யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி என்பவற்றின் 18 வயதின் கீழ் கால்பந்து அணிகள் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் நடாத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான பிரிவு ஒன்றுக்கான கால்பந்து தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளன.
மொறகஸ்முல்ல ஜனக ரனவக மைதானத்தில் இடம் பெற்ற காலிறுதிப் போட்டியில் வெற்றி கொண்டதன் மூலமே குறித்த அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
கிண்ணியா மத்திய கல்லூரி எதிர் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி
இந்த ஆட்டத்தின் முதல் முயற்சியாக கிண்ணியா வீரர்கள் மேற்கொண்ட சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் பின்னர் எதிரணியின் கோலுக்கு அருகில் தனிமையாக இருந்த கிண்ணியா மத்திய கல்லூரி வீரர் பந்தைப் பெற்றார். அவர் இலகுவாக கோலுக்குள் செலுத்த இருந்த வாய்ப்பை வெளியில் அடித்து வீணடித்தார்.
மறுமுனையில் போட்டியின் ஆரம்பத்திலேயே பத்திரிசியார் வீரர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளை கிண்ணியா கோல் காப்பாளர் அஸ்ராஸ் சிறந்த முறையில் பிடித்தும் தடுத்தும் எதிரணியின் கோல் வாய்ப்புக்களை தடுத்தார்.
மாலிங்கவைப் போல பந்துவீசும் தமிழ்நாட்டு வீரர் அதிசயராஜ்
கிரிக்கெட் விளையாட்டில் வழக்கத்துக்கு மாறான பந்துவீச்சுப் பாணியைக் கொண்டவர்கள் எப்போதும் ரசிகர்களை மைதானத்துக்கு ஈர்ப்பவர்கள். மேற்கிந்திய தீவுகளின்…
எனினும் 16 நிமிடங்கள் கடந்த நிலையில் கிண்ணியா மத்திய கல்லூரி வீரர் ஆசிப் அஹமட் பல வீரர்களையும் கடந்து வழங்கிய பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற அணித் தலைவர் ரிப்கான் எதிரணியின் கோல் காப்பாளர் தடுப்புக்கு வருதற்கு முன்னரே வேகமாக செயற்பட்டு தமது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
எனினும் அதற்கு அடுத்த நிமிடமே அதற்கான பதில் கோலை புனித பத்திரிசியார் வீரர் கிறிஸ்தீபன் பெற்றுக்கொடுத்தார். பெனால்டி பெட்டியினுள் வைத்து பல வீரர்களுக்கு மத்தியில் பந்தைக் கடத்தி, இறுதியாக கோல் நோக்கி பந்தை செலுத்த அது வேகமாக சென்று கோல் கம்பங்களுக்குள் சரணடைந்தது.
மீண்டும் ஆட்டத்தின் 28 ஆவது நிமிடத்தில் கிண்ணியா வீரர்கள் மேற்கொண்ட சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் பின்னரான கோல் முயற்சியை புனித பத்திரிசியார் கோல் காப்பாளர் கிஜுமன் தகர்த்தார்.
32 ஆவது நிமிடம் தமது அணியின் எல்லையில் இருந்து பத்திரிசியார் வீரர் ரஜிகுமார் சாந்தன் எதிரணியின் கோல் திசை நோக்கி உதைந்த பந்தை மிக வேகமாகச் சென்று பெற்ற கிறிஸ்தீபன் கோல் எல்லைக்குள் எடுத்துச் செல்கையில் கிண்ணியா மத்திய கல்லூரி கோல் காப்பாளர் அஸ்ராஸ் மிக வேகமாக வந்து பாய்ந்து பந்தைப் பிடித்தார்.
அடுத்த நிமிடம் மத்திய களத்தின் வலது புறத்தில் இருந்து பத்திரிசியார் கல்லூரி வீரர் ஹைன்ஸ் பந்தை நீண்ட தூரத்திற்கு எடுத்து வந்து கோல் காப்பாளர் முன்னேறி வருவதற்குள் பந்தை கோலுக்குள் செலுத்தி அணியை முன்னிலைப்படுத்தினார்.
அதன் பின்னர் முதல் பாதி முடியும் வரை பத்திரிசியார் வீரர்கள் தொடர்ந்து பல வாய்ப்புக்களைப் பெற்றபோதும், அவற்றின் மூலம் அவர்கள் பயனைப் பெற்றுக்கொள்ளவில்லை.
முதல் பாதி: கிண்ணியா மத்திய கல்லூரி 1 – 2 புனித பத்திரிசியார் கல்லூரி
இரண்டாவது பாதி ஆரம்பமாகியதன் பின்னரும் புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்கள் மேற்கொண்ட கோலுக்கான முயற்சிகளையும் கிண்ணியா மத்திய கல்லூரி கோல் காப்பாளர் அஸ்ராஸ் சிறப்பாகத் தடுத்தார்.
போட்டியின் 49 ஆவது நிமிடத்தில் கிண்ணியா தரப்பினருக்கு கிடைத்த ப்ரீ கிக்கை மிஹ்ஷான் பெற்றார். அவர் பந்தை இலகுவாகப் பிடிக்கும் விதத்தில் பத்திரிசியார் கோல் காப்பாளர் கிஜுமனின் கைகளுக்கே வழங்கினார்.
மாலிங்கவைப் போல பந்துவீசும் தமிழ்நாட்டு வீரர் அதிசயராஜ்
கிரிக்கெட் விளையாட்டில் வழக்கத்துக்கு மாறான பந்துவீச்சுப் பாணியைக் கொண்டவர்கள் எப்போதும்…
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிறந்த முயற்சியாக, 66 ஆவது நிமிடத்தில் மைதானத்தின் வலது புறத்தில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை கிண்ணியா வீரர் மொஹமட் பஹீம் கோல் நோக்கி ஹெடர் செய்கையில் பந்து கம்பங்களுக்கு வெளியே சென்றது.
மீண்டும் 69 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியே கோல் கம்பங்களுக்கு நேர் எதிரே கிடைத்த ப்ரீ கிக்கையும் மொஹமட் பஹீம் பெற்றார். அவர் உதைந்த பந்து கோல் நோக்கி சென்றுகொண்டிருக்கையில் கிஜுமன் பந்தை வெளியே தட்டிவிட்டார்.
73 ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து சாந்தன் வழங்கிய பந்தை ரொபேர்ட் தனுஜன் பெற்றார். எதிரணியின் பின்கள வீரர்களை ஏமாற்றி தன்னைத் தனிமைப்படுத்திய தனுஜன் இறுதியாக கோல் நோக்கி பந்தை அடிக்கையில் கோல் காப்பாளர் அஸ்ராஸ் பாய்ந்து பந்தைத் தடுத்தார்.
முழு நேரம்: கிண்ணியா மத்திய கல்லூரி 1 – 2 புனித பத்திரிசியார் கல்லூரி
கோல் பெற்றவர்கள்
கிண்ணியா மத்திய கல்லூரி – R. ரிப்கான் 15’
புனித பத்திரிசியார் கல்லூரி – J.N கிறிஸ்டீபன் 16’, D.H. ஹைன்ஸ் 32’
மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
புனித பத்திரிசியார் கல்லூரி – A. ப்ரீசன் 62‘
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் மாரிஸ் ஸ்டெல்லா வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின் போது உள்ளனுப்பப்பட்ட பந்தை புனித பேதுரு கல்லூரியின் கோல் காப்பாளர் மிதுர்சன் பாய்ந்து தட்டிவிட்டார்.
எனினும் இரு அணிகளும் ஓரளவு சம அளவிலான பலத்துடன் விளையாடியமையினால் முதல் 20 நிமிடங்களுக்கும் சிறந்த முறையிலான கோல் முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.
மாலிங்கவைப் போல பந்துவீசும் தமிழ்நாட்டு வீரர் அதிசயராஜ்
கிரிக்கெட் விளையாட்டில் வழக்கத்துக்கு மாறான பந்துவீச்சுப் பாணியைக் கொண்டவர்கள் எப்போதும் ரசிகர்களை…
25 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து புனித பேதுரு கல்லூரி வீரர் ஷெஹான் யஷ்மில எதிரணியின் கோல் திசை நோக்கி அனுப்பிய பந்தை மாரிஸ் ஸ்டெல்லாவின் பின்கள வீரர்கள் தடுக்கத் தவறினர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பந்தைப் பெற்ற மொஹமட் பயாட் பந்தை கோலுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலை புனித பேதுரு கல்லூரிக்காகக் பெற்றுக்கொடுத்தார்.
எதிரணி முன்னிலையில் இருந்த போது மாரிஸ் ஸ்டெல்லா வீரர்கள் கோலுக்காக அதிகமான முயற்சிகளை மேற்கொண்ட போதும், பேதுரு கல்லூரியின் பின் களத்தில் சிறப்பாக செயற்பட்ட சபீர் ரசூனியா அம்முயற்சிகளை நிறைவு செய்ய இடமளிக்கவில்லை.
முதல் பாதி: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 0 – 1 புனித பேதுரு கல்லூரி
இரண்டாம் பாதி ஆரம்பமாகியதும் புனித பேதுரு கல்லூரிக்காக பின் களத்தில் விளையாடிக்கொண்டிருந்த சபீர், தனது வழமையான இடமான முன் களத்திற்கு வர, பின் களத்தைப் பலப்படுத்த அனுபவ வீரர் ஷெஹான் மாற்று வீரராக மைதானத்திற்குள் நுழைந்தார்.
போட்டியின் 57 ஆவது நிமிடத்தில் மாரிஸ் ஸ்டெல்லா அணியின் ஒரு திசை கோணர் பகுதியில் இருந்து மத்திய களத்தின் எல்லைவரை உதையப்பட்ட பந்தை வேகமாக ஓடிச் சென்று பெற்ற சபீர், மிகவும் தொலைவில் இருந்து பந்தை கோல் நோக்கி உயர்த்தி உதைந்தார். இதன்போது யாரும் எதிர்பாராத வகையில் பந்து மாரிஸ் ஸ்டெல்லா கோல் காப்பாளரையும் தாண்டி கோலுக்குள் சென்றது.
ஆட்டம் 70 நிமிடங்களை அண்மித்த நிலையில் பெனால்டி எல்லைக்கு வெளியில் வைத்து பந்தைப் பெற்ற சபீர் அதை பெனால்டி எல்லைக்குள் எடுத்துச் சென்று, பின்கள வீரர்களையும் தாண்டி இறுதியாக கோல் நோக்கி உதைந்தபோது பந்து இடதுபுற கம்பத்தில் பட்டு திசை திரும்பியது.
மறுமுனையில் மாரிஸ் ஸ்டெல்லா அணிக்காக நிசல் தாரிந்த பல முயற்சிகளை அணிக்கா பெற்றுக்கொடுத்த போதும் அவை எதிரணியின் மத்திய மற்றும் பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டன.
இவ்வாறான தொடர் முயற்சிகளின் பின்னர் நடுவர் போட்டி நிறைவடைந்ததாக தெரிவிக்கையில் புனித பேதுரு கல்லூரி போட்டியை வென்று அரையிறுதிக்குத் தெரிவாகியது.
இதன்படி நாளை (25) நடைபெறவுள்ள அரையிறுதியில் புனித பேதுரு கல்லூரி, யாழ் பத்திரிசியார் கல்லூரி அணியை சந்திக்கவுள்ளது.
முழு நேரம்: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 0 – 2 புனித பேதுரு கல்லூரி
கோல் பெற்றவர்கள்
புனித பேதுரு கல்லூரி – மொஹமட் பயாட் , சபீர் ரசூனியா