விஷ்வ சதுரங்கவின் சதத்தினால் வலுவடைந்துள்ள பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

203

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட டிவிஷன் 1 பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின்  போட்டிகள் இன்றும் நடைபெற்றன.

திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது. ஹசிந்த ஜயசூரிய 88 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஜோசப் கல்லூரியின் அஷேன் டேனியல் 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 195 (61.4) – ஹசிந்த ஜயசூரிய 88, ட்ரேவோன் பெர்சிவேல் 28, அஷேன் டேனியல் 7/44, துணித் வெல்லாலகே 2/41

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 122/8 (34) – லக்ஷான் கமகே 30*, வினேத் ஜயக்கொடி 22, ட்ரேவேன் பெர்சிவேல் 3/35, விமுக்தி நெதுமல் 2/27


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பேதுரு கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது. ரன்மித் ஜயசேன 26 ஓட்டங்களைப் பெற்றதுடன் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் கௌமால் நாணயக்கார 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

சகீப் அல் ஹஸனின் சகலதுறை ஆட்டத்தினால் இலங்கைக்கு படுதோல்வி

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ஓட்டங்களைப் பெற்றது. விஷ்வ சதுரங்க 125 ஓட்டங்களைப் பெற்றதுடன் புனித பேதுரு கல்லூரியின் மொஹமட் அமீன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 124 (42.2) – ரன்மித் ஜயசேன 26, ஹிமல்ஷ பெர்னாண்டோ 22, கௌமால் நாணயக்கார 5/30, நடுக பெர்னாண்டோ 2/21

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 282/5 (51) -விஷ்வ சதுரங்க 125, சவிந்து பீரிஸ் 38, சந்துன் பெர்னாண்டோ 27, மொஹமட் அமீன் 3/108, ருவின் செனவிரத்ன 2/50


ஸாஹிரா கல்லூரி, மருதானை எதிர் மலியதேவ கல்லூரி, குருநாகல்

ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸாஹிரா கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மலியதேவ கல்லூரியின் மதுரங்க நவீன் 3 விக்கெட்டுக்களையும் துலாஜ் மற்றும் சுபுன் நிஸ்சங்க தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலியதேவ கல்லூரி அணி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணியின் சஞ்ஜீவன் பிரியதர்ஷன 48 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஸாஹிரா கல்லூரியின் ரித்மிக நிமேஷ் மற்றும் அரவிந்த் ராஜேந்திர தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் ஸாஹிரா கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி, மருதானை (முதலாவது இன்னிங்ஸ்) – 84 (27.5) – தில்சார சமிந்த 33, மதுரங்க நவீன் 3/30, துலாஜ் ரணதுங்க 2/00, சுபுன் நிஸ்சங்க 2/06

மலியதேவ கல்லூரி, குருநாகல் (முதலாவது இன்னிங்ஸ்) – 152 (38.2) – சஞ்ஜீவன் பிரியதர்ஷன 48, ரித்மிக நிமேஷ் 3/24, அரவிந்த் ராஜேந்திர 3/37

ஸாஹிரா கல்லூரி, மருதானை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 86/5 (24) – ரித்மிக நிமேஷ் 21


ஏனைய போட்டிகளின் முடிவுகள்….

இசிபதன கல்லூரி, கொழும்பு எதிர் புனித மரியாள் கல்லூரி, கேகாலை

இசிபதன கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 306/7d (82) – சஞ்சுல அபேவிக்கிரம 69, சஞ்சுல பண்டார 60, அயான சிறிவர்தன 58, இஷான் வீரசூரிய 3/100, தினேஷ் பெதியகோட 2/41

புனித மரியாள் கல்லூரி, கேகாலை (முதலாவது இன்னிங்ஸ்) – 198 (64.5) – கஜித கொடுவேகோட 100, மதுஷிக சந்தருவன் 5/39, சஞ்சுல பண்டார 3/31

புனித மரியாள் கல்லூரி, கேகாலை (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 145/6 (43) – சுஜித் குமார 53, சச்சின் பொன்சேகா 40, அயன சிறிவர்தன 4/41

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. முதல் இன்னிங்சின் அடிப்படையில் இசிபதன கல்லூரி வெற்றி.


ரோயல் கல்லூரி, கொழும்பு எதிர் ஆனந்த கல்லூரி, கொழும்பு

முதலாம் நாள்

ரோயல் கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 212 (53.3) – பசிந்து சூரியபண்டார 69, தெவிந்து சேனாரத்ன 45, தமிந்த ரிஷான் 4/27, அசெல் சிகேரா 3/59

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 164/5 (39) – கவிந்து கிம்ஹான 56*, துஷான் ஹெட்டிகே 36, நிமல் வீரசேகர 2/36

>> அஷேன், சச்சித்ரவின் சதத்தால் சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு இமாலய ஓட்டங்கள்


வெஸ்லி கல்லூரி, கொழும்பு எதிர் புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை

முதலாம் நாள்

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 276 (80) – திசுரக அக்மீமன 91, ஷேனால் தங்கல்ல 61, சகுந்த லியனகே 34. ஷனோன் பெர்னாண்டோ 7/66

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதலாவது இன்னிங்ஸ்) – 54/2 (16)


மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 112 (51.5) துலக்ஷன் பெர்டினாண்டோ 30, சிநேத் சிதார 7/31

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (முதலாவது இன்னிங்ஸ்) – 149 (79.1) – வோசித்த அமரசிங்ஹ 55, தருஷ கவிந்த 34, ஜீவந்த பெர்னாண்டோ 5/52

மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 51 (28.1) – சசித்திர ரஷ்மிக 4/15, சிநேத் சித்தார 2/15

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 15/2 (4.2)   

முடிவு – புனித தோமியர் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் வெற்றி.