இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்த புனித அந்தோனியார், திரித்துவக் கல்லூரிகள்

197

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – I பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (13) ஐந்து போட்டிகள் முடிவடைந்தது.

தர்மராஜ கல்லூரி, கண்டி எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி

கண்டி மாவட்டத்தின் இரண்டு பாடசாலைகள் மோதிய இந்தப் போட்டியில் புனித அந்தோனியார் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் தர்மராஜ கல்லூரி அணியை வீழ்த்தியது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய தர்மராஜ கல்லூரி வீரர்கள் 118 ஓட்டங்களை மாத்திரமே முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்டனர். இதன் பின்னர் தம்முடைய முதல் இன்னிங்சில் ஆடிய மைதான சொந்தக்காரர்கள் தீஷன் குணசிங்க பெற்ற சதத்துடன் 35 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர்.  

ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க 39 இலங்கை வீரர்கள் விண்ணப்பம்

புனித அந்தோனியார் கல்லூரி அணியின் முதல் இன்னிங்சை அடுத்து 112 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் காணப்பட்டவாறு இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த தர்மராஜ கல்லூரி 87 ஓட்டங்களை மாத்திரமே குவித்து இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 118 (59.1) – இசுரு தயானன்த 53, தனுக ரத்நாயக 17*, நவோத்ய விஜயகுமார 6/43, ஜனிது ஹிமசர 2/07

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 230/4d (35) – தீக்ஷன் குணசிங்க 101*, நவோத்ய விஜயகுமார 72, தியோன் கவிந்து 44, உபேந்திர வர்னகுலசுரிய 2/37

தர்மராஜ கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 87 (30.2) – ஜனிது ஹிம்சார 3/09, நவோத்ய விஜயகுமார 3/29

முடிவு – புனித அந்தோனியார் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் வெற்றி


திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

வெஸ்லி கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் முடிவடைந்த இந்தப் போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்களால் மைதான சொந்தக்காரர்களை தோற்கடித்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய வெஸ்லி கல்லூரி வீரர்கள் அவர்களது முதல் இன்னிங்சில் 85 ஓட்டங்களுடனேயே சுருண்டனர். பின்னர்  தம்முடைய முதல் இன்னிங்சில் ஆடிய திரித்துவக் கல்லூரி வீரர்கள் புபுது பண்டாரவின் அரைச்சதத்தின் உதவியுடன் 63 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை குவித்திருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர்.

பின்னர் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 139 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய வெஸ்லி கல்லூரி வீரர்கள் 127 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தோல்வியைத் தழுவினர். விமுக்தி நெதுமல் 5 விக்கெட்டுக்களை இந்த இன்னிங்சில் கைப்பற்றி திரித்துவக் கல்லூரி வீரர்களை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 85 (13.5) – ருவீன் பீரிஸ் 5/29, திரவோன் பெர்சிவேல் 5/56

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 224/8d (63) – புபுது பண்டார 69, கவிஷ்க சேனாதீர 43*, ராகுல் குணசேகர 2/34

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்) – 127 (38.5) – மொவின் சுபசிங்க 40, விமுக்தி நெதுமல் 5/35

முடிவு – திரித்துவக் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்களால் வெற்றி


ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் புனித தோமியர் கல்லூரி, கொழும்பு

கொழும்பின் இரண்டு பாடசாலை அணிகளான புனித தோமியர் கல்லூரியும், ஆனந்த கல்லூரியும் மோதிய இப்போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்களை இழந்து 261 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சில் ஆடிய ஆனந்த கல்லூரி வீரர்கள் மந்தமான முறையில் ஓட்டங்களைக் குவித்து 86.3 ஓவர்களில் 182 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தனர். லஹிரு ஹிரன்ய அரைச்சதம் ஒன்றை ஆனந்த கல்லூரி சார்பாக பெற்றிருந்தார்.

இதனையடுத்து 73 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய தோமியர் கல்லூரி 2 விக்கெட்டுக்களை இழந்து 68 ஓட்டங்களை சேர்த்திருந்த போது ஆட்டத்தின் நிறைவு நேரம் வந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 261/9d (85.3) மந்தில விஜேரத்ன 61, சலின் டி மெல் 50, கிஷான் முனசிங்க 48, ஷமால் ஹிருஷன் 3/25, சமிக்க குணசேகர 3/63

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 182 (86.3) – லஹிரு ஹிரன்ய 66, ஷமால் ஹிருஷன் 33*, கனிஷ்க ரண்திலக்க 32, டெவின் எர்ரியகஹ  3/12

புனித தோமியர் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்) – 68/2 (25)

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


ஸாஹிரா கல்லூரி, மருதானை எதிர் டி மெசனொட் கல்லூரி, கந்தானை

கொழும்பு ஸாஹிரா மற்றும் கந்தானை டி மெசனொட் கல்லூரிகள் இடையிலான இப்போட்டி சமநிலை அடைந்தது.

அபினாஷின் சகலதுறை ஆட்டத்தினால் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு மற்றொரு வெற்றி

போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸாஹிரா வீரர்கள் தங்களது முதல் இன்னிங்சில் 202 ஓட்டங்களினை குவித்தனர். இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்சில் ஆடிய மெசனொட் கல்லூரி வீரர்களுக்கு 179 ஓட்டங்களையே போட்டியின் இரண்டாம் நாளில் பெற முடிந்தது. பசிந்து சசங்க அதிகபட்சமாக 62 ஓட்டங்களை மெசனொட் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் குவித்திருந்தார். மறுமுனையில், ஸாஹிரா கல்லூரி சார்பாக வலதுகை சுழல் வீரர் அரவிந்த் ராஜேந்திரன் வெறும் 14 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிரணியினை விட சிறிய (23) முன்னிலையில் தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி 226 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

ஸாஹிரா கல்லூரியின் இந்த இன்னிங்சில் தில்ஷார சமிங்க 71 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி, மருதானை (முதல் இன்னிங்ஸ்) – 202 (81.1) – அரவிந்த் ராஜேந்திரன் 48, மொஹமட் றிசாத் 33, சாலிய ஜூட் 3/71, நிகில கீத் 2/34

டி மெசனொட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 179 (60.3) – பசிந்து சசங்க 62, சாலிய ஜுட் 40, அரவிந்த் ராஜேந்திரன் 6/14

ஸாஹிரா கல்லூரி, மருதானை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 226/8 (49) – டில்ஷார சமிங்க 71, ப்ரவீன் பொன்சேக்கா 2/33

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் றோயல் கல்லூரி, கொழும்பு

SSC மைதானத்தில் முடிவடைந்த றோயல் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரி அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பாடிய புனித ஜோசப் கல்லூரி அணியினர் 178 ஓட்டங்களையே குவித்தனர். பதிலுக்கு தமது முதல் இன்னிங்சில் துடுப்பாடிய றோயல் கல்லூரி பசிந்து சூரியபண்டார மற்றும் கவிந்து மதரசிங்க ஆகியோரின் அரைச்சதங்களுடன் 82.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 307 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் காணப்பட்டிருந்த போது துடுப்பாட்டத்தை முடித்துக் கொண்டது.

சொஹான், பிரனீத்தின் சிறந்த பந்து வீச்சினால் விமானப்படை அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

பின்னர் 129 ஓட்டங்கள்  பின்தங்கிய நிலையில் ஜோசப் கல்லூரி தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பம் செய்து 139 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பின்னர் ஆட்டத்தின் முடிவு நேரமும் வந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

றோயல் கல்லூரி அணியின் மனுல பெரேரா இப்போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 178 (49.2) – நிப்புன் சுமணசிங்க 48, துனித் வெல்லால்கே 47, மனுல பெரேரா 6/26, சரல குணதிலக 2/31

றோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 307 /6d (82.4) – பசிந்து சூரியபண்டார 87, கவிந்து மதரசிங்க 77, பாக்ய திசாநாயக்க 41, பிமல் விஜேசேகர 40, நிப்புன் சுமணசிங்க 3/42

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்) – 139 (50) லக்ஷான் கமகே 47, நிபுன் சுமணசிங்க 38, மனுல பெரேரா 3/50

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.