19 வயதின்கீழ் ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

104
U19 Asia Cup 2024 Sri Lankan squad

அடுத்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) ஆரம்பமாகவிருக்கும் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

>>ஆசியக் கிண்ண ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற Sony<<

மொத்தம் 15 பேர் அடங்கிய இந்தக்குழாத்தின் தலைவராக கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி வீரரான விஹாஸ் தேவ்மிக்க நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். மறுமுனையில் இந்தக் குழாத்தில் தமிழ் பேசும் வீரர்களான சாருஜன் சண்முகநாதன், யாழ். மாவட்ட வீரர்களான மாலிங்க பாணியில் பந்துவீசும் குகதாஸ் மாதுளன் மற்றும் ரஞ்சித் குமார் நியூட்டன் ஆகியோரும் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெறும் 19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இம்முறை 8 அணிகள் பங்கேற்கவிருப்பதோடு, இலங்கை குழு B இல் போட்டியிடுகின்றது.

அத்துடன் இலங்கை அணி தமது முதல் போட்டியில் நேபாளத்தினை எதிர்வரும் 29ஆம் திகதி துபாய் நகரில் வைத்து எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

விஹாஸ் தேவ்மிக்க – தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு

 

புலிந்து பெரேரா – தர்மராஜ கல்லூரி, கண்டி

 

தனுஜ ராஜபக்ஷ – தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு

 

துல்னித் சிகார – மஹாநாம கல்லூரி, கொழும்பு

 

லக்வின் அபேய்சிங்க – தர்மராஜ கல்லூரி, கண்டி

 

விமாத் டின்சார – ரோயல் கல்லூரி, கொழும்பு

 

ரமிரு பெரேரா – ரோயல் கல்லூரி, கொழும்பு

 

கவிஜா கமகே – கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி

 

விரான் சாமுதித – சென். செர்வாதியஸ் கல்லூரி, மாத்தறை

 

பிரவீன் மனீஷ – லும்பினி கல்லூரி, கொழும்பு

 

யனுல தேவ்துஸ – புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

 

சாருஜன் சண்முகநாதன் – புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு

 

ரஞ்சித்குமார் நியூட்டன் – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம்

 

குகதாஸ் மாதுளன் – சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்

 

கீத்திக டி சில்வா – சென். ஏன்ஸ் கல்லூரி, குருநாகல்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<