15 வயதுக்குட்பட்ட ப்ரிமா கிண்ண இறுதிப்போட்டியில் கவிந்து உமயங்க 122 ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றதன் மூலம் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட முடிவின் போது, மேல் மாகாண தெற்கு அணி 8 விக்கெட்டுக்களை இழந்த 299 ஓட்டங்களை பெற்று சிறந்த நிலையில் இருந்தது.
மாகாண அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியின் முதலாம் நாளான நேற்று, மேல் மாகாணங்களை சேர்ந்த இரு அணிகள் மோதின. மேல் மாகாண தெற்கு அணி நாணய சுழற்றசியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதன்படி களம் இறங்கிய அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் முதல் விக்கெட்டுக்காக 86 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பத்தினை பெற்றுக்கொடுத்தனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கமில் மின்ஹாற பெற்ற 72 ஓட்டங்கள் அணியை மிகவும் பலப்படுத்தியது.
விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் தடுமாறிய மேல் மாகாண மத்திய அணியின் பந்து வீச்சாளர் மனிஷா ருப்பசிங்க, கமில்லின் விக்கெட்டை பெற்றுக்கொள்ள அணியின் உத்வேகம் கூடியது. 174 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்ந்திருந்த போது, கவிந்து உமயங்க களம் இறங்கி 16 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்களாக 122 ஓட்டங்களை விளாசினார். எனினும், மறுமுனையில் விக்கெட்டுகள் இழந்துகொண்டிருந்த நிலையில் அஷான் டில்ஹாரவின் 29 ஓட்ட பங்களிப்பு கவிந்துவுக்கு உதவியது.
பந்து வீச்சில், யாசிறு கஸ்தூரியாராச்சி 77 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மனிஷ 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அமித் டபரெ மற்றும் மிரங்கா விக்கரமதிலக ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில், மேல் மாகாண தெற்கு அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
மேல் மாகாண தெற்கு அணி : 299/8 (90) – கவிந்து உமயங்க 122, கமில் மிஷார 72, யாசிறு கஸ்தூரியாராச்சி 77/4, மனிஷ ருபசிங்க 63/2