பண்டாரநாயக்க கல்லூரிக்கு நெருக்கடி கொடுத்த டி.எஸ். வீரர் மெதுஷான்

196

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மூன்று போட்டிகள் இன்று ஆரம்பமாயின.

எனினும் கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெறவிருந்த கொழும்பு, ஆனந்த கல்லூரி மற்றும் கொழும்பு லும்பினி கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு எதிர் பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா  

கம்பஹாவில் ஆரம்பமான போட்டியில் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி முதல் நாளில் ஆதிக்கம் செலுத்தியதோடு முதல் இன்னிங்ஸிலும் 36 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

மெண்டிஸ் நீக்கப்பட்டதை நியாயப்படுத்தும் லெப்ரோய்

இம்மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள இந்தியாவுக்கு…

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய டி.எஸ் சேனநாயக்க கல்லூரி 50.1 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. எனினும் விஹான் குணசேகர அரைச்சதம் பெற்றார். பந்துவீச்சில் ஹசித்த திமால் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பண்டாரநாயக்க கல்லூரிக்கு சுழற்பந்து வீச்சாளர் மெதுஷான் குமார நெருக்கடி கொடுத்தார். அவர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த பண்டாரநாயக்க கல்லூரி 136 ஓட்டங்களுக்கே சுருண்டது. எனினும் அந்த அணிக்காக தனித்து ஆடிய சிசித சதுனோத்ய 63 ஓட்டங்களை குவித்தார்.

இதன்போது அபாரமாக பந்துவீசிய மெதுஷான் குமார 35 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 172 (50.1) – விஹான் குணசேகர 60, டுவின் நிலக்ஷன 31*, பசின்து ஆதித்ய 24, ஹசித்த திமல் 4/30, ஜனிது ஜயவர்தன 3/19, சஹிரு ரொஷேன் 2/11  

பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா (முதல் இன்னிங்ஸ்) – 136 (35.4) – சிசித சதுனோத்ய 63, மெதுஷான் குமார 6/35  


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை

கம்பஹா, கதிரான கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியபோதும் அந்த அணியால் அதிக ஓட்டங்களை பெற முடியவில்லை.

ஒரே போட்டியில் 2 ஹெட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றி ஸ்டார்க் புதிய சாதனை

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க…

கேசர நுவன்த மற்றும் சரித் ஹசன்த இருவரும் முறையே 4,3 விக்கெட்டுகளை வீழ்த்த மாரிஸ் ஸ்டெல்லா அணி 180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மனிஷ சில்வா அதிகபட்சமாக 48 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித செர்வதியஸ் கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 180 (53.4) – மனிஷ சில்வா 48, அஷான் பெர்னாண்டோ 30, கேசர நுவன்த 4/35, சரித் ஹசன்த 3/27  

புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்) – 23/0 (7)


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ எதிர் மஹிந்த கல்லூரி, காலி

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் மழையால் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் 27 ஓவர்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட முதல் நாளில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 6 விக்கெட்டுகளை இழந்தது 116 ஓட்டங்களை எடுத்தது. விஷ்வ பீரிஸ் அதிகபட்சமாக 42 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, பொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்) – 116/6 (27) – விஷ்வ பீரிஸ் 42, அவின்து பெர்னாண்டோ 38, கே.எஸ்.டி. எதிரிசிங்க 2/11, கவின்து எதிரிவீர 2/37

இந்த அனைத்துப் போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்