புனித தோமஸ் கல்லூரி அரையிறுதிக்குத் தெரிவு

276
under 15 cricket

பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்கு கீழ்பட்டோருக்கான ‘சிங்கர்’ கிரிக்கட் சுற்றுத் தொடரின் மூன்றாவது காலிறுதிப் போட்டியில் டி மாஸினெட் கல்லூரியை இலகுவாக தோற்கடித்த புனித தோமஸ் கல்லூரி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பிக்கும் போது 2 விக்கட்டுகளை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றிருந்த புனித தோமஸ் அணியினர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 365 ஓட்டங்களைக் குவித்தனர். கவின் போதிஜு மற்றும் மொஹமட் இஷாக் தலா 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். அதிரடியாக ஆடிய ஷலின் டி மெல் 74 பந்துகளுக்கு முகங்கொடுத்து 17 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 100 ஓட்டங்களை விளாசினார். பந்துவீச்சில் மார்க் மத்தியாஸ் 87 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

முன்னர், முதல் இனிங்ஸிற்காக டி மாஸினெட் கல்லூரி சகல விக்கட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ஷெனால் டி மொறாயஸ் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன் பந்து வீச்சில் கலக்கிய  டெல்மின் ரத்நாயக்க 64 ஓட்டங்களை வழங்கி 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். இதன்படி போட்டி சமநிலையில் நிறைவுற்றதுடன் முதல் இனிங்ஸில் பெற்ற வெற்றி காரணமாக புனித தோமஸ் கல்லூரி அரையிறுதிக்கு முன்னேறியது.

டி மாஸினெட் கல்லூரி

முதல் இன்னிங்ஸ் 205/10 (59.3)

ஷெனால் டி மொறாயஸ் 50, சிஹின சித்துமின 43*, அதீப நாணயக்கார 39

தினித் வன்னியாராச்சி 2/14, டெல்மின் ரத்நாயக்க 4/64

புனித தோமஸ் கல்லூரி

முதல் இன்னிங்ஸ் 365/7 (85)

ஷலின் டி மெல் 100, மொஹமட் இஷாக் 68, கவின் போதிஜு 68, மலித்ர விமலசூரிய 42 மார்க் மத்தியாஸ் 3/87