Home Tamil வெற்றியுடன் இளையோர் உலகக் கிண்ணத்தினை ஆரம்பித்த இலங்கை

வெற்றியுடன் இளையோர் உலகக் கிண்ணத்தினை ஆரம்பித்த இலங்கை

ICC U19 World Cup 2022

376

சகுன நிதர்ஷன லியனகேவின் அபார துடு;ப்பாட்டம் மற்றும் அணித்தலைவர் துனித் வெல்லாலகேவின் மாயாஜால சுழல் என்பவற்றின் மூலம் ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை 19 வயதின்கீழ் அணி 40 ஓட்டங்களால் அபார வெற்றயீட்டியது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 14ஆவது தடவையாக நடத்தப்படும் 19 வயதின்கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்று (14) மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகியது.

இதில் முதல் போட்டியில் வரவேற்பு நாடான மேற்கிந்தியத் தீவுகள் 19 வயதின் கீழ் அணியை அவுஸ்திரேலிய அணி 19 வயதின்கீழ் அணி எதிர்கொள்ள, இரண்டாவது போட்டியில் ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணியை இலங்கை 19 வயதின்கீழ் அணி எதிர்கொண்டது.

இந்த நிலையில், இலங்கை – ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணிகள் மோதிய போட்டி கயானாவின் எவரெஸ்ட் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 அணியின் தலைவர் துனித் வெலால்கே முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, தனது தரப்பிற்காகப் பெற்றார்.

இலங்கை 19 வயதின்கீழ் அணியின் ஆரம்ப வீரர்களாக சமிந்து விக்ரமசிங்க, ஷெவோன் டேனியல் ஆகிய இருவரும் களமிறங்கினர். இதில் ஷெவோன் டேனியல் 4 ஓட்டங்களை எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

அதன்பின்னர் சதீஷ ராஜபக்ஷவுடன் இணைந்து நிதானமாக ஆடிய சமிந்து விக்ரமசிங்கவும் 28 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த பவன் பதிராஜ வந்த வேகத்தில் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.

இவரின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து அடுத்த ஓவரில் சதீஷ ராஜபக்ஷ 24 ஓட்டங்களுடனும், தொடர்ந்து களமிறங்கிய ரனுத சோமர்தன (5) மற்றும் அணித்தலைவர் துனித் வெல்லாலகே ஆகிய இருவரும் சொற்ப ஓட்டங்களுடனும் ஓய்வறை திரும்பினர். இதனால் இலங்கை 19 வயதின்கீழ் அணி 99 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து ஜோடி சேர்ந்த சகுன நிதர்ஷன லியனகே, ரவீன் டி சில்வா ஆகிய இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

ஏழாவது விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும், ரவீன் டி சில்வா 30 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஷோன் கொன்ரேட் பிஷர் கூஹ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து இலங்கை அணிக்காக பெறுமதியான இன்னிங்ஸ் ஒன்றை ஆடி அரைச்சதம் கடந்த சகுன நிதர்ஷன லியனகே, 85 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும், தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேற, இலங்கை 19 வயதின்கீழ் அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் இலங்கை வீரர்களைக் கட்டுப்படுத்த ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணி மொத்தம் 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது கவனிக்கத்தக்கது.

ஸ்கொட்லாந்து அணி தரப்பில் ஷோன் கொன்ரேட் பிஷர் கூஹ் 3 விக்கெட்டுகளையும், ஜெக் ஜார்விஸ், ஒலிவர் டாவிட்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தினார்கள்.

219 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணி, தமது முதல் விக்கெட்டினை 24 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சார்ளி டியர் (17) ஷெவோன் டேனியலின் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஒலிவன் டாவிட்சன், 15 ஓட்டங்களுடனும், அடுத்த வந்த சாமுவேல் எல்ஸ்டோன் 13 ஓட்டங்களுடனும் துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டழிழந்து ஓய்வறை திரும்பினர்.

தொடர்ந்து வந்த தோமஸ் மெகின்டோஸ் 19 ஓட்டங்ங்களுடன் ஆட்டமிழக்க, ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணி 79 ஓட்டங்களுக்கு 4 விகn;கட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், 5ஆவது மற்றும் 6ஆவது விக்கெட்டுக்களுக்காக ஜெக் ஜார்விஸுன் இணைந்து சிறியதொரு இணைப்பாட்டத்தை மேற்கொண்டு வலுச்சேர்த்த ரபாய் கான் 7 ஓட்டங்களுடனும், லைல் ரொபர்ட்ஸன் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

மறுபுறத்தில் அந்த அணிக்காக நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்த ஜெக் ஜார்விஸ் அரைச்சதம் கடந்த நிலையில் 55 ஓட்டங்களை எடுத்து துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் ரவீன் டி சில்வாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

எனவே, தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணியால் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சு சார்பில் அணித்தலைவர் துனித் வெல்லாலகே தனது மாயஜால சுழல் மூலம் 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

அதேபோல, ஷெவோன் டேனியல் 2 விக்கெட்டுகளையும், மதீஷ பத்திரன மற்றும் வனுஜ சஹன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் வீpழ்த்தினர்.

இதன்படி, 40 ஓட்டங்களால் வெற்றயீட்டிய இலங்கை 19 வயதின்கீழ் அணி, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் 2 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தைப் பெற்றது.

மறுபுறத்தில் இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 19 வயதின்கீழ் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய அவுஸ்திரேலிய 19 வயதின்கீழ் அணி, D பிரிவில் 2 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதனிடையே, இலங்கை 19 வயதின்கீழ் அணி, தமது 2ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய 19 வயதின்கீழ் அணியை எதிர்வரும் 17ஆம் திகதி சந்திக்கவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை 19 வயதின்கீழ் அணி – 218/10 (45.2) – சகுன நிதர்ஷன லியனகே 85, ரவீன் டி சில்வா 30, ஷோன் கொன்ரேட் பிஷர் கூஹ் 3/56, ஜெக் ஜார்விஸ் 2/27

ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணி – 178/10 (48.4) – ஜெக் ஜார்விஸ் 55, தோமஸ் மெக்கின்டோஸ் 19, துனித் வெல்லாலகே 5/27, ஷெவோன் டேனியல் 2/16

முடிவு – இலங்கை 19 வயதின்கீழ் அணி 40 ஓட்டங்களால் வெற்றி

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<


Result


Sri Lanka U19
209/10 (45.2)

Scotland U19
178/10 (48.4)

Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe c & b Jack Jarvis 28 31 1 1 90.32
Shevon Daniel run out () 4 4 1 0 100.00
Sadisha Rajapaksa b Olly Davidson 24 26 2 0 92.31
Pawan Pathiraja st Charlie Tear b Jack Jarvis 0 2 0 0 0.00
Ranuda Somarathne lbw b Olly Davidson 5 12 1 0 41.67
Sakuna Nidarshana Liyanage c & b Sean Fischer-Keogh 79 84 2 4 94.05
Dunith Wellalage c & b Rafay Khan 10 33 0 0 30.30
Raveen De Silva b Sean Fischer-Keogh 27 49 3 0 55.10
Yasiru Rodrigo b Sean Fischer-Keogh 9 14 1 0 64.29
Wanuja Sahan not out 7 15 0 0 46.67
Matheesha Pathirana run out () 4 5 0 0 80.00


Extras 12 (b 0 , lb 0 , nb 3, w 9, pen 0)
Total 209/10 (45.2 Overs, RR: 4.61)
Fall of Wickets 1-8 (1.5) Shevon Daniel, 2-60 (9.2) Chamindu Wickramasinghe, 3-61 (9.4) Pawan Pathiraja, 4-63 (10.3) Sadisha Rajapaksa, 5-78 (12.6) Ranuda Somarathne, 6-99 (22.3) Dunith Wellalage, 7-167 (36.6) Raveen De Silva, 8-191 (40.6) Sakuna Nidarshana Liyanage, 9-198 (42.6) Yasiru Rodrigo,

Bowling O M R W Econ
Sean Fischer-Keogh 9 0 56 3 6.22
Charlie Peet 6 0 30 0 5.00
Jack Jarvis 8.2 0 25 2 3.05
Olly Davidson 8 0 44 2 5.50
Lyle Robertson 8 2 15 0 1.88
Rafay Khan 4 0 27 1 6.75
Jamie Cairns 2 0 12 0 6.00


Batsmen R B 4s 6s SR
Charlie Tear lbw b Shevon Daniel 17 26 3 0 65.38
Olly Davidson lbw b Dunith Wellalage 15 56 0 0 26.79
Sam Elstone c Ranuda Somarathne b Dulith Wellalage 13 50 1 0 26.00
Tom Mackintosh lbw b Matheesha Pathirana 19 30 2 0 63.33
Jack Jarvis c Raveen De Silva b Dulith Wellalage 55 61 3 3 90.16
Rafay Khan c Ranuda Somarathne b Dulith Wellalage 7 18 1 0 38.89
Lyle Robertson c Shevon Daniel b Wanuja Sahan 14 26 0 0 53.85
Charlie Peet b Dulith Wellalage 10 12 0 0 83.33
Christopher Cole run out (Shevon Daniel) 3 7 0 0 42.86
Jamie Cairns not out 1 3 0 0 33.33
Sean Fischer-Keogh lbw b Shevon Daniel 2 3 0 0 66.67


Extras 22 (b 3 , lb 3 , nb 0, w 16, pen 0)
Total 178/10 (48.4 Overs, RR: 3.66)
Fall of Wickets 1-24 (8.1) Charlie Tear, 2-49 (21.4) Olly Davidson, 3-57 (23.1) Sam Elstone, 4-79 (29.2) Tom Mackintosh, 5-103 (35.1) Rafay Khan, 6-151 (43.2) Lyle Robertson, 7-165 (45.3) Jack Jarvis, 8-170 (46.6) Christopher Cole, 9-175 (47.5) Charlie Peet, 10-178 (48.4) Sean Fischer-Keogh,

Bowling O M R W Econ
Yasiru Rodrigo 4 1 6 0 1.50
Chamindu Wickramasinghe 4 1 22 0 5.50
Wanuja Sahan 10 2 33 1 3.30
Shevon Daniel 6.4 1 16 2 2.50
Dunith Wellalage 9 0 27 5 3.00
Sadisha Rajapaksa 2 0 3 0 1.50
Raveen De Silva 8 0 37 0 4.62
Matheesha Pathirana 5 0 28 1 5.60