பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்று போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் தர்ஸ்டன் கல்லூரி

தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரி அணிகள் மோதிக்கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தர்ஸ்டன் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அஷான் பெர்னாண்டோ 91 ஓட்டங்களையும் சச்சிந்து கொலம்பகே 82 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 255 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. பந்து வீச்சில் தர்ஸ்டன் கல்லூரியின் சரண நாணயக்கார, நவீன் குணவர்தன மற்றும் குசல் ஆதித்ய ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

கவிந்து மதரசிங்கவின் சதத்தால் றோயல் கல்லூரி வலுவான நிலையில்

அடுத்து களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி இன்றைய ஆட்ட நேர முடிவின்போது 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையிலுள்ளது.

போட்டியின் சுருக்கம்  

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 255 (67.1) – அஷான் பெர்னாண்டோ 91, சச்சிந்து கொலம்பகே 82, சரண நாணயக்கார 3/48, நவீன் குணவர்தன 3/80, குசல் ஆதித்ய 3/37

தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 57/4 (17.5) – உமேஷ் விரங்க 32, பசிந்து உஷெட்டி 2/04


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் மஹாநாம கல்லூரி

இதேவேளை குழு ‘B’ இற்கான போட்டியொன்றில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியை எதிர்த்து மஹாநாம கல்லூரி விளையாடியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, அவிந்து பெர்னாண்டோ (87) மற்றும் சந்துன் பெர்னாண்டோ (86) ஆகியோரின் அபார ஆட்டத்தின் உதவியுடன் 296 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. மஹாநாம அணி சார்பில் விஹான் முதலிகே 3 விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொண்டார்.

அனுலா வித்தியாலயத்தை வீழ்த்தி மீண்டும் சம்பியன் பட்டத்தை வென்ற தேவபதிராஜ கல்லூரி

தொடர்ந்து ஆடுகளம் பிரவேசித்த மஹாநாம கல்லூரி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும்போது 1 விக்கெட் இழப்பிற்கு 48 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 296 (75.4) – அவிந்து பெர்னாண்டோ 87, சந்துன் பெர்னாண்டோ 86, திலான் நிமேஷ் 41, விஹான் முதலிகே 3/38, நிதுக வெளிகள 2/42, ஹேஷான் ஹெட்டியாரச்சி 2/42

மஹாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 48/1 (17)


இசிபதன கல்லூரி எதிர் கண்டி வித்யார்த்த கல்லூரி

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான நட்பு ரீதியான போட்டி இன்று கண்டியில் ஆரம்பமானது.  

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இசிபதன கல்லூரி சார்பாக அயன சிறிவர்தன திறமையை வெளிக்காட்டியிருந்தார். அசத்தலாக துடுப்பெடுத்தாடிய அவர் 134 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், லேஷான் அமரசிங்க ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதன்படி இசிபதன கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 329 ஓட்டங்களை பெற்று இன்றைய தினத்திற்கான ஆட்டத்தை நிறைவு செய்து கொண்டது. பந்து வீச்சில் வித்யார்த்த கல்லூரியின் இசுரு பிரபோத மற்றும் நிபுண குமாரசிறி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 329/9 (77) – அயன சிறிவர்தன 134, லேஷான் அமரசிங்க 68*, கலன பெரேரா 42, இசுரு பிரபோத 2/46, நிபுண குமாரசிறி 2/59

நாளை போட்டிகளின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.