திறமைக்குதான் வெற்றி கிடைத்தது என்கிறார் ஹத்துருசிங்க

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ஜனாதிபதி கல்லூரி அணி 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்க, ஜோசப் வாஸ் கல்லூரி அணி வெற்றி இலக்கான 6 ஓட்டங்களை எவ்வித விக்கெட் இழப்புமின்றி அடைந்தது

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி, கோட்டை (முதலாவது இன்னிங்ஸ்) – 113 (32.3) – தசித நிர்மால் 23, அகில ரொஷான் 22, கனிஷ்க நாணயக்கார 6/42, நஜீத் மதுஷங்க 2/14, தினேத் பெர்னாண்டோ 2/46

ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவை (முதலாவது இன்னிங்ஸ்) – 320/8d (71.4) – யொஹான் பீரிஸ் 112*, கனிஷ்க நாணயக்கார 55, சொஹான் அனுருத்த 45, மதுவந்த தர்மவர்தன 22, ஹசிந்து ரஹமுக 4/106, ரிபாஸ் மஹ்ரூப் 2/37

ஜனாதிபதி கல்லூரி, கோட்டை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 207 (49.5) – ரிபாஸ் மஹ்ரூப் 53, ரசித லக்மால் 34, கனிது தெவ்மின 36, ஹிருன சிகேரா 28, தனஞ்சய பெரேரா 4/56, கனிஷ்க நாணயக்கார 3/66

ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 6/0 (0.1)

முடிவு – ஜோசப் வாஸ் கல்லூரி அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் ஆனந்த கல்லூரி, கொழும்பு

புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆனந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித பேதுரு கல்லூரி அணிக்கு வழங்கியது.

இதன்படி பேதுரு கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி அணி  இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 128 (44.1) – முஹமட் அமீன் 22, தினேத் நிஸ்ஸங்க 4/34, அசெல் சிகெரா 3/14, கிஹான் விஸ்வஜித் 2/02

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 169/7 (49) – கனிஷ்க ரன்திலககே 51, கவிந்து கிம்ஹான் 26, ஷமால் ஹிரூஷன் 25*, முஹமட் அமீன் 3/59, சந்துஷ் குணதிலக 2/36   


புனித அலோசியஸ் கல்லூரி, காலி எதிர் திரித்துவக் கல்லூரி, கண்டி

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அலோசியஸ் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

ஷெஹான் மதுஷங்க சுதந்திர கிண்ணத்தில் விளையாடுவது சந்தேகம்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் திரித்துவக் கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 130 (47) – அஷேன் பண்டார 49, ரவிந்து சஞ்சன 26, எம். நெதுமால் 4/43, ஹசித போயகொட 3/24, R. டில்ஷான் 2/18   

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 151/9 (46) – H ஜயசூரிய 37, A லொகுகேடிய 37, ஹசித போயகொட 25, அபிஷேக் ஆனந்தகுமார 25, கவிக டில்ஷான் 4/50, ஹரீன் புத்தில 2/27


குருகுல கல்லூரி, களனி எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை

புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இன்று இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய குருகுல கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 353 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

குருகுல கல்லூரி, களனி (முதலாவது இன்னிங்ஸ்) – 353/7 (97) – மலிந்து விதுரங்க 88*, கேமிர நயனதறு 65, பத்தும் மகேஷ் 65, லிக்‌ஷான் பஸ்ஸங்க 54, நுவன் சானக 23, லசிந்து அரோஷ 20, கவிந்து மதுக்க 3/43  

மூன்று போட்டிகளினதும் இரண்டாவதும் இறுதியுமான நாள் ஆட்டம் நாளை தொடரும்.