சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதின் கீழான பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 1 கிரிக்கெட் தொடரின் 6 போட்டிகள் நேற்று நிறைவு பெற்றன.

நாலந்த கல்லூரி, கொழும்பு எதிர் ரிச்மண்ட் கல்லூரி, காலி  

மக்கோன சர்ரே மைதானத்தில் வியாழக்கிழமை (19) ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் முதல் இன்னிங்சில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் ரிச்மண்ட் கல்லூரி வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரிச்மண்ட் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை நாலந்த கல்லூரிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய நாலந்த கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 35.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நாலந்த கல்லூரி சார்பாக சுரங்க விஜேவர்தன 25 ஓட்டங்களையும் அவிஷ்க பெரேரா 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ரிச்மண்ட் கல்லூரி சார்பாக சதுன் மென்டிஸ் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் திலும் சுதீர 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரிச்மண்ட் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.  ரிச்மண்ட் கல்லூரி சார்பில் ஆகாஷ் கவிந்த 28 ஓட்டங்களைப் பெற்றார்.

83 ஓட்டங்களுக்கு சுருண்ட நாலந்த கல்லூரி

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதின் கீழான பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 1 கிரிக்கெட் தொடரின…

பந்து வீச்சில் நாலந்த கல்லூரி சார்பில் ரவீன் டி சில்வா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த நாலந்த கல்லூரி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 33 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது. ரிச்மண்ட் கல்லூரியின் திலும் சுதீர 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 83 (35.4)சுரங்க விஜேவர்தன 25, அவிஷ்க பெரேரா 20, சதுன் மென்டிஸ் 4/18, திலும் சுதீர 4/20

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 85/5d (24.3) – ஆகாஷ் கவிந்த 28, ரவீன் டி சில்வா 2/28

நாலந்த கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 33/4 (14.3) – திலும் சுதீர 3/17

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது. முதல் இன்னிங்சில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் ரிச்மண்ட் கல்லூரி வெற்றி 


தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை எதிர் மஹிந்த கல்லூரி, காலி 

மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் வியாழக்கிழமை (19) ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவுற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மாசோக கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தர்மாசோக கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் சச்சின் சஞ்சீவ 47 ஓட்டங்களையும் நிமேஷ் மென்டிஸ் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

மஹிந்த கல்லூரி சார்பாக பந்துவீச்சில் கவிந்து எதிரிவீர 57 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மஹிந்த கல்லூரி 4  விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில்  முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மஹிந்த கல்லூரி சார்பில் ஹன்சிக விலிஹிந்த  31 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் தர்மாசோக கல்லூரியின் தினுக தில்ஷான் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை (முதலாவது இன்னிங்ஸ்) – 145 (48.3) சச்சின் சஞ்சீவ 47, நிமேஷ் மென்டிஸ் 39, கவிந்து எதிரிவீர 6/57

மஹிந்த கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 75/4 (31.2) – ஹன்சிக விலிஹிந்த 31,  தினுக தில்ஷான் 2/11

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் டி மெசனொட் கல்லூரி, கந்தானை 

டி மெசனொட் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (19) ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் முதல் இன்னிங்சில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் புனித தோமியர் கல்லூரி வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது . இதன்படி துடுப்பாடக் களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. புனித தோமியர் கல்லூரி சார்பாக துலிப் குணரத்ன 58 ஓட்டங்களையும் சனில் டி மெல் 39 ஓட்டங்களையும் டிலொன் பீரிஸ் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஹபீஸின் பந்துவீச்சு குறித்து மீண்டும் சந்தேகம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், சகலதுறை ஆட்டக்காரருமான மொஹமட் ஹபீஸின் (37 வயது) பந்துவீச்சு…

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டி மெசனொட் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது. மெசனொட் கல்லூரி சார்பில் நிகில கீத் 41 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் புனித தோமியர் கல்லூரி சார்பாக செனொல் பெர்னாண்டோ 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பவித்ர ரத்னாயக 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் டேலோன் பீரிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பொலொவ் ஓன் (Follow on) முறைக்கு தள்ளப்பட்ட டி மெசனொட் கல்லூரி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது. டி மெசனொட் கல்லூரி சார்பில் நதுன் தில்ஷான் 56 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் செநோல் பெர்னாண்டோ 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதலாவது இன்னிங்ஸ்) – 238 (73.2) – துலிப் குணரத்ன 58, சனில் டி மெல் 39, டிலொன் பீரிஸ் 45, க்ரிஷான் முனசிங்ஹ 23, தினேத் கன்னங்கர 23, மனிஷ ரூபசிங்ஹ 21, சாலிய ஜூட் 6/69, ரோமல் பெர்னாண்டோ 2/39

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (முதலாவது இன்னிங்ஸ்) – 124/10 (55) – நிகில கீத் 41, செனொல் பெர்னாண்டோ 3/33, பவித்ர ரத்னாயக 3/38, டேலோன் பீரிஸ் 2/13

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 105/5 (35) – நதுன் தில்ஷான் 56, செனொல் பெர்னாண்டோ 3/14

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது. முதல் இன்னிங்சில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் புனித தோமியர் கல்லூரி வெற்றி. 


திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு  

புனித பேதுரு கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் (19)  ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவுற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய திரித்துவக் கல்லூரி அணி   தமது முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பில் ஹசிந்த ஜயசூரிய 101 ஓட்டங்களையும் புபுது பண்டார 28 ஓட்டங்களையும் சாணுக குமாரசிங்ஹ 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் புனித பேதுரு கல்லூரியின் சச்சின் சில்வா 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் முஹம்மத் அமீன் 70 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்ளையும் கனிஷ்க மதுவத 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

தமது முதல் இன்னிங்சுக்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி தமது விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.

பேதுரு கல்லூரி சார்பில் சந்தூஷ் குணதிலக மற்றும் பானுக சில்வா ஆகியோர் ஆட்டமிழக்காது முறையே 36, 17 ஓட்டங்களைப் பெற்றனர்.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 192/9d (68.2) – ஹசிந்த ஜயசூரிய 101, புபுது பண்டார 28, சாணுக குமாரசிங்ஹ 26, சச்சின் சில்வா 3/44, முஹம்மத் அமீன் 3/70, கனிஷ்க மதுவத 2/41

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 55/0 (13) – சந்தூஷ் குணதிலக 36*, பானுக சில்வா 17*

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி எதிர் கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி  

பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில் வியாழக்கிழமை (19) ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவுற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ்வூட் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை சில்வெஸ்டர் கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய சில்வெஸ்டர் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றது.

சில்வெஸ்டர் கல்லூரி சார்பாக ஜனகாந்த ராஜாசிங்ஹ 22 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் கிங்ஸ்வூட் கல்லூரி சார்பில் ஹஷான் விக்கரமசிங்ஹ 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சரித்திரத்தில் மற்றுமொரு மோசமான நிலையில் இலங்கை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டியை, 7 விக்கெட்டுகளால் இலங்கை…

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்வூட் கல்லூரி இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும்வரை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 29 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சில்வஸ்டர் கல்லூரியின் நிம்சர அத்தனகல்ல 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 105 (57.2) – ஜனகாந்த ராஜாசிங்ஹ 22, ஹஷான் விக்கரமசிங்ஹ 2/08, துமிந்த தமிஷ்க 2/26

கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி(முதலாவது இன்னிங்ஸ்) – 29/4 (13.1) – நிம்சர அத்தனகல்ல 3/14

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது 


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் புனித மரியார் கல்லூரி, கேகாலை  

குருநாகல வெலகெதர மைதானத்தில் வியாழக்கிழமை (19) ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது . இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக விக்கெட் இழப்பின்றி  2 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை சீரற்ற காலநிலை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இரண்டாம் நாள் ஆட்டமும் சிரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

போட்டியின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 2/0 (1.3)