இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் நடத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான பிரிவு ஒன்றுக்கான கால்பந்து தொடரின் குழு மட்டப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், 24 ஆம் திகதி (புதன்கிழமை) காலிறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இம்முறை போட்டித் தொடரில் மொத்தமாக 14 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டியிட்டன. இதில் கடந்த முறை பிரிவு இரண்டுக்கான போட்டிகளில் முறையே முதல் இரண்டு இடங்களையும் பெற்ற திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் இம்முறை பிரிவு ஒன்றுக்கான போட்டிகளுக்கு தரமுயர்த்தப்பட்டன.
அறிமுக வருடத்திலேயே அபாரம் காண்பிக்கும் புனித பத்திரிசியார் வீரர்கள்
இலங்கை கால்பந்தில் அதிக …
குழு நிலையாக இடம் பெற்ற முதல் சுற்றுப் போட்டிகளின் நிறைவில் இரு குழுக்களிலும் முதல் 4 இடங்களையும் பெற்ற அணிகள் அடுத்த சுற்றான காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
குழு A
அணி |
போட்டி | வெற்றி | சமநிலை | தோல்வி | பெற்ற கோல்கள் | வழங்கிய கோல்கள் |
புள்ளிகள் |
புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு | 6 | 4 | 2 | – | 34 | 7 | 14 |
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு | 6 | 4 | 2 | – | 16 | 7 | 14 |
கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி | 6 | 3 | – | 3 | 18 | 14 | 09 |
கிண்ணியா மத்திய கல்லூரி, திருகோணமலை | 6 | 2 | 2 | 2 | 12 | 10 | 08 |
புனித செபஸ்டியன் கல்லூரி, கடுனேரிய | 6 | 2 | 1 | 3 | 7 | 15 | 07 |
புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு | 6 | 1 | 3 | 2 | 12 | 21 | 06 |
விக்ரமபாகு கல்லூரி, கம்பளை | 6 | – | – | 6 | 4 | 27 | 00 |
குழு B
அணி | போட்டி | வெற்றி | சமநிலை | தோல்வி | பெற்ற கோல்கள் | வழங்கிய கோல்கள் | புள்ளிகள் |
புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் | 6 | 5 | – | 1 | 18 | 4 | 15 |
ஸாஹிரா கல்லூரி, கொழும்பு | 6 | 5 | – | 1 | 15 | 3 | 15 |
புனித பேதுரு கல்லூரி, கொழும்பு | 6 | 3 | 2 | 1 | 12 | 2 | 11 |
திருச்சிலுவைக் கல்லூரி, களுத்தறை | 6 | 3 | 1 | 2 | 16 | 11 | 10 |
ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி, கொழும்பு | 6 | 2 | 1 | 3 | 12 | 6 | 07 |
றோயல் கல்லூரி, கொழும்பு | 6 | 1 | – | 5 | 8 | 18 | 03 |
லும்பினி கல்லூரி, கொழும்பு | 6 | – | – | 6 | 2 | 30 | 00 |
குழு மட்டப் போட்டிகளின் முடிவுகளுக்கு அமைய அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ள அணிகள் இம்மாதம் 24 ஆம் திகதி கொழும்பு மொறகஸ்முல்ல ஜனக ரனவக்க அரங்கில் இடம்பெறவுள்ள காலிறுதிப் போட்டிகளில் மோதவுள்ளன.
ஒரே தினத்தில் 4 காலிறுதிப் போட்டிகளும் இடம்பெறவுள்ளதுடன், அதற்கு அடுத்த தினமான 25 ஆம் திகதி அதே மைதானத்தில் அரையிறுதிப் போட்டிகளும் இடம்பெறும்.
FIFA உலகக் கிண்ணத்தை பார்வையிட 1,500 இலங்கையர்களுக்கு வாய்ப்பு
FIFA உலகக் கிண்ண கால்பந்து…
முதல் காலிறுதி
மோதும் அணிகள் – புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் திருச்சிலுவைக் கல்லூரி, களுத்தறை
நேரம் – காலை 8.15 மணி
குழு A இல் முதல் இடம் பெற்ற நடப்புச் சம்பியன் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி, குழு B இல் நான்காம் இடத்தைப் பெற்ற களுத்தறை திருச்சிலுவைக் கல்லூரியை எதிர்கொள்கின்றது.
கடந்த வருட சம்பியன் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிகளுக்கு இடையிலான இந்த மோதல் எதிர்பார்ப்பு மிக்கதாக உள்ளது.
குழு மட்டத்தில் எந்தவித தோல்வியையும் சந்திக்காத புனித ஜோசப் அணி, வெறும் 6 போட்டிகளில் 34 கோல்களைக் குவித்துள்ளது. எனவே, அசேல மதுஷானின் தலைமையிலான இவ்வணி மீண்டும் சம்பியன் பட்டத்தை வெல்லும் நோக்குடனேயே முதலாவது காலிறுதிப் போட்டியில் களம் காணவுள்ளது.
களுத்தறை வீரர்கள் 2 தோல்வி மற்றும் ஒரு சமநிலையான முடிவுடன் காணப்பட்ட நிலையில் தமது இறுதிப் போட்டியில் ஹமீத் அல் ஹுஸைனி அணியை வீழ்த்தியதன் மூலமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பைப் பெற்றனர்.
இப்போட்டியை நேரடியாகப் பார்வையிட
இரண்டாவது காலிறுதி
மோதும் அணிகள் – ஸாஹிரா கல்லூரி, கொழும்பு எதிர் கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி
நேரம் – காலை 10.30 மணி
குழு B இல் இரண்டாம் இடம் பெற்ற கொழும்பு ஸாஹிரா கல்லூரி வீரர்கள் A குழுவில் மூன்றாம் இடம் பெற்ற கண்டி வீரர்களை எதிர்கொள்கின்றனர்.
யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி அணியிடம் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் வைத்து தோல்வியை சந்தித்த அவர்கள் மிகவும் பலம் கொண்ட தரப்பினராகவே உள்ளனர். எனினும், நீண்ட காலம் இவ்வணிக்கு பயிற்சி வழங்கி வந்த பிரபல பயிற்றுவிப்பாளர் ரூமி இல்லாத நிலையிலேயே அவ்வணி அடுத்துவரும் போட்டிகளை எதிர்கொள்ளவுள்ளது.
பயிற்றுவிப்பாளர் ரூமியின் அதிரடி முடிவு
கொழும்பு ஸாஹிரா கல்லூரி…
கிங்ஸ்வுட் அணி 3 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளைப் பெற்றாலும் ஓரளவு பலத்துடனான அணியைக் கொண்டுள்ளது. எனினும் அவர்களுக்கு ஸாஹிரா அணியை எதிர்கொள்வதென்பது பெரிதும் சவாலாகவே இருக்கும்.
இப்போட்டியை நேரடியாகப் பார்வையிட
மூன்றாவது காலிறுதி
மோதும் அணிகள் – பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் எதிர் கிண்ணியா மத்திய கல்லூரி, திருகோணமலை
நேரம் – பிற்பகல் 2 மணி
கடந்த முறை பிரிவு இரண்டிற்கான இறுதிப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி அணி 1-0 என போட்டியை வெற்றி கொண்டு சம்பியனாக முடிசூடியது. எனினும், இந்த தொடரின் குழு நிலையில் அவர்கள் 2 வெற்றிகள், 2 தோல்விகள் மற்றும் 2 சமநிலையான முடிவுகளுடன் நான்காம் இடத்தையே பெற்றனர்.
மறுமுனையில், B குழுவில் அபாரம் காண்பித்த புனித பத்திரிசியார் வீரர்கள் பலம் மிக்க பல அணிகளையும் வீழ்த்தினர். புனித பேதுரு கல்லூரியுடனான போட்டியில் மாத்திரம் தோல்வியை சந்தித்த அவர்கள் B குழுவில் முதல் இடத்தைப் பெற்று பலம் பொருந்திய ஒரு அணியாகவே உள்ளனர்.
எவ்வாறிருப்பினும் கடந்த வருடம் இடம்பெற்ற பிரிவு இரண்டின் இறுதிப் போட்டியின் மற்றொரு பாகம் போன்றே இந்த காலிறுதிப் போட்டியும் அமையும்.
இப்போட்டியை நேரடியாகப் பார்வையிட
நான்காவது காலிறுதி
மோதும் அணிகள் – மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
நேரம் – மாலை 4 மணி
கடந்த முறை தொடரின் மூன்றாம் இடத்தைப் பெற்ற நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா வீரர்கள் இம்முறை குழு A இல் பல அணிகளுக்கும் அழுத்தம் கொடுத்த அதேவேளை எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத தரப்பாகவும் உள்ளனர்.
எனினும் இவர்களுடன் காலிறுதியில் போட்டி போடும் புனித பேதுரு கல்லூரி அணியும் B குழுவில் ஒரே ஒரு தோல்வியை மாத்திரமே சந்தித்துள்ளது. 19 வயதின் கீழ் தேசிய அணியில் இடம்பெற்ற பல வீரர்களுடன் விளையாடும் அவர்கள் எந்த அழுத்தங்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட தரப்பு என்பது முக்கிய அம்சமாகும்.
எனவே, அரையிறுதிக்கான தெரிவுக்காக இந்த இரு அணி வீரர்களும் மிகப் பெரிய மோதல் ஒன்றையே காலிறுதியில் காண்பிக்கவுள்ளனர்.
இப்போட்டியை நேரடியாகப் பார்வையிட