இளையோர் ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (13) இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியினை பங்களாதேஷ் 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
>>நியூட்டனின் அபார பந்துவீச்சுடன் இறுதிப்போட்டியில் யாழ். மத்தி!
மேலும் இப்போட்டியின் தோல்வியோடு இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகாமல் தொடரில் இருந்து வெளியேறுகின்றது.
இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் குழு B இல் காணப்பட்ட இலங்கை அணி தாம் இறுதியாக விளையாடிய போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திடம் தோல்வியினைத் தழுவியதனை அடுத்து, தொடரின் அரையிறுதிக்காக பங்களாதேஷிடம் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து இன்று களமிறங்கியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் இளம் வீரர்கள் முதலில் இலங்கை வீரர்களை துடுப்பாடப் பணித்தனர். இதன்படி போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 200 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்தது.
இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக புலிந்து பெரேரா 28 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் பங்களாதேஷ் பந்துவீச்சு சார்பில் வாசி சித்தீக் 03 விக்கெட்டுக்களையும், மாருப் மிரிதா மற்றும் மஹ்புசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>“என்னுடைய பணியின் போது பல கடினமான முடிவுகளை எடுத்தேன்” – பிரமோதய
பங்களாதேஷ் தரப்பின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரராக களமிறங்கி சதம் விளாசிய அஷீகுர் ரஹ்மான் சிப்லி 130 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 116 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கைப் பந்துவீச்சில் கருக்க சன்கேத் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<