ஈரானின் ஷிராஸ் நகரில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 45ஆவது ஆசிய பாடசாலைகள் கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கான 22 வீரர்களைக் கொண்ட குழாம் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தால் (SLSFA) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடருக்கான வீரர்கள் தேர்வு கடந்த ஜூலை மாதம் இறுதிப் பாதியில் இடம்பெற்றன.
தற்பொழுது தேர்வு செய்யப்பட்டிருக்கும் குழாமில் 3 கோல் காப்பாளர்கள், 4 பின்கள வீரர்கள், 9 மத்தியகள வீரர்கள் மற்றும் 6 முன்கள வீரர்கள் அடங்குகின்றனர்.
இவர்களில் கொழும்பு புனித பேதுரு கல்லூரியின் மூன்று வீரர்கள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி மற்றும் கம்பளை ஸாஹிரா கல்லூரி என்பவற்றில் இருந்து தலா இரண்டு வீரர்கள் உள்ளடங்குகின்றனர். கொழும்பு ஸாஹிரா கல்லூரி மற்றும் ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரிகளில் இருந்து தலா ஒரு வீரரும் இந்த அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் கால்பந்து லீக்கின் செயலாளரும், புது்தளம் போல்டன் கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளருமான முஹமட் அஸாத் இந்த 18 வயதுக்கு உட்பட்ட தேசிய அணிக்கு பயிற்சியாளராக செயற்படுவதோடு, உதவிப் பயிற்சியாளராக டி.எஸ் சமரதுங்க பணியாற்றவுள்ளார்.
தெரிவுசெய்யப்பட்டுள்ள வீரர்கள் விபரம்
பெயர் | பாடசாலை | நிலை |
நுவன் கிம்ஹான | நாலன்த கல்லூரி, கொழும்பு | கோல்காப்பாளர் |
அனுப்ரிய கமகே | தர்மராஜ கல்லூரி, கண்டி | கோல்காப்பாளர் |
மொஹமட் அஸ்ராஜ் | கிண்ணியா மத்திய கல்லூரி | கோல்காப்பாளர் |
முஹமட் முஸ்னி | அல் ஹிலால் கல்லூரி, நீர்கொழும்பு | பின்களம் |
எஸ். சஜன்தன் | யாழ். மத்திய கல்லூரி | பின்களம் |
பதும் விமுக்தி | கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி | பின்களம் |
முஹமட் நிப்லான் | ஸாஹிரா கல்லூரி, கம்பளை | பின்களம் |
அமான் பைசர் | ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி | மத்திய களம் |
ஆகிப் பைசல் | ஸாஹிரா கல்லூரி, மரதானை | மத்திய களம் |
தனன்ஜய சுபுமித் | புனித பேதுரு கல்லூரி, கொழும்பு | மத்திய களம் |
ஆர். ரெம்சன் | யாழ். மத்திய கல்லூரி | மத்திய களம் |
இஷார சதருவன் | புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ | மத்திய களம் |
கவின் சுச்சரித் | புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ | மத்திய களம் |
முஹமட் மஸாஹிர் | பதுரியா மத்திய கல்லூரி, மாவனல்லை | மத்திய களம் |
முஹமட் முஜாஹித் | ஸாஹிரா கல்லூரி, கம்பளை | மத்திய களம் |
யெஸ்மில ஷெஹான் | புனித பேதுரு கல்லூரி, கொழும்பு | மத்திய களம் |
ஷபீர் ரசூனியா | புனித பேதுரு கல்லூரி, கொழும்பு | முன்களம் |
நெத்ம மெல்ஷான் | புனித ஜோசப் கல்லூரி, அனுராதபுரம்; | முன்களம் |
ரிப்கான் முஹமட் | அல் அக்சா கல்லூரி, கிண்ணியா | முன்களம் |
முஹமட் ஜகீர் | ஸாஹிரா கல்லூரி, புத்தளம் | முன்களம் |
தருக்க சமத்கார | பதுல்ல மத்திய கல்லூரி | முன்களம் |
பஸ்லூன் பாஹிம் | புனித அலோசியஸ் கல்லூரி, காலி | முன்களம் |