இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்த தோமியர், செபஸ்டியன் கல்லூரிகள்

184

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் கீழ் 8 போட்டிகள் இன்று (09) நிறைவுக்கு வந்தன. இதில் மாத்தறை புனித தோமியர், மொரட்டுவை புனித செபஸ்டியன் மற்றும் கொழும்பு தர்ஸ்ட்டன் ஆகிய கல்லூரிகள் வெற்றிகளைப் பதிவு செய்தன.

தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை

செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த தர்மாசோக கல்லூரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 76 ஓட்டங்களையே முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சில் செபஸ்டியன் கல்லூரி கல்லூரியினர் நுவனிது பெர்ணான்டோவின் அரைச்சதத்தின் உதவியால் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 321 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

 

>> தர்ஸ்ட்டன், மஹாநாம மற்றும் செபஸ்டியன் கல்லூரிகள் முதல் நாளில் ஆதிக்கம் <<

 

இதனையடுத்து 245 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்சுக்காக தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தர்மாசோக கல்லூரி வீரர்கள் 199 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர். தர்மாசோக கல்லூரி சார்பாக உஷான் இமந்த 92 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

தர்மாசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 76 (34) – சமிந்து டில்ஷான் 24, பிரவீன் ஜயவிக்ரம 4/23, தாசிக் பெரேரா 2/17

புனித செபஸ்டியன் கல்லூரி – 321 (60.4) – நுவனிது பெர்ணான்டோ 55, பிரவீன் குரே 46, ஷெனால் பெர்ணான்டோ 42, மலிந்த பீரிஸ் 42, தருஷ பெர்ணான்டோ 33, நிமேஷ் மெண்டிஸ் 3/36, சன்ஜன மெண்டிஸ் 3/59, கவிந்து நதீஷான் 3/98

தர்மாசோக கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 199 (65) – உஷான் இமந்த 92, ரவிந்து ரஷந்த 45, தருஷ பெர்ணான்டோ 6/67, பிரவீன் ஜயவிக்ரம 2/68

முடிவு – புனித செபஸ்டியன் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்களால் வெற்றி


 

மலியதேவ கல்லூரி, குருநாகல் எதிர் தர்ஸ்ட்டன் கல்லூரி, கொழும்பு

மலியதேவ கல்லூரி மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் தர்ஸ்ட்டன் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 135 (33.5) – சலக அத்தபத்து 42, பிரையன் கருணாநாயக்க 41, யெஷான் விக்ரமாரச்சி 5/26, பிமர ரணதுங்க 3/31

தர்ஸ்ட்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 313/9d (61) – நிபுன் லக்‌ஷான் 107*, நிமேஷ் பெரேரா 57, பவந்த ஜயசிங்க 51, யெஷான் விக்ரமாரச்சி 27, பசிந்து தென்னகோன் 2/40

மலியதேவ கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 179 (48.1) – முதித்த பிரேமதாஸ 45, ஷாலுக அத்தபத்து 38, சுபுன் சுமனரத்ன 24, நிபுன் லக்‌ஷான் 3/20, ஷலக பண்டார 2/29

முடிவு – தர்ஸ்ட்டன் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் வெற்றி


 

பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

மாத்தறை உயன்வத்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மலீஷ டி சேரம் மற்றும் சினெத் சிதார ஆகியோரின் அபார பந்துவீச்சு மூலம் பண்டாரநாயக்க கல்லூரியை இன்னிங்ஸ் மற்றும் 106 ஓட்டங்களால் புனித தோமியர் கல்லூரி அணி தோல்வியடையச் செய்தது.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 70 (28.5) – ஹசித திமால் 29, மலீஷ டி சேரம் 5/23, சினெத் சிதார 3/08

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 206/7d (33) – மிஹிசல் அமோத 78, ஹிரந்த லக்‌ஷான் 66, மலீஷ டி சேரம் 30*, சஹிரு ரொஷேன் 2/17, அரோஷ மதுஷான் 2/38, ஹச்சித திமால் 2/45

பண்டாரநாயக்க கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 30 (9.1) – சினெத் சிதார 5/03, லஹிரு டில்ஷான் 4/06

முடிவு – புனித தோமியர் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 106 ஓட்டங்களால் வெற்றி


 

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு

புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் நிறைவுக்கு வந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி வீரர்கள் 7 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களினை முதல் இன்னிங்சில் குவித்து தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டனர். பேதுரு கல்லூரி சார்பாக ஷனோன் பெர்ணான்டோ (77) மற்றும் ரன்மித் ஜயசேன (58) அரைச் சதங்களைப் பெற்றுக்கொடுத்து வலுச்சேர்த்தனர்.

>> பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இலங்கைக்கு அதிக வாய்ப்பு <<

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய புனித பெனடிக்ட் கல்லூரி வீரர்களுக்கு 179 ஓட்டங்களளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி, 7 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இதன்படி 187 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய புனித பெனடிக்ட் கல்லூரி, 4 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

பந்துவீச்சில் புனித பேதுரு அணியின் மொஹமட் அமீன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 259/7d (61) – ஷனோன் பெர்ணான்டோ 77, ரன்மித் ஜயசேன 58, ஷிவான் பெரேரா 37*, பிருத்வி ஜகராஜசிங்கம் 2/40, இந்திக வீரசிங்க 2/58, மஹீஷ தீக்ஷன 2/78

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 179 (71.4) – ஷெஹான் பெர்ணான்டோ 50, கவிஷ்க ஜயதிலக 27, நிசல்க பெர்ணான்டோ 31*, மொஹமட் அமீன் 5/71, சச்சின் சில்வா 3/43

புனித பேதுரு கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 107/7d (15) – ஷனோன் பெர்ணான்டோ 40, மஹீஷ தீக்ஷன 3/23, கவிஷ்க ஜயதிலக 2/19

புனித பெனடிக்ட் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 150/4 (41) – மஹீஷ தீக்ஷன 50, சனில்க நிர்மால் 35*, மொஹமட் அமீன் 4/66

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.


 

புனித ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை எதிர் இசிபதன கல்லூரி, கொழும்பு

அயன சிறிவர்தனவின் சகலதுறை ஆட்டத்தால் புனித ஜோன்ஸ் கல்லூரிக்கு எதிராக முன்னிலை பெற்ற இசிபதன கல்லூரி, முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் போட்டியை சமநிலையில் முடித்தது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 179 (62) – பிரவீன் சந்தமால் 56*, பசன் பெரேரா 42, ருக்‌ஷான் திஸாநாயக்க 20, அஷான் தில்ஹார 20, மதுஷிக சந்தருவன் 4/35, அயன சிறிவர்தன 3/37, இஷான் பெர்ணான்டோ 2/17

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 196/9d (69.1) – அயன சிறிவர்தன 56, சஞ்சுல பண்டார 32, சுமுது உதார 3/24, தமிந்து விக்ரமாரச்சி 3/53

புனித ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 151 (49.5) – பிரவீன் சந்தமால் 47*, சச்சின் தனஞ்சய 20, மதுஷிக சந்தருவன் 5/55, அயன சிறிவர்தன 4/56

இசிபதன கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 17/4 (5) – தமிந்து விக்ரமாரச்சி 3/12

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.


 

புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை எதிர் புனித மரியாள் கல்லூரி, கேகாலை

கஜித கொடுவேகொடவின் சதம் சஜீவ ரஞ்சித்தின் அபார பந்துவீச்சின் உதவியுடன் புனித அந்தோனியார் கல்லூரிக்கு எதிராக முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற புனித மரியாள் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் போட்டியை சமநிலையில் முடித்தது.

>> மீண்டும் இவ்வருடம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் T-20 <<

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 174 (39.1) – சங்க மதுபாஷன 69, ஹரிந்த பசிந்து 26, கவீஷான் துலாஞ்ச 21, சஜீவ ரஞ்சித் 5/69, இஷான் வீரசூரிய 2/13

புனித மரியாள் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 338 (69.1) – கஜித கொடுவேகொட 134, திமிர குமார 64, அரவிந்த பசிந்து 5/28

புனித அந்தோனியார் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 233 (62) – சங்க மதுபாஷன 52, அவிஷ்க தரிந்து 47, சஜீவ ரஞ்சித் 4/92, திமிர குமார 3/53, இஷான் வீரசூரிய 2/49

புனித மரியாள் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 47/2 (6) – மீனத் வலிசிங்ஹ 25*, ஹரிந்து பசிந்து 2/21

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.


 

மஹாநாம கல்லூரி, கொழும்பு எதிர் மாரிஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு

மஹாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 250 (91) – சொனால் தினூஷ 123*, பவந்த வீரசிங்க 31, பெதும் பொதேஜு 23, பசிந்து உசேட்டி 4/68, ரவிந்து பெர்ணான்டோ 3/61, அவீஷ கேஷான் 2/37

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 65 (32.3) – கெவின் பெரேரா 26, ஹஷான் சந்தீப 4/16

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 203/5 (62) – லசித் குரூஸ்புள்ளே 92, கெவின் பெரேரா 42, ஷெஹான் மலீஷ 39, சொனால் தினூஷ 2/36

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.


 

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 299/7d (70) – ஜெஹான் டேனியல் 77, நிபுன் சுமனசிங்க 63, தினெத் ஜயகொடி 53, கல்ஹார சேனாரத்ன 3/79

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 289 (75.4) – ஜசிந்து ஹிம்சர 84, நவோத்ய விஜயகுமார 56, கவிந்து ஸ்டௌடர் 40, கல்ஹார சேனாரத்ன 39, துனித் வெல்லாலகே 4/104, மிராங்க விக்ரமகே 2/19, அஷேன் டேனியல் 2/54

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 162/3 (42) – ரெவான் கெல்லி 63, நிபுன் சுமனசிங்க 46*, ஷெவான் ரசூல் 37, கல்ஹார சேனாரத்ன 2/65

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.