Home Tamil இலங்கையின் இளையோர் உலகக் கிண்ண கனவு பறிபோனது

இலங்கையின் இளையோர் உலகக் கிண்ண கனவு பறிபோனது

ICC U19 World Cup 2022

420

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் 19 வயதின்கீழ் அணிகளுக்கு இடையில் அண்டிகுவாவில் நேற்று நடைபெற்ற ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தின் நான்காவது காலிறுதிப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 4 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி, இரண்டாவது முறையாக அரை இறுதிப்போட்டிக்கு முன்னேற, இலங்கை 19 வயதின்கீழ் அணியின் மற்றுமொரு உலகக் கிண்ண சம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு ஏமாற்றத்துடன் நிறைவுக்கு வந்தது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத் தொடரில் அண்டிகுவாவின் கூலிச் மைதானத்தில் நேற்று (27) நடைபெற்ற நான்காவது காலிறுதிப் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை 19 வயதின்கீழ் அணியின் தலைவர் துனித் வெல்லாலகே, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 7 ஓவர்களில் 23 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

எனினும், சிறிது நேரத்தில் போட்டி மீண்டும் ஆரம்பமாகினாலும், அந்த அணியின் ஆரம்ப வீரர்களான பிலால் சயெதி 6 ஓட்டங்களுடன் ட்ரவின் மெதிவ்வின் பந்தில் போல்ட் ஆகி வெளியேற, நங்கெயலியா கான் 13 ஓட்டங்களை எடுத்த நிலையில் வினுஜ ரன்புல்லின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.

தொடர்ந்து புதிய வீரராக மைதானம் வந்த அணித்தலைவர் சுலைமான் சாபி வெறும் ஒரு ஓட்டத்துடனும், இஜாஸ் அஹ்மட் ஓட்டம் எதுவுமின்றியும் வினுஜ ரன்புல்லின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் 19 வயதின்கீழ் அணி 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும், அல்லாஹ் நூர் மற்றும் அப்துல் ஹாதி இணைந்து சிறிய இணைப்பாட்டமொன்றை பகிர்ந்து நம்பிக்கை கொடுத்தனர். இவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டுக்காக 47 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த போது,  நூர் 25 ஓட்டங்களுடன் துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் ஆட்டமிக்க, அடுத்து வந்த மொஹமட் இஷாக் 9 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.

அடுத்து வந்த நூர் அஹ்மட், அப்துல் ஹாதியுடன் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்காக மற்றுமொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பி ஓட்டங்களைக் குவித்தனர். இதில், நூர் அஹ்மட் 4 சிக்சர்களை அதிரடியாக விளாசி 30 ஓட்டங்களை எடுத்து வெளியேறிய, அப்துல் ஹாதி 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும், தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற ஆப்கானிஸ்தான் 19 வயதின்கீழ் அணி, 47.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சு சார்பில் வினுஜ ரன்புல் தனது வேகப் பந்துவீச்சின் மூலம் 10 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்த, அணித்தலைவர் துனித் வெல்லாலகே 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதுதவிர ட்ரவின் மெதிவ் மற்றும் யசிரு ரொட்றிகோ ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றி தமது பங்களிப்பினை வழங்கினர்.

பின்னர் 135 என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணிக்கு தொடக்கத்திலேயே பிலால் ஷமி நெருக்கடி கொடுத்தார். இதனால், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சதீஷ ராஜபக்ஷவின் விக்கெட் அவர் ஓட்டம் எதனையும் பெறாத நிலையிலும், ஷெவோன் டேனியில் 2 ஓட்டத்தினை பெற்ற நிலையிலும் பறிபோனது.

இதனையடுத்து ஆரம்ப வீரர் சமிந்து விக்ரமசிங்கவுடன் ஜோடி சேர்ந்து சிறியதொரு இணைப்பாட்டத்தை வழங்கிய சகுன நிதர்ஷன லியனகே 2 ஓட்டங்களை மாத்திரம் எடுத்த நிலையில் துரமிஷ்டவசமாக ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

தொடர்ந்து வந்த அஞ்சல பண்டார (01), ரனுத சோமரத்ன (03), யசிரு ரொட்றிகோ (02) ஆகிய மூவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடனும், ஆரம்ப வீரர் சமிந்து விக்ரமசிங்க 16 ஓட்டங்களை எடுத்து ரன்-அவுட் முறையிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 19 வயதின்கீழ் அணி 43 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், 8ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் துனித் வெல்லாலகே, ரவீன் டி சில்வா ஆகிய இருவரும் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்க போராட்டம் மிக்க இன்னிங்ஸ் ஒன்றை முன்னெடுத்த அணித்தலைவர் துனித் வெல்லாகே, 61 பந்துகளில் 3 பௌண்டரிகளுடன் 34 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் விக்கெட்டை பறிகொடுத்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து ரவீன் டி சில்வா 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும் இலங்கையின் வெற்றிக்கான அற்பசொற்ப நம்பிக்கையும் அற்றுப்போனது.

இலங்கை அணியின் கடைசி விக்கெட்டும் ரன்-அவுட் முறையில் வீழ்த்தப்பட, 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை அணி 130 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 4 ஓட்டங்களால் போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் பிலால் ஷமி 2 விக்கெட்டுகளையும், நவீட் சத்ரான், நூர் அஹ்மட், இஸ்ஹாருல்லாஹ் ஹக் மற்றும் நங்கெயலியா கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியினை உறுதி செய்தனர்.

இந்த நிலையில், நான்காவது காலிறுதிப்போட்டியில் வெற்றிபெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, பெப்ரவரி முதலாம் திகதி நடைபெறுகின்ற முதலாவது அரை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மறுபுறத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ள 5ஆவது இடத்திற்கான போட்டியில் தென்னாபிரிக்க அணியை சந்திக்கவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<


Result


Afghanistan U19
134/10 (47.1)

Sri Lanka U19
130/10 (46)

Batsmen R B 4s 6s SR
Bilal Sayedi b Matheesha Pathirana 6 34 0 0 17.65
Nangeyalia Kharote c Anjala Bandara b Vinuja Ranpul 13 33 2 0 39.39
Allah Noor c Ranuda Somarathne b Dulith Wellalage 25 58 1 0 43.10
Suliman Safi lbw b Vinuja Ranpul 1 9 0 0 11.11
Ijaz Ahmad Ahmadzai c Anjala Bandara b Vinuja Ranpul 0 3 0 0 0.00
Abdul Hadi st Anjala Bandara b Dulith Wellalage 37 97 3 1 38.14
Mohammad Ishaq † c Shevon Daniel b Yasiru Rodrigo 9 9 0 1 100.00
Noor Ahmad  c Shevon Daniel b Vinuja Ranpul 30 33 0 4 90.91
Izharulhaq Naveed  b Vinuja Ranpul 1 3 0 0 33.33
Bilal Sami  lbw b Dulith Wellalage 1 3 0 0 33.33
Naveed Zadran  not out 0 1 0 0 0.00


Extras 11 (b 1 , lb 2 , nb 0, w 8, pen 0)
Total 134/10 (47.1 Overs, RR: 2.84)
Fall of Wickets 1-24 (10.6) Bilal Sayedi, 2-24 (11.1) Nangeyalia Kharote, 3-26 (13.1) Suliman Safi, 4-26 (13.4) Ijaz Ahmad Ahmadzai, 5-73 (32.4) Allah Noor, 6-84 (35.3) Mohammad Ishaq †, 7-132 (45.6) Noor Ahmad , 8-132 (46.1) Abdul Hadi, 9-134 (46.5) Bilal Sami , 10-134 (47.1) Izharulhaq Naveed ,

Bowling O M R W Econ
Yasiru Rodrigo 8 1 41 1 5.12
Vinuja Ranpul 9.1 3 10 5 1.10
Treveen Mathews 10 4 13 1 1.30
Chamindu Wickramasinghe 4 0 11 0 2.75
Dunith Wellalage 10 0 36 3 3.60
Raveen De Silva 3 0 13 0 4.33
Shevon Daniel 3 1 7 0 2.33


Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe run out (Suliman Safi) 16 53 0 0 30.19
Sadeesh Jayawardena c Mohammad Ishaq † b Bilal Sami  0 1 0 0 0.00
Shevon Daniel lbw b Bilal Sami  2 9 0 0 22.22
Sakuna Nidarshana Liyanage run out (Mohammad Ishaq †) 2 13 0 0 15.38
Anjala Bandara c Mohammad Ishaq † b Naveed Zadran  1 7 0 0 14.29
Ranuda Somarathne lbw b Noor Ahmad  3 10 0 0 30.00
Yasiru Rodrigo run out (Ijaz Ahmad Ahmadzai) 2 9 0 0 22.22
Dunith Wellalage b 34 61 0 0 55.74
Ravindu De Silva b 21 84 0 0 25.00
Vinuja Ranpul not out 11 14 0 0 78.57
Treveen Mathews run out () 4 15 0 0 26.67


Extras 34 (b 0 , lb 2 , nb 0, w 32, pen 0)
Total 130/10 (46 Overs, RR: 2.83)
Fall of Wickets 1-2 (0.4) Sadeesh Jayawardena, 2-8 (4.1) Shevon Daniel, 3-20 (10.2) Sakuna Nidarshana Liyanage, 4-24 (11.5) Anjala Bandara, 5-30 (14.2) Ranuda Somarathne, 6-42 (16.1) Chamindu Wickramasinghe, 7-43 (17.1) Yasiru Rodrigo,

Bowling O M R W Econ
Bilal Sami  10 0 33 2 3.30
Naveed Zadran  8 1 19 1 2.38
Noor Ahmad  10 2 20 1 2.00
Izharulhaq Naveed  10 1 33 1 3.30
Nangeyalia Kharote 8 0 23 1 2.88