சன்சஜன், சாரங்கனின் அரைச்சதங்களுடன் மத்திய கல்லூரிக்கு வெற்றி

U19 Schools Cricket 2022

400

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கு எதிராக இன்று (14) நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 3 ஐம்பது ஓவர்கள் கொண்ட போட்டியில் யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

டெஸ்ட் தொடரில் இலங்கையை வைட்வொஷ் செய்த இந்திய அணி

அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் 20 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும், ஸ்ரீதரன் சாரங்கன், மதீஷ்வர் சன்சஜன் ஆகியோர் அரைச்சதங்களை பதிவுசெய்து தலா 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மத்தியக் கல்லூரி அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்ந்தது.

பின்னர், களமிறங்கிய கஜன் அரைச்சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்டாலும் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, 46.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்களை மத்தியக் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது. புனித பத்திரிசியார் கல்லூரி சார்பாக K.சாருஷன் 37 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சவாலான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி ஆரம்பத்திலிருந்து தடுமாறியது. ஓட்டங்களின்றி தங்களுடைய முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்ததுடன், தொடர்ச்சியாக விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வந்தது.

மத்தியவரிசையில் சமிந்தன் 21 ஓட்டங்களையும், P.மதுசன் 16 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தும் 36.3 ஓவர்கள் நிறைவில் 97 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ரஞ்சித்குமார் நியூட்டன் 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், நிஷாந்தன் அஜய் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சுருக்கம்

யாழ். மத்தியக் கல்லூரி – 243/10 (46.5), சன்சஜன் 58, சாரங்கன் 58, K.சாருஷன் 37/5

புனித பத்திரிசியார் கல்லூரி – 97/10 (36.3), சமிந்தன் 21, P.மதுசன் 16, நியூட்டன் 24/5, அஜய் 16/3

முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<