ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவருகின்ற இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இன்று இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் 19 வயது கிரிக்கெட் அணி ஆகியவை இடையே இடம்பெற்ற குழுநிலைப் போட்டி கொவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை – ஜிம்பாப்வே தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது
இலங்கை, பங்களாதேஷ் ஆகியவற்றின் 19 வயது கிரிக்கெட் அணிகள் குழு B இல் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று (28) நடைபெறவிருந்த போட்டி குழுவில் முதல் இடம் பெறுகின்ற அணியினை தீர்மானிக்கின்ற முக்கியத்துவமிக்க போட்டியாக அமைந்திருந்தது.
அதன்படி தொடர்ந்து ஆரம்பமாகியிருந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் 19 வயது கிரிக்கெட் அணி 130 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது போட்டி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
போட்டி நிறுத்தப்பட்ட பின்னர் இன்றைய போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த நடுவர்கள் இருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதனை அடுத்து ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டிருக்கின்றது.
சமிந்து, சதீஷவின் சதங்களோடு இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த இலங்கை இளையோர் அணி
இதேநேரம் இன்றைய போட்டி கைவிடப்பட்டதனை அடுத்து குழு B இல் பங்களாதேஷ் 19 வயது கிரிக்கெட் அணி நிகர ஓட்ட விகித (NRR) அடிப்படையில் முதலிடம் பெறுவதுடன், இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொள்கின்றது.
இனி இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு, இலங்கை அணி தமது அரையிறுதிப் போட்டியில் எதிர்வரும் 30ஆம் திகதி பாகிஸ்தான் 19 வயது கிரிக்கெட் அணியினை துபாய் நகரில் வைத்து எதிர்கொள்வதுடன், மற்றைய அரையிறுதியில் இந்தியா, பங்களாதேஷின் 19 வயது கிரிக்கெட் அணியினை ஷார்ஜாவில் எதிர்கொள்கின்றது.
மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு