பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்கு கீழ்பட்டோருக்கான ‘சிங்கர்’ கிரிக்கட் சுற்றுத் தொடரின் காலிறுதிச் சுற்றில் நேற்று முடிவடைந்த இரு போட்டிகளில் வெற்றியைச் சுவீகரித்த பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரியும், மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரியும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியின் முதல் நாள் முடிவில், புனித தோமஸ் அணியினர் வலுவான நிலையிலிருந்தனர்.

முதலாவது நாள் ஆட்டமுடிவின் போது 2 விக்கட்டுகளை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றிருந்த மஹாநாம கல்லூரி நேற்று சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். தனியொருவராக போராடிய பவன் செனால் 126 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் துணித் வெல்லகே 60 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

இரண்டாவது இனிங்ஸிற்காக களமிறங்கிய புனித செபஸ்டியன் கல்லூரி போட்டி முடிவின் போது 7 விக்கட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.  சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஜணுஷ்க பெரேரா 94 ஓட்டங்களைப் பெற்றார்.

முன்னர், முதல் இனிங்ஸிற்காகக் களமிறங்கிய புனித செபஸ்டியன் கல்லூரி 72.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய நதீர பெர்னாண்டோ 103 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஷனில் பெர்னாண்டோ 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பவன் செனால் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். போட்டி சமநிலையில் முடிவுற்றதுடன், முதல் இன்னிங்ஸில் பெற்ற வெற்றி காரணமாக புனித செபஸ்டியன் கல்லூரி அரையிறுதிக்கு முன்னேறியது.

புனித செபஸ்டியன் கல்லூரி

முதல் இனிங்ஸ்  – 265/10 (72.2)

நதீர பெர்னாண்டோ 103, ஷனில் பெர்னாண்டோ 56, ஜணுஷ்க பெரேரா 39 – பவன் செனால் 3/52, நெத்மின ரணசிங்க 2/29

இரண்டாவது இனிங்ஸ் – 188/7 (50)

ஜணுஷ்க பெரேரா 94, சுகித்த பிரசன்ன 29, ஷனில் பெர்னாண்டோ 25 – சவிந்து காவிந்த 2/19, சமிந்த மதுசங்க 2/52


மஹாநாம கல்லூரி

முதல் இனிங்ஸ்  – 208/10 (70)

பவன் செனால் 126, யசரு சசதக 28 – துணித் வெல்லகே 4/60, ஷனில் பெர்னாண்டோ 2/31, ஷனில் பெர்னாண்டோ 2/13

மற்றைய போட்டியில், 30 ஓட்டங்களைப் பெற்றால் முதல் இனிங்ஸ் வெற்றி என்ற நிலையில் 4 விக்கட்டுகள் கையிருப்புடன் களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, சகல விக்கட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று நான்கு ஓட்டங்களால் முதல் இனிங்ஸ் வெற்றியை தனதாக்கியது.

இரண்டாவது இனிங்க்ஸை ஆரம்பித்த புனித ஜோசப் அணியினர், நேரடி வெற்றியை அடையும் நோக்குடன் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய தினித் ஜயக்கொடி 71 ஓட்டங்களையும்,  லக்சன் கமகே 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க 23 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை எடுத்திருந்த புனித ஜோசப் அணியினர் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டனர்.

163 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடத்தொடங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி ஆட்டம் முடிவடையும் போது 47 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் அணியினர் 43.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் அசத்திய நிலுக்க பெர்னாண்டோ 37 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். போட்டி சமநிலையில் முடிவுற்றதுடன், முதல் இனிங்ஸில் பெற்ற வெற்றி காரணமாக பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.


புனித ஜோசப் கல்லூரி

முதல் இன்னிங்ஸ் – 151/10 (43.3)

லக்சான் கமகே 33 – நிலுக்க பெர்னாண்டோ 4/37

இரண்டாவது இன்னிங்ஸ் – 166/3d (23)

தினித் ஜயகொடி 73*, லக்சன் கமகே 51*


பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி

முதல் இன்னிங்ஸ்  – 155/10 (66.3)

நதுக்க பெர்னாண்டோ 43, கவின் சதுஷ்க 28 – லக்சன் கமகே 4/24, தினித் ஜயகொடி 3/31

இரண்டாவது இன்னிங்ஸ் – 151/4 (47)

லக்சன் பெரேரா 71*, தினர பெர்னாண்டோ 37

பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்கு கீழ்பட்டோருக்கான ‘சிங்கர்’ கிரிக்கட் சுற்றுத் தொடரின் மூன்றாவது காலிறுதிப் போட்டி நேற்று புனித தோமஸ் கல்லூரிக்கும் டி மாஸினெட் கல்லூரிக்கும் இடையில் ஆரம்பமானது. நாணயச் சுழற்சியை வென்ற புனித தோமஸ் கல்லூரி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டி மாஸினெட் கல்லூரி சகல விக்கட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஷெனால் டி மொறாயஸ் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் பந்து வீச்சில் கலக்கிய  டெல்மின் ரத்நாயக்க 64 ஓட்டங்களை வழங்கி 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.  

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புனித தோமஸ் அணியினர் ஆட்ட நிறைவின் போது 2 விக்கட்டுகளை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். மொஹமட் இஷாக் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.


டி மாஸினெட் கல்லூரி

முதல் இன்னிங்ஸ் – 205/10 (59.3)

ஷெனால் டி மொறாயஸ் 50, சிஹின சித்துமின 43*, அதீப நாணயக்கார 39 – தினித் வன்னியாராச்சி 2/14, டெல்மின் ரத்நாயக்க 4/64


புனித தோமஸ் கல்லூரி

முதல் இன்னிங்ஸ் – 123/2 (33)

மொஹமட் இஷாக் 46*, மலித்ர விமலசூரிய 42

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்