பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்கு கீழ்பட்டோருக்கான கிரிக்கட் சுற்றுத்தொடரின் நான்காவது காலிறுதிப் போட்டி இன்று ஹோலி கிராஸ் கல்லூரிக்கும் நாலந்த கல்லூரிக்குமிடையில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியை வென்ற ஹோலி கிராஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை வழங்கிய உமயங்க சுவாரிஸ் 44 ஓட்டங்களைப் பெற்றார்.
பெதும் தர்ஷன 38 ஓட்டங்களைப் பெற்றதுடன் அணியை வலுவான நிலைக்கு இட்டுச்சென்ற ஷெரான் பொன்சேகா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 92 ஓட்டங்களைக் குவித்தார்.
ஹோலி கிராஸ் கல்லூரி 72.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் ஜிதேஷ் வாசல 38 ஓட்டங்களை வழங்கி 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நாலந்த அணி ஆட்டநேர முடிவின் போது 1 விக்கட்டை மாத்திரம் இழந்து 53 ஓட்டங்களை பெற்றிருந்தது. அவிஷ்க பெரேரா ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களை பெற்று களத்திலிருந்தார்.
ஹோலி கிராஸ் கல்லூரி – 249/10 (72.4)
ஷெரான் பொன்சேகா 92, உமயங்க சுவாரிஸ் 44, பெதும் தர்ஷன 38
ஜிதேஷ் வாசல 4/38, அஷென் வலிசுந்தர 2/18
நாலந்த கல்லூரி – 53 /1 in (16)
அவிஷ்க பெரேரா 48*