பாடசாலை அணிகள் பங்குபற்றும் 19 வயதிற்கு உட்பட்ட டிவிஷன் I கால்பந்து தொடரில் இவ்வருடத்திற்கான சம்பியனாக புனித ஜோசப் கல்லூரி தெரிவாகியுள்ளது. இறுதிப் போட்டியில் களுத்துறை திருச் சிலுவைச் கல்லூரி அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியதன்மூலமே இவர்கள் சம்பியனாக முடிசூடுகின்றனர்.
நடப்புச் சம்பியனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது திருச் சிலுவைக் கல்லூரி அணி
பாடசாலை அணிகள் பங்குபற்றும் 19 வயதிற்கு உட்பட்ட டிவிஷன் I கால்பந்து போட்டித்தொடரில் இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன்
மொறகஸ்முல்ல மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த இறுதிப் போட்டியின் ஆரம்பத்தில் ஜோசப் வீரர் அசேல மதுஷான் ஓரிரு வாய்ப்புக்களைப் பெற்றாலும் அவற்றை முழுமையாக நிறைவு செய்வதற்கான வாய்ப்பினை எதிரணியின் பின்கள வீரர்கள் அவருக்கு வழங்காமல் தடுத்தனர்.
குறிப்பாக போட்டியின் 14ஆவது நிமிடத்தில் மதுஷான் சிறந்த முறையில் பல வீரர்களைக் கடந்து பந்தைக் கொண்டுசென்று, இறுதியாக கோல் கம்பங்களுக்குள் உதையும் பொழுது தவறுவிட்டார். எனவே ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு அவர் ஏமாற்றம் கொடுத்தார்.
எனினும் அடுத்த நிமிடம் அதற்கு பதில் வழங்கும் வகையில் அவர் தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார். எனவே போட்டியின் 15ஆவது நிமிடத்தின் பின்னர் புனித ஜோசப் கல்லூரி முன்னிலை அடைந்தது.
பின்னர் 23ஆவது நிமிடம் திருச் சிலுவை கல்லூரி அணியின் முன்னணி வீரர் ஒரு கோலைப் பெற்றுக் கொடுத்தார். எனினும் அவர் ஓப் சைட் இருந்ததாக எல்லைகளில் இருக்கும் நடுவர் சைகை காண்பித்தமையினால் அது கோலாக கருதப்படவில்லை.
எனினும் 28ஆவது நிமிடம் திருச்சிலுவைக் கல்லூரிக்கு ஓவ்ன் கோல் மூலம் முதலாவது கோல் கிடைத்தது. ஜோசப் அணியின் கோல் காப்பாளர் பந்தைப் பிடிப்பதற்கு ஓடி வந்துகொண்டிருக்கும்பொழுது, சக வீரர் மயுரக பெரேரா பந்தை தலையால் முட்டியதும் அது கோல் கம்பங்களுக்குள் சென்றது.
முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி (01) – (01) திருச் சிலுவைக் கல்லூரி
இரண்டாவது பாதியில் 45ஆவது நிமிடத்தில் ஜோசப் கல்லூரிக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைக்க அந்த உதையை அசேல மதுஷான் பெற்றார். எனினும் அவர் வேகமாக உதைந்த பந்து மிகவும் உயர்ந்து சென்றது.
அதன் பின்னரும் ஜோசப் கல்லூரி வீரர்களுக்கு பல கோணர் உதை வாய்ப்புகள் கிடைத்தும் அதனை அவர்கள் கோலாக மாற்றிக்கொள்ளவில்லை. இரண்டாவது பாதியில் முன்னிலை பெறுவதற்காக இரு தரப்பினரும் கடுமையாக மோதியமை மைதானத்தில் இருந்த பார்வையாளர்களுக்கு சிறந்த போட்டியைக் காண்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியது.
மீண்டும் பெனால்டியில் வீழ்ந்த ஹமீத் அல் ஹுசைனி : இறுதிப் போட்டியில் ஜோசப் கல்லூரி
ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அணியை பெனால்டியில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் வீழ்தியதன்மூலம் புனித ஜோசப் கல்லூரி அணி பாடசாலை கால்பந்து அணிகள் பங்குபற்றும் 19 வயதிற்கு உட்பட்ட டிவிஷன் I
ஜோசப் வீரர் அமில தனஞ்சய தனக்குக் கிடைத்த பந்தை கோல்களை நோக்கி நேரே வேகமாக உதைய, அது ஒரு பக்க கம்பங்களுக்கு சற்று தொலைவினால் வெளியே சென்றது. இரண்டாவது பாதியில் இவ்வாறான பல வாய்ப்புக்களை அவர்கள் தவறவிட்டனர்.
எனினும் போட்டியின் 62ஆவது நிமிடத்தில் ஜோசப் வீரர் அமில தனஞ்சய அணிக்கான 2ஆவது கோலைப் பெற்றார். தனக்கு கிடைத்த பந்தை அவர், நீண்ட தூரத்தில் இருந்து நேரடியாக கோல்களுக்குள் உதைய அது குறி தவறாமல் இலக்கை அடைந்தது.
70 நிமிடங்கள் கடந்த நிலையில் சசித்ர மதுரங்க நீண்ட தூரம் பந்தை எடுத்துச் சென்று இறுதியாக கோல் காப்பாளைத் தாண்டி அடித்த பந்து இலக்கு தவறி கம்பங்களுக்கு சற்று அண்மித்த வகையில் வெளியில் சென்றது.
பின்னர் இரு தரப்பும் பலவகையான முயற்சிகளை செய்தும் யாராலும் எந்த கோல்களையும் பெற முடியாமல் போனது.
இறுதியில் போட்டியின் நிறைவுக்கான விசிலை நடுவர் ஊத, ஜோசப் கல்லூரி ஆதரவாளர்கள் வெற்றியை மைதானத்தில் கொண்டாடினர்.
முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி (00) – (00) திருச் சிலுவைக் கல்லூரி
கோல்கள் பெற்றவர்கள்
புனித ஜோசப் கல்லூரி
அசேல மதுஷான் 15’, அமில தனஞ்சய 62’
திருச் சிலுவைக் கல்லூரி
மயுரக பெரேரா 28“ (OG)
Thepapare.com இன் ஆட்ட நாயகன் – அசேல மதுஷான் (புனித ஜோசப் கல்லூரி)
போட்டியின் பின்னர் thepapare.com இடம் பிரத்யேகமாகக் கருத்து தெரிவித்த சம்பியன் அணியான புனித ஜோசப் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர் சம்பத்,
”இன்று மிகவும் சிறந்த ஒரு நாள். ஒவ்ன் கோல் ஒன்று சென்றாலும் இரண்டாவது பாதியில் நாம் நம்பிக்கையுடன் சிறந்த முறையில் விளையாடினோம். பலம்மிக்க திருச் சிலுவைக் கல்லூரி அணியை நாம் சிறந்த முறையில் எதிர்கொண்டோம்” என்றார்.
இரண்டாம் இடத்தைப் பெற்ற திருச் சிலுவைக் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர் கருத்து தெரிவிக்யைில்,
”எமது வீரர்கள் பலர் காயத்தில் இருந்தனர். எனினும் சிறந்த திறமையை வெளிப்படுத்தினர். அதுபோன்று எதிரணியில் இருந்த முக்கிய மூன்று வீரர்கள் திருச் சிலுவைக் கல்லூரி உருவாக்கிய வீரர்கள். எவ்வாறிருப்பினும் அடுத்த முறை நாம் இதனை விட சிறப்பாக செயற்படுவோம்” என்றார்.