அநுராதபுர மத்திய கல்லூரியை வீழ்த்திய சென். ஜோன்ஸ் அணி

709
St. John's College vs Anuradhapura Central College

19 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு-2 (Division 2) பாடசாலை அணிகள் பங்கெடுக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இன்று (9) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி, அநுராதபுர மத்திய கல்லூரி அணியினை 16 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>> புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ள மெர்லிபோன் கிரிக்கெட் கழகம்

சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மைதானச் சொந்தக்கார அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றுக் கொண்டனர்.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மைதானச் சொந்தக்கார அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி ஆரம்பத்தில் தடுமாற்றம் காட்டி ஒரு கட்டத்தில் 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் அவ்வணிக்காக அன்டர்சன் சச்சின் கணபதி மற்றும் அன்டன் அபிஷேக் ஆகிய இரு வீரர்கள் மாத்திரமே சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இறுதியில் 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 165 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்திற்காக எடுத்தது.

>> குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணையும் குர்பாஸ்

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் பூர்த்தி செய்த அணித்தலைவர் அன்டன் அபிஷேக் 59 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 51 ஓட்டங்களை எடுத்திருந்தார். மறுமுனையில் ஆரம்பத் துடுப்பாட்டவீரராக களம் வந்த சச்சின் கணபதி 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் அநுராதபுர அணியின் பந்துவீச்சு சார்பாக ஹரித்த தயின்த 3 விக்கெட்டுக்களையும், யொசோத் சன்கலன மற்றும் கவின்த கெளசான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 166 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய அநுராதபுர மத்திய கல்லூரி சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் தடுமாறியதோடு 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 149 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவினர்.

அநுராதபுர மத்திய கல்லூரியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காட்டியிருந்த திலின காமோதீப்ப 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அவர் மட்டுமே அவ்வணிக்காக தனி வீரராக துடுப்பாட்டத்தில் போராடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> ஜிம்பாப்வே அணியின் புதிய தலைவர்களாக எர்வின், சீன் வில்லியம்ஸ்

மறுமுனையில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சில் யோகதாஸ் விதுஷன் 4 விக்கெட்டுக்களைச் சாய்த்தும், கிரூபானந்தன் கஜகர்ணன் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

சென்.ஜோன்ஸ் கல்லூரி – 165 (48.3) அண்டர்சன் சச்சின் கணபதி 42, அன்டன் அபிஷேக் 51, ஹரித்த தயின்த 20/3, யொசோத் சன்கலன 22/2, கவின்த கெளசான் 32/2

அநுராதபுர மத்திய கல்லூரி – 149 (47.2) திலின சமோதீப்ப 77, யோகதாஸ் விதுஷன் 16/4, கிருபானந்தன் கஜகர்ணன் 21/3

முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி 16 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<