இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டில் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கிட்டத்தட்ட 150 இற்கும் மேலான இளம் கிரிக்கெட் வீரர்கள் பங்கெடுக்கும் இந்த தொடரில் இலங்கையின் மாகாணங்கள் 10 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த 10 அணிகளும் A, B என இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன
நடைபெறும் போட்டிகளின் அடிப்படையில் இரண்டு குழுக்களிலும் முதலிடத்தினைப் பெறும் அணிகள் ஜூன் 23 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும்.
இந்த கிரிக்கெட் தொடரில் சப்ரகமுவ மாகாணத்தை தவிர இலங்கையின் அனைத்து மாகாணங்களும் பங்கேற்கின்றன. இதேவேளை, மேல் மாகாணம் மூன்று அணிகளாக போட்டிகளில் மோதுகின்றது.
குழு A | குழு B |
மேல் மாகாணம் (வடக்கு) | மேல் மாகாணம் (தெற்கு) |
வட மாகாணம் | கிழக்கு மாகாணம் |
மத்திய மாகாணம் | தென் மாகாணம் |
வட மத்திய மாகாணம் | மேல் மாகாணம் (மத்தி) |
வட மேல் மாகாணம் | ஊவா மாகாணம் |
கடந்த ஆண்டு இடம்பெற்ற மாகாண அணிகளுக்கு இடையிலான இந்த ஒரு நாள் தொடரில் தனஞ்சய லக்ஷான் தலைமையிலான தென் மாகாண அணி மேல் மாகாண (தெற்கு) அணியினை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் இந்தியாவின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இலங்கை அணியில் இணைவதற்கு இத்தொடர் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தரவுள்ளது.
அத்தோடு, இலங்கையின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலகரட்னவுக்கும், தேசிய அணியின் தேர்வாளர்களுக்கும் புதிய திறமைகளை இனங்கண்டு கொள்ள ஒரு சந்தர்ப்பமும் இத்தொடரின் மூலம் உருவாகியுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் 2017/18 ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான பாடசாலை கிரிக்கெட் தொடரில் விளையாடியவர்களாக இருத்தல் அவசியமாகும்.
இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான பிரன்டன் குருப்பு இத்தொடரின் நிறைவேற்று இயக்குனராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான தொடரில் சச்சின் மகன் அர்ஜூனுக்கு வாய்ப்பு
போட்டி அட்டவணை
ஜூன் 12
மேல் மாகாணம் (வடக்கு) எதிர் வட மாகாணம் – தர்ஸ்ட்டன் கல்லூரி மைதானம்
மத்திய மாகாணம் எதிர் வட மேல் மாகாணம் – சிலாபம் மேரியன்ஸ் கழக மைதானம் (நேரலை)
ஜூன் 13
மேல் மாகாணம் தெற்கு எதிர் ஊவா மாகாணம் – சிலாபம் மேரியன்ஸ் கழக மைதானம் (நேரலை)
கிழக்கு மாகாணம் எதிர் மேல் மாகாணம் – தர்ஸ்ட்டன் கல்லூரி மைதானம்
ஜூன் 14
மேல் மாகாணம் (வடக்கு) எதிர் மத்திய மாகாணம் – கோல்ட்ஸ் மைதானம்
வட மாகாணம் எதிர் வட மத்திய மாகாணம் – NCC மைதானம் (நேரலை)
ஜூன் 15
மேல் மாகாணம் (தெற்கு) எதிர் கிழக்கு மாகாணம் – NCC மைதானம் (நேரலை)
ஊவா மாகாணம் எதிர் தென் மாகாணம் – சிலாபம் மேரியன்ஸ் கழக மைதானம்
ஜூன் 16
மேல் மாகாணம் (வடக்கு) எதிர் வட மேல் மாகாணம் – கோல்ட்ஸ் மைதானம் (நேரலை)
மத்திய மாகாணம் எதிர் வட மத்திய மாகாணம் – சிலாபம் மேரியன்ஸ் கழக மைதானம்
ஜூன் 17
மேல் மாகாணம் (தெற்கு) எதிர் தென் மாகாணம் – சிலாபம் மேரியன்ஸ் கழக மைதானம்
ஊவா மாகாணம் எதிர் மேல் மாகாணம் – கோல்ட்ஸ் மைதானம் (நேரலை)
ஜூன் 18
மேல் மாகாணம் (வடக்கு) எதிர் வட மத்திய மாகாணம் – NCC மைதானம் (நேரலை)
வட மாகாணம் எதிர் வட மேல் மாகாணம் – தர்ஸ்ட்டன் கல்லூரி மைதானம்
ஜூன் 19
கிழக்கு மாகாணம் எதிர் தென் மாகாணம் – NCC மைதானம் (நேரலை)
மேல் மாகாணம் (தெற்கு) எதிர் மேல் மாகாணம் (மத்தி) – தர்ஸ்ட்டன் கல்லூரி மைதானம்
ஜூன் 20
வட மாகாணம் எதிர் மத்திய மாகாணம் – CCC மைதானம் (நேரலை)
வட மத்திய மாகாணம் எதிர் வட மேல் மாகாணம் – சிலாபம் மேரியன்ஸ் கழக மைதானம்
6 போட்டிகளுக்காக பங்களாதேஷ் செல்லும் இலங்கை “A” அணி
ஜூன் 21
கிழக்கு மாகாணம் எதிர் ஊவா மாகாணம் – சிலாபம் மேரியன்ஸ் கழக மைதானம்
தென் மாகாணம் எதிர் மேல் மாகாணம் – CCC மைதானம் (நேரலை)
ஜூன் 23
இறுதிப் போட்டி – CCC மைதானம் (நேரலை)
குறிப்பு – மேலே நேரலை எனக்குறிப்பிடப்பட்டிருக்கும் இத்தொடரின் போட்டிகளை ThePapare.com நேரடி அஞ்சல் (Live Broadcast) செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நேரடி அஞ்சல் செய்யப்படும் போட்டிகளை எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து டயலொக் தொலைக்காட்சி சேவையின் அலைவரிசை 1 இலும், டயலொக் MyTV இலும், ThePapare.com இணையத்தளம் ஊடாகவும் காணமுடியும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<