19 வயதுக்கு கீழ்ப்பட்ட அணிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது குழுநிலைப் போட்டியில் இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி, நேபாள அணியை 60 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி, இளையோர் ஆசியக் கிண்ணத்தொடரில் தமது இரண்டாவது தொடர் வெற்றியினைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளையோர் ஆசியக்கிண்ண முதல் போட்டியில் இலங்கைக்கு இமாலய வெற்றி
இளையோர் ஆசியக் கிண்ணத்தொடரில் குழு B இல் காணப்படும் இலங்கை 19 வயதுக் கிரிக்கெட் அணி, தமது முதல் போட்டியில் குவைத் இளையோர் அணிக்கு எதிராக இலகு வெற்றியினைப் பதிவு செய்த பின்னர் தமது இரண்டாவது போட்டியில் இன்று (26) நேபாள இளையோர் அணியினை எதிர்கொண்டது.
ஷார்ஜாவில் ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 வயது கிரிக்கெட் அணியின் தலைவர் துனித் வெலால்கே முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காகப் பெற்றார்.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை 19 வயது கிரிக்கெட் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக களம் வந்திருந்த சமிந்து விக்ரமசிங்க மற்றும் மூன்றாம் இலக்கத்தில் துடுப்பாடிய சதீஷ ராஜபக்ஷ ஆகியோர் சதங்களைப் பெற்று பெறுமதி சேர்த்தனர்.
இந்த இரண்டு வீரர்களினதும் அபார சதங்களோடு இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை 19 வயது கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் சதீஷ ராஜபக்ஷ – சமிந்து விக்ரமசிங்க ஜோடி இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 223 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு இதில் சதீஷ ராஜபக்ஷ 119 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 131 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் சமிந்து விக்ரமசிங்க 126 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 111 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
சன்ரைசர்ஸ் அணியில் முரளியுடன் இணையும் லாரா, ஸ்டெய்ன்
நேபாள 19 வயது கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் மொஹமட் ஆதில் அலாம் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 323 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய நேபாள 19 வயது கிரிக்கெட் அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 262 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.
நேபாள 19 வயது கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அர்ஜூன் சவுட் அரைச்சதம் தாண்டி 64 ஓட்டங்களைப் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார்.
மறுமுனையில் இலங்கை 19 வயது கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் மதீஷ பத்திரன மற்றும் ரவின் டி சில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chamindu Wickramasinghe | c Bibek Magar b Mohammad Aadil Alam | 111 | 126 | 8 | 2 | 88.10 |
Shevon Daniel | c & b Dev Khanal | 17 | 28 | 1 | 0 | 60.71 |
Sadisha Rajapaksa | b Mohammad Aadil Alam | 131 | 119 | 11 | 2 | 110.08 |
Dunith Wellalage | not out | 34 | 24 | 3 | 1 | 141.67 |
Yasiru Rodrigo | c & b | 6 | 5 | 1 | 0 | 120.00 |
Ravindu De Silva | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 23 (b 0 , lb 2 , nb 2, w 19, pen 0) |
Total | 322/4 (50 Overs, RR: 6.44) |
Fall of Wickets | 1-39 (10.1) Shevon Daniel, 2-262 (42.5) Chamindu Wickramasinghe, 3-301 (48.2) Sadisha Rajapaksa, 4-314 (49.4) Yasiru Rodrigo, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Gulsan Jha | 6 | 0 | 30 | 0 | 5.00 | |
Mohammad Aadil Alam | 9 | 0 | 46 | 2 | 5.11 | |
Dev Khanal | 9 | 1 | 55 | 1 | 6.11 | |
Sher Malla | 7 | 0 | 50 | 0 | 7.14 | |
Tilak Bhandari | 7 | 0 | 41 | 0 | 5.86 | |
Basir Ahamad | 5 | 0 | 33 | 0 | 6.60 | |
Bibek Yadav | 7 | 0 | 65 | 1 | 9.29 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Santosh Karki | b Matheesha Pathirana | 34 | 34 | 4 | 1 | 100.00 |
Dev Khanal | c Sadisha Rajapaksa b Raveen De Silva | 28 | 45 | 0 | 4 | 62.22 |
Arjun Saud † | run out (Anjala Bandara) | 64 | 80 | 0 | 0 | 80.00 |
Basant Karki | c Wanuja Sahan b Raveen De Silva | 1 | 16 | 0 | 0 | 6.25 |
Bibek Magar | c Matheesha Pathirana b Ravindu De Silva | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Basir Ahamad | c Wanuja Sahan b Shevon Daniel | 43 | 51 | 3 | 2 | 84.31 |
Bibek Yadav | run out (Yasiru Rodrigo) | 46 | 29 | 3 | 3 | 158.62 |
Gulsan Jha | c & b Matheesha Pathirana | 13 | 11 | 2 | 0 | 118.18 |
Mohammad Aadil Alam | c Shevon Daniel b Dulith Wellalage | 7 | 3 | 0 | 1 | 233.33 |
Sher Malla | c Chamindu Wickramasinghe b Matheesha Pathirana | 7 | 12 | 0 | 0 | 58.33 |
Extras | 13 (b 0 , lb 0 , nb 0, w 13, pen 0) |
Total | 258/10 (47.5 Overs, RR: 5.39) |
Fall of Wickets | 1-59 (10.1) Santosh Karki, 2-81 (16.3) Dev Khanal, 3-86 (20.3) Basant Karki, 4-92 (22.2) Bibek Magar, 5-167 (36.5) Basir Ahamad, 6-208 (40.1) Arjun Saud †, 7-231 (42.6) Gulsan Jha, 8-246 (43.6) Mohammad Aadil Alam, 9-258 (46.3) Bibek Yadav, 10-262 (47.5) Sher Malla, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Yasiru Rodrigo | 6 | 0 | 33 | 0 | 5.50 | |
Sadisha Rajapaksa | 6 | 1 | 23 | 0 | 3.83 | |
Wanuja Sahan | 8 | 0 | 51 | 0 | 6.38 | |
Matheesha Pathirana | 8.5 | 0 | 49 | 3 | 5.76 | |
Dunith Wellalage | 10 | 1 | 58 | 1 | 5.80 | |
Ravindu De Silva | 7 | 0 | 35 | 3 | 5.00 | |
Shevon Daniel | 2 | 11 | 0 | 1 | 0.00 |
முடிவு – இலங்கை இளையோர் அணி 60 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<