அதிரடி பந்துவீச்சால் ஜனாதிபதி கல்லூரியை வீழ்த்திய ஸாஹிரா கல்லூரி

293

கொழும்பு ஸாஹிரா கல்லூரி தனது அதிரடி பந்துவீச்சு மூலம் ஜனாதிபதி கல்லூரிக்கு எதிரான சிங்கர் அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட முதலாம் பிரிவு போட்டியில் 185 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றுக் கொண்டது.

தனது சொந்த மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (10) ஆரம்பமான இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் ஸாஹிரா கல்லூரி துடுப்பாட்டத்தில் ஸ்திரமான ஓட்டங்களை பெற்றதோடு பந்துவீச்சில் அதிரடியாக செயற்பட்டு ஜனாதிபதி கல்லூரியை இரண்டாவது இன்னிங்ஸில் முழுமையாக வீழ்த்தியது.

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 8ஆவது இடத்தை தக்கவைத்து ஓய்வு பெற்ற ஹேரத்

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில்…

இதன்போது ஜனாதிபதி கல்லூரிக்கு 208 ஓட்டங்களை ஸாஹிரா கல்லூரி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. எனினும் ஜனாதிபதி கல்லூரி துடுப்பாட்ட வீரர்களை ஸாஹிரா பந்துவீச்சாளர்கள் வெறுமனே 22 ஓட்டங்களுக்கு சுருட்டினர்.

இதில் மொஹமட் காலிப் வெறும் 7 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மொஹமட் ரிபாஸ் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் இம்டியாஸ் ஸ்லாசா ஒரு ஓட்டத்தை விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.

முன்னதாக போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஸாஹிரா கல்லூரி 224 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முதல் இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது. இந்நிலையில் ஜனாதிபதி கல்லூரி முதல் இன்னிங்ஸில் 162 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்போது இம்டியாஸ் ஸ்லாசா 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி 7 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஜனாதிபதி கல்லூரிக்கு வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 224/9d (73) – யசித் நிர்மல் 40, சத்ரு டில்ருக்ஷான் 33, அரவிந் 35, ஷஷிக்க நிர்மல 4/50, தெவின் தெவ்மிக்க 3/37

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 162 (46.1) – அக்கில ரொஷான் 45, சதஸ்ய கல்ப 22, இம்டியாஸ் ஸ்லாசா 5/61, மொஹமட் ரிபாஸ் 2/25

ஸாஹிரா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 145/7d (44) – யசித் நிர்மால் 33, இம்டியாஸ் ஸ்லாசா 33, தினித் நெலும்தெனிய 5/51

ஜனாதிபதி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 22 (16.4) – மொஹமட் காலிப் 5/7, மொஹமட் ரிபாஸ் 3/13, இம்டியாஸ் ஸ்லாசா 2/1

முடிவு ஸாஹிரா கல்லூரி 185 ஓட்டங்களால் வெற்றி   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க