சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் கீழ் 5 போட்டிகள் இன்று ஆரம்பமாகியதுடன், மேலும் 3 போட்டிகள் நிறைவுக்கு வந்தன.
ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு
புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் புனித ஜோசப் அணியினர் இன்னிங்ஸ் மற்றும் 2 ஓட்டங்களால் ஆனந்த கல்லூரி அணியை தோல்வியடையச் செய்தனர்.
நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த ஆனந்த கல்லூரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 144 ஓட்டங்களையே முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய புனித ஜோசப் கல்லூரி ரெவான் கெல்லியின் அரைச் சதத்தின் (75) உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பாடசாலை மட்டத்தில் மலியதேவ கல்லூரி மாணவன் இரட்டைச் சதம் அடித்து அசத்தல்
இதனையடுத்து 125 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்சுக்காக தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஆனந்த கல்லூரி வீரர்கள் 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இன்னிங்ஸ் மற்றும் 2 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர்.
முதல் இன்னிங்சில் ஆனந்த கல்லூரி அணிக்கு பந்துவீச்சில் அச்சுறுத்தலை கொடுத்து 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய புனித ஜோசப் கல்லூரியின் இடதுகை வேகப் பந்துவீச்சாளரான மிரங்க விக்ரமகே, இரண்டாவது இன்னிங்சிலும் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
போட்டியின் சுருக்கம்
ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 144 (51.3) – லக்ஷித அமரசேகர 27, கமேஷ் நிர்மால் 22, மிரங்க விக்ரமகே 7/28, லக்ஷான் கமகே 2/45
புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 269 (79.2) – ரெவான் கெல்லி 75, ஜெஹான் டேனியல் 45, லக்ஷான் கமகே 40, ஷெவான் ரசூல் 26, தமிந்த ரெஷான் 4/69, அசேல் சிகேரா 3/70
ஆனந்த கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 123 (39.3) – லஹிரு ஹிரன்ய 28, கவிந்து கிம்ஹான் 26, மிரங்க விக்ரமகே 5/37, திமுத் வெல்லகே 3/33
முடிவு – புனித ஜோசப் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 2 ஓட்டங்களால் வெற்றி.
தர்மராஜ கல்லூரி, கண்டி எதிர் புனித செர்வேஷியஸ் கல்லூரி, மாத்தறை
மாத்தறை உயன்வத்த மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் புனித செர்வேஷியஸ் கல்லூரி அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது.
நேற்றுத் தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த தர்மராஜ கல்லூரிர் செர்வேஷியஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 119 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சில் செர்வேஷியஸ் அணியின் சுபுன் கவிந்த 3 விக்கெட்டுக்களையும் திலான் பிரஷான் மற்றும் கேஷர நுவந்த தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சில் துடுப்பாடிய புனித செர்வேஷியஸ் அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றனர்.
தொடர்ந்து 95 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய தர்மராஜ கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 3 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய செர்வேஷியஸ் கல்லூரி அணி 2.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 119 (47) – விராஜித எஹெலபொல 43, சுபுன் கவிந்த 3/12, கேஷர நுவந்த 2/21, திலான் பிரஷான் 2/25
புனித செர்வேஷியஸ் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்) – 214 (81.4) – சுபுன் கவிந்த 26, புஷ்பிக டில்ஷான் 25, உபேந்த்ர வர்ணகுலசூரிய 6/57
தர்மராஜ கல்லூரி, கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 98 (59.5) – சச்சிந்த சேனநாயக்க 33, சஷிக துல்ஷான் 3/17, கேஷர நுவந்த 2/13
புனித செர்வேஷியஸ் கல்லூரி, மாத்தறை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 4/0 (2.4)
முடிவு – புனித செர்வேஷியஸ் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் வெற்றி
பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு
மாகந்துர பொது மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் புனித பெனடிக்ட் கல்லூரி அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த பண்டாரநாயக்க கல்லூரி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 174 ஓட்டங்களையே முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் பெனடிக்ட் அணியின் மஹேஷ் தீக்ஷன மற்றும் இமேஷ் பெர்ணான்டோ தலா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தனர்.
இலங்கையின் வெற்றியோட்டம் பங்களாதேஷுடனான T-20 போட்டிகளிலும் தொடருமா?
இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சில் புனித பெனடிக்ட் அணி மிகவும் மோசமாக துடுப்பெடுத்தாடி 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பண்டாரநாயக்க கல்லூரி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதனையடுத்து 203 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித பெனடிக்ட் கல்லூரி, 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா (முதல் இன்னிங்ஸ்) – 174 (53) – மாதவ தத்சர 40, சஹிரு ரொஷேன் 30, மஹேஷ் தீக்ஷன 5/61, இமேஷ் பெர்ணான்டோ 5/48
புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 147 (58.3) – கவீஷ ஜயதிலக 42* சனில்க நிர்மால் 41, பிரபாஷ் அல்விஸ் 3/25, அரோஷ விக்ரமகே 3/42, ஜனிந்து ஜயவர்தன 2/26
பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 175 (48) – திலீப சந்தருவன் 40, ஹசித பத்திரகே 36, மஹேஷ் தீக்ஷன 4/73, விஹங்க ருவன் 3/28
புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 203/5 (28.4) – ஷெஹான் பெர்ணான்டோ 56*, திலான் சதுரங்க 55, கயாஷhன் ஹெட்டியாரச்சி 2/18
முடிவு – புனித பெனடிக்ட் கல்லூரி 5 விக்கெட்டுக்களால் வெற்றி
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை எதிர் இசிபதன கல்லூரி, கொழும்பு
சதுன் பெர்ணான்டோ, அவிந்து பெர்ணான்டோ மற்றும் சனோஜ் தர்ஷிகவின் அரைச் சதங்களின் மூலம் இசிபதன கல்லூரிக்கு எதிராக பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி வலுவான நிலையை எட்டியுள்ளது.
கொழும்பு BRC மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, 7 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்ற போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இந்நிலையில் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இசிபதன கல்லூரி 34 ஓட்டங்களை பெறுவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) – 321/7d (77) – சந்துன் பெர்ணான்டோ 94, அவிந்து பெர்ணான்டோ 65, சனோஜ் தர்ஷிக 65, சவிந்து பீரிஸ் 39*, மதுஷங்க சந்தருவன் 3/89, காலிக் அம்மாத் 2/69
இசிபதன கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 34/2 (16) – சஞ்சுல அபேவிக்ரம 24* அவிந்து பெர்ணான்டோ 2/08
டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு எதிர் மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை
மொரட்டு மஹா வித்தியாலய மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி 160 ஓட்டங்களுக்கு சுருண்டபோதும் மொரட்டுவ கல்லூரிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து வருகிறது.
சகீபின் இடத்தை நஸ்முல் எவ்வாறு நிரப்புவார்?
இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பாதியில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த மொரட்டு மஹா வித்தியாலயம் ஆட்ட நேர முடிவின் போது 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 160 (61.1) – சமத் பண்டார 33, டெரொன் ஷெனால் 31, உவின் ஒசந்த 23, ஷெஹான் ஜீவந்த 4/31, ரஷான் கவிஷ்க 3/55, நதித் இஷேந்திர 2/18
மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) – 89/5 (33) – ஷெஹந்த நிசேந்திரா 28, நிஷான் மதுஷ்க 24, முதித லக்ஷான் 3/33, நெதுஷன் குமார 2/11
தர்ஸ்ட்டன் கல்லூரி, கொழும்பு எதிர் மஹாநாம கல்லூரி, கொழும்பு
தர்ஸ்ட்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 164 (61) – நிபுன் லக்ஷான் 87, ஹஷான் சந்தீப 5/84, ஹேஷான் ஹெட்டியாரச்சி 4/36
மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 85/3 (24) – துஷான் மெண்டிஸ் 42, பவன் ரத்னாயக்க 23*, நிபுன் லக்ஷான் 2/40
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
ஜனாதிபதி கல்லூரி, கோட்டே எதிர் புனித மரியாள் கல்லூரி, கேகாலை
ஜனாதிபதி கல்லூரி, கோட்டே (முதல் இன்னிங்ஸ்) – 201 (43) – இரங்க ஹஷான் 102, தனுல சமோத் 28, அகில ரொஷான் 24*, சஞ்சய ஜயமால் 6/55, சுபுன் குமார 4/67
புனித மரியாள் கல்லூரி, கேகாலை (முதல் இன்னிங்ஸ்) – 143 (41) – சுபுன் குமார 45, சஜீவ ஜயமால் 36, ஹசிந்து ப்ரேமகுமார 3/30, ஹிருன சிகேரா 2/31
ஜனாதிபதி கல்லூரி, கோட்டே (இரண்டாவது இன்னிங்ஸ்) – 67/3 (13) – இரங்க ஹஷான் 49
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு
புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை (முதல் இன்னிங்ஸ்) – 96 (37) – ரஷ்மிக மெவான் 19, பசிந்து உசெட்டி 4/15, அவீஷ கேஷான் 4/54
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 260/5 (56) – லசித் குரூஸ்புள்ளே 129, அஷான் பெர்ணான்டோ 37, சதுர அநுராத 31*, கெவின் பெரேரா 27, கவீஷ துலான்ஜன 2/51
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.