சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று வரும் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவு 3 (டிவிஷன் – 3) பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் ரோயல் கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரி அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. எனினும் சிறந்த ஓட்டக்குவிப்பால் போனஸ் புள்ளியை பெற்ற ரோயல் கல்லூரி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்தது.
இதேவேளை மற்றுமொரு காலிறுதிப் போட்டியில் அம்பலாங்கொடை தர்மாசோக கல்லூரியை எதிர்கொண்டு விளையாடிய மொறட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி
சிங்கர் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவு 3 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஒரு நாளில் நான்கு இன்னிங்சுகள் கொண்ட போட்டிகளாக நடைபெற்று வருகின்றன.
இதில் இன்று (06) நடைபெற்ற இரண்டு காலிறுதிப் போட்டிகளில், கொழும்பு ரோயல் கல்லூரி அணி, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியை எதிர்த்தாடியதுடன், மொறட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி அணி, அம்பலாங்கொடை தர்மாசோக கல்லூரியை எதிர்கொண்டது.
குறிப்பிட்ட இந்த இரண்டு போட்டிகளிலும் இளம் வீரர்கள் தங்களது திறமைகளை செவ்வனே வெளிப்படுத்தினர். முக்கியமாக துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான வெளிப்படுத்தல்கள் மூலம் போட்டிகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
ரோயல் கல்லூரி, கொழும்பு எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு
கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி அணிகளுக்கிடையில் ஹொரணை டெக்ஸிலா மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ரோயல் கல்லூரி அணி அற்புதமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதுடன், போனஸ் புள்ளியுடன் அரையிறுதிக்கு தெரிவாகியது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் கல்லூரி இன்றைய ஆட்டநேரம் முடியும் வரை துடுப்பெடுத்தாடியது. போட்டியின் இறுதிவரை நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்த ரோயல் கல்லூரி 85 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 417 ஓட்டங்களை குவித்தது.
ரோயல் கல்லூரி சார்பில் இரண்டு வீரர்கள் தங்கள் சதத்தை பூர்த்தி செய்தனர். ஒருபக்கம் அதிரடியாக துடுப்பாடிய ரெசந்து திலகரட்ண ஆட்டமிழக்காமல் 152 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் நிதின் பனபிடிய ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை பெற்றார். இவர்களுக்கு அடுத்தபடியாக சதீச ராஜபக்ஷ 77 ஓட்டங்களையும், அஷேன் கமகே 34 ஓட்டங்களையும் தங்களது பங்கிற்கு பெற்றுக்கொடுத்தனர்.
ஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்
இதன்படி போட்டி நாள் முழுவதும் எதிரணிக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்காத ரோயல் கல்லூரி தங்களது துடுப்பாட்ட வெளிப்படுத்தல்களால் போனஸ் புள்ளியுடன் அரையிறுதி வாய்ப்பை பெற்றது.
போட்டியின் சுருக்கம்
ரோயல் கல்லூரி, கொழும்பு – 417/4 (85) – ரெசந்து திலகரட்ண 152, நிதின் பனபிடிய 106
தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு – துடுப்பெடுத்தாடவில்லை
முடிவு – போட்டி சமநிலை (போனஸ் புள்ளியின் மூலம் ரோயல் கல்லூரி அரையிறுதிக்கு தெரிவு)
தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை எதிர் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவ
பண்டாரகம பொது மைதானத்தில் நடைபெற்ற அம்பலாங்கொடை தர்மாசோக கல்லூரி மற்றும் மொறட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டியில், பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளால் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மாசோக கல்லூரி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரிக்கு வழங்கியது. இதனடிப்படையில் துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி அணி, 67.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை பெற்றதுடன், ஆட்டத்தை இடைநிறுத்தியது.
துடுப்பாட்டத்தில் தனுஜ் கவிஷான் 58 ஓட்டங்களையும், மலீஷ டி சில்வா 56 ஓட்டங்களையும், ஷெஹான் ரொட்ரிகோ 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, தரிந்து அமரசிங்க 51 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் தர்மாசோக கல்லூரி சார்பாக மனீஷ ரஷ்மிக 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் துடுப்பெடுத்தாடிய தர்மாசோக கல்லூரி அணி 33.5 ஓவர்களில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் தோல்வியை தழுவியது. அத்துடன் போட்டி நேரம் நிறைவுக்கு வந்த காரணத்தால் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரிக்கு இன்னிங்ஸ் புள்ளிகளால் வெற்றி வழங்கப்பட்டது.
ஆசிய கிண்ண பாகிஸ்தான் குழாமில் புதிய அப்ரிடி
தர்மாசோக கல்லூரி சார்பாக அபீத் சந்தரகுப்த 52 ஓட்டங்களையும், ஹசித ராஜபக்ஷ 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, பந்து வீச்சில் மலீஷ டி சில்வா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் சுருக்கம்
பிரின்ஸ் ஓஃப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவ – 252/8d (67.3) – தனுஜ் கவிஷான் 58, மலீஷ டி சில்வா 56, ஷெஹான் ரொட்ரிகோ 55, தரிந்து அமரசிங்க 51, மனீஷ ரஷ்மிக 69/3
தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை – 154 (33.5) – அபீத் சந்ரகுப்த 52, ஹசித ராஜபக்ஷ 50, மலீஷ டி சில்வா 34/3
முடிவு – மொறட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் புள்ளிகளால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க