இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவு III அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரையிறுதிப்போட்டியில் பலாங்கொடை ஜீலானி கல்லூரி அணியினை முதலாவது இன்னிங்சில் முன்னிலை பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்த இந்த ஒரு நாள் – நான்கு இன்னிங்சுகளைக் கொண்ட போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் வெறுமனே 7 ஓட்டங்களுக்கு மத்திய கல்லூரியினர் அணியினர் பறிகொடுத்தனர்.
சமரி அட்டபத்துவின் அதிரடி ஆட்டம் வீண்; தென்னாபிரிக்க மங்கைகளிடம் வீழ்ந்த இலங்கை மங்கைகள்
சன்சஜன், கஜன் ஜோடி ஓரளவிற்கு நிதானமாகத் துடுப்பெடுத்தாட, மத்திய கல்லூரி அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 55 ஓட்டங்களை பெற்றது. சன்சஜன் ஆட்டமிழக்க களம் நுழைந்த கௌதம் அதிரடியாக 38 பந்துகளில் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
மறுபக்கம் நிதானமாக துடுப்பாடிய கஜன் அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வீரர்கள் விரைவாக தமது விக்கெட்டுக்களை பறிகொடுக்க 47.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றிருக்கையில் மத்திய கல்லூரி அணி ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
மிகவும் நிதானமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஜீலானி கல்லூரியின் முதலிரு விக்கெட்டுக்களையும் இடது கை வேகப்பந்துவீச்சாளர் கௌதம் சாய்த்தார். தொடர்ந்து பந்துவீசுவதற்கு அழைக்கப்பட்ட சுழல் பந்துவீச்சாளர் கவிதர்சன் ஒரு முனையில் விக்கெட்டுக்களை சாய்க்க, மறுமுனையில் முன்வரிசை துடுப்பாட்ட வீரரர் பிரகாஷ் நாயர் நிலைத்திருந்து நிதானமாக துடுப்பாடினர்.
Photos: Jaffna Central College vs Jeilani College Balangoda | U15 Division III | Semifinals
82 ஓட்டங்களை பெற்றிருக்கையில் 8 ஆவது விக்கெட்டாக பிரகாஷ் நாயர் ரன் அவுட் முறை மூலமாகவும், அடுத்த ஓவரிலேயே ஒன்பதாவது இலக்கத்தில் களம் நுழைந்து அணிக்கான அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையான 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த மொஹமட் றிஸ்னி கஜனின் பந்தில் ஹிட் விக்கெட் முறை மூலம் ஆட்டமிழந்தார்.
இறுதி விக்கெட்டும் கவிதர்சனின் பந்தில் வீழ்த்தப்பட, பலாங்கொடை தரப்பினர் 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர்.
பந்துவீச்சில் சோபித்த கவிதர்சன் 35 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
முதலாவது இன்னிங்சில் 50 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் நிட்டம்புவ, ஸ்ரீ சங்கபோதி கல்லூரியினை எதிர்த்து மோதவுள்ளனர்.
விஷ்வ, ராஜிதவின் பந்து வீச்சை புகழ்ந்த குயிண்டன் டி கொக்
ஏற்கனவே 17 வயதுப் பிரிவில் பிரிவு 2 இல் விளையாடிவரும் மத்திய கல்லூரி அணியினர் இந்த வெற்றியுடன் தமது கல்லூரியின் இரண்டாவது அணியினையும் பிரிவு 2 இற்கு தரமுயர்த்தி உள்ளனர். ஏற்கனவே இதே வயதுப் பிரிவில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி பிரிவு 2 இல் விளையாடி வருகின்ற நிலையில் தற்போது மத்திய கல்லூரி அணியும் வடக்கின் இரண்டாவது அணியாக இந்த நிலைக்கு உயர்ந்திருப்பது வட மாகாணத்தில் பாடசாலை கிரிக்கெட் தரத்தின் வளர்ச்சி நிலையை காட்டி நிற்கின்றது.
போட்டியின் சுருக்கம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – 153/9 (47.5) – கஜன் 53, கௌதம் 32, முஸ்பிக் அஹமட் 4/47
ஜீலானி கல்லூரி, பலாங்கொடை – 103 (38.4) – மொஹமட் றிஸ்னி 23,பிரகாஷ் நாயர் 17, கவிதர்சன் 6/35, கௌதம் 2/20
போட்டி முடிவு – முதலாவது இன்னிங்ஸில் மத்திய கல்லூரி வெற்ற
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<