புனித பத்திரிசியார் – யாழ் மத்தி மோதல் சமநிலையில்

632

இலங்கை பாடசாலை அணிகளுக்கிடையிலான சிங்கர் கிண்ணத்திற்கான பிரிவு-3 கிரிக்கெட் தொடரின் குழு நிலை போட்டியில், குழு E இல் அங்கம் வகிக்கும் யாழ்கு இடையிலான மோதலில் எதிரணி பந்துவீச்சாளர்களது அச்சுறுத்தலை தகர்த்த மத்திய கல்லூரி அணியினர் ஆட்டத்தை சமநிலைப்படுத்தியதுடன், முதல் இன்னிங்ஸ் வெற்றியையும் பெற்றனர்.  

இலங்கையின் ஓட்ட இயந்திரமாக உருவெடுத்து வரும் பெதும் நிஸ்ஸங்க

அண்மைக் காலமாக இலங்கை அணி பெற்றுக்கொண்ட …

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சொந்த மைதான தரப்பினர்  முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்திருந்தனர்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய மத்திய கல்லூரி அணியினர் முன்வரிசையில் இயலரசன் 63 ஓட்டங்களையும், இளைய வீரர் சாரங்கன் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க பலமானதொரு ஓட்ட எண்ணிக்கையினை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.

எனினும், புனித பத்திரிசியார் கல்லூரியின் டக்ளஸ் டனீசியஸ் விரைவாக விக்கெட்டுகளை சாய்க்க மத்திய கல்லூரிக்கு, மத்திய வரிசையில் ராஜ் கிளின்டன் பெற்றுக்கொடுத்த 24 ஓட்டங்களுடன் 162 ஓட்டங்களையே பெற முடிந்தது.

பந்துவீச்சில் டனீசியஸ் 5 விக்கெட்டுகளையும், பொயிட்டர் கஸ்ரோ மற்றும் மொனிக் நிதுசன் முறையே 3, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.     

பின்னர், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி மத்திய கல்லூரி வீரர்களது பந்துவீச்சிற்கு தடுமாறிய போதும், சகலதுறை வீரர் மொனிக் நிதுசன் தனியொருவராக பெற்றுக்கொடுத்த 40 ஓட்டங்களுடன் 98 ஓட்டங்களையே  பெற்றுக்கொண்டது.

Photo Album : Jaffna Central College vs St Patrick’s College Singer U19 Division 3 – Level 1 Cricket Tournament

பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட்ட இயலரசன் 5 விக்கெட்டுகளையும், பிரவீன்ராஜ் மற்றும் வியாஸ்கான்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து 64 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸினை ஆரம்பித்திருந்த யாழ் மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்ட வீரர்களை மொனிக் நிதுசன் தனது பந்துவீச்சால் அச்சுறுத்தினார். எனினும், ஜெயதர்சனினது 68 ஓட்டங்களின் உதவியுடன் யாழ் மத்திய கல்லூரி அணியினர் ஆட்ட நேர விறைவின் போது 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்றிருந்தனர். புனித பத்திரிசியார் கல்லூரிக்காக  வேகப்பந்து வீச்சாளர் மொனிக் நிதுசன் 6 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.   

இதனால், போட்டி சமநிலையில் நிறைவிற்கு வர, முதலாவது இன்னிங்ஸில் முன்னிலை பெற்றிருந்த யாழ் மத்திய கல்லூரி அணியினர் புள்ளிகளடிப்படையில் வெற்றியினை தமதாக்கினர்.

குழுவிலே ஐந்தாவது இறுதியுமான போட்டியினையும் வெற்றியுடன் நிறைவுசெய்த மத்திய கல்லூரி அணியினர், 2 இன்னிங்ஸ் வெற்றிகள் 3 முதலாவது இன்னிங்ஸ் வெற்றிகள் உள்ளடங்கலாக குழுவில் முதலாவது இடத்திலுள்ளனர்.

அதேபோன்று, ஒரு இன்னிங்ஸ் வெற்றி, ஒரு முதலாவது இன்னிங்ஸ் வெற்றி மற்றும் இரண்டு முதலாவது இன்னிங்ஸ் தோல்விகள் உள்ளடங்கலாக ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் புனித பத்திரிசியார் கல்லூரியினர் இரண்டாவது இடத்திலுள்ளனர்.  

ஜப்னா சுப்பர் லீக் கிண்ணத்தை தமதாக்கிய வேலணை வேங்கைகள்

யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட்டினை மக்கள் மயப்படுத்தும்…

அடுத்தடுத்த இடங்களை ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மற்றும் யாழ் இந்துக் கல்லூரி அணியினர் தக்கவைத்துள்ளனர்.

யாழ் மத்திய கல்லூரி, புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணிகள் அடுத்த சுற்றுக்கு தமது இடத்தினை உறுதிசெய்துள்ள நிலையில் யாழ் இந்துக் கல்லூரியும் தமது இடத்தினை உறுதிசெய்யும் பட்சத்தில்,  விலகல் சுற்றிற்கு இந்நான்கு அணிகளும் தகுதிபெறும்  என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிச்சுருக்கம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 162 (90.1) – இயலரசன் 63, ராஜ்கிளின்டன் 24, சாரங்கன் 24, டனீசியஸ் 5/41, கஸ்ரோ 3/29, மொனிக் நிதுசன்  2/39  

புனித பத்திரிசியார் கல்லூரி 98 (34.2) – மொனிக் நிதுசன் 40, இயலரசன் 5/34, பிரவீன்ராஜ் 2/08, வியாஸ்காந் 2/22

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 144/8 (64) – ஜெயதர்சன் 68, மொனிக் நிதுசன் 6/53 

போட்டி முடிவுபோட்டி சமநிலையடைந்தது (முதலாவது இன்னிங்ஸ் முன்னிலைக்கான புள்ளிகளை  யாழ் மத்திய கல்லூரிபெற்றது)