சகலதுறையிலும் பிரகாசித்த மஹிந்த கல்லூரிக்கு மற்றுமொரு இன்னிங்ஸ் வெற்றி

183

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் கீழ் 4 போட்டிகள் இன்று ஆரம்பமாகியதுடன், மேலும் 3 போட்டிகள் நிறைவுக்கு வந்தன. இதன்படி, காலி மஹிந்த கல்லூரி இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், கொழும்பு மஹாநாம மற்றும் குருநாகல் சென் ஆன்ஸ் ஆகிய அணிகள் முதல் இன்னிங்சிற்கான புள்ளிகளுடன் வெற்றியைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த கல்லூரி, காலி எதிர் லும்பினி கல்லூரி கொழும்பு

மஹிந்த கல்லூரி மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் லும்பினி கல்லூரியை இன்னிங்ஸ் மற்றும் 62 ஓட்டங்களால் மஹிந்த கல்லூரி அணி தோல்வியடையச் செய்தது.

நேற்றுத் தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த லும்பினி கல்லூரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 73 ஓட்டங்களையே முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது. இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சில் மஹிந்த கல்லூரியினர் ஹன்சித வலிஹின்னவின் பெற்றுக்கொண்ட அபார சதத்தின் (107) உதவியுடன் 289 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் வலுவாக காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர். பந்துவீச்சில் லும்பினி அணி சார்பாக மதுஷங்க சிறினாத 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

பவன், பவந்தவின் சதங்களினால் முன்னிலை பெற்ற மஹாநாம கல்லூரி

இதனையடுத்து 216 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்சுக்காக தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த லும்பினி வீரர்கள் 154 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இன்னிங்ஸ் மற்றும் 62 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர். முதல் இன்னிங்சில் லும்பினி அணிக்கு பந்துவீச்சில் அச்சுறுத்தலை கொடுத்து 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இடதுகை வேகப்பந்துவீச்சாளரான பசன் பெதன்கொட, இரண்டாவது இன்னிங்சிலும் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) -73 (31.4) – பசன் பெதன்கொட 5/30, கவிந்து எதிரிவீர 2/10

மஹிந்த கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 289/9d (84) – ஹன்சித வலிஹின்ன 107, அஷான் கந்தம்பி 66, பினுர திம்சர 27, கவிந்து எதிரிவீர 26, மதுஷங்க சிறினாத 5/109,

லும்பினி கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) -154 (54.2) – சந்துனில் சங்கல்ப 36, லகிந்து உபேந்ர 33, பசன் பெதன்கொட 4/55, நவோத் பரனவிதான 3/15, கவிந்து எதிரிவீர 2/21

முடிவு – மஹிந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 62 ஓட்டங்களால் வெற்றி


சென் ஆன்ஸ் கல்லூரி, குருநாகல் எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை

தினெத் சந்திமாலின் சதத்தின் மூலம் புனித அந்தோனியார் கல்லூரிக்கு எதிராக முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற சென் ஆன்ஸ் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் போட்டியை சமநிலையில் முடித்தது.

புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென் ஆன்ஸ் கல்லூரி, தினெத் சந்திமாலின் (114) சதம் மற்றும் ரந்தீர ரணசிங்கவின் அரைச்சத (51) உதவியுடன் முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் யசிந்து ஜயவீர 5 விக்கெட்டுக்களை அந்தோனியார் கல்லூரி சார்பாக கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய புனித அந்தோனியார் கல்லூரி அணியினர், இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது சகல விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர். அவ்வணி சார்பாக அவிஷ்க தரிந்து 54 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

இதில் ரந்தீர ரணசிங்க 4 விக்கெட்டுக்களை சென் ஆன்ஸ் கல்லூரி சார்பாக கைப்பற்றியிருந்தார்

போட்டியின் சுருக்கம்

சென் ஆன்ஸ் கல்லூரி, குருநாகல் (முதல் இன்னிங்ஸ்) – 294 (79.5) – தினெத் சந்திமால் 114, ரந்தீர ரணசிங்க 51, வனித வன்னிநாயக்க 47, யசிந்து ஜயவீர 5/76, பசிந்து சதுரங்க 2/27

புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை (முதல் இன்னிங்ஸ்) – 177 (66.4) – அவிஷ்க தரிந்து 54, ரஷ்மிக மேவன் 40, பசிந்து சதுரங்க 38*, ரந்தீர ரணசிங்க 4/46, புபுது கனேகம 2/50

சென் ஆன்ஸ் கல்லூரி, குருநாகல் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 205/7 (52) – புபுது கனேகம 40, கவிந்து ரனசிங்க 37, கவிந்து ஹெட்டியாராச்சி 3/14

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.


மஹாநாம கல்லூரி, கொழும்பு எதிர் ஜனாதிபதி கல்லூரி, கோட்டை

குருநாகல் வெலகெதர மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மஹாநாம கல்லூரி வீரர்கள் 403 ஓட்டங்களை முதல் இன்னிங்சில் குவித்து தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர். அவ்வணிக்காக பவன் ரத்னாயக்க 175 ஓட்டங்களையும், பவந்த வீரசிங்க 132 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து வலுச்சேர்த்தனர்.

இரட்டைச் சதத்தை தவறவிட்ட மெண்டிஸ்; மிக வலுவான நிலையில் இலங்கை

இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ஜனாதிபதி கல்லூரி வீரர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. பந்துவீச்சில் மஹாநாம கல்லூரியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அஷான் சந்தீப 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

இதன்படி, பலோவ் ஒன் (follow on) முறையில் இரண்டாம் இன்னிங்சுக்காக மீண்டும் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்ட ஜனாதிபதி அணியினர் 145 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 403/6d (95.1) – பவன் ரத்னாயக்க 175, பவந்த வீரசிங்க 132, பெதும் ரொட்ரிகோ 30, ரிபாஸ் மௌருப் 2/84,

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 158 (58.2) – எரந்த ஹஷான் 51, அகில ரொஷான் 24, அஷான் சந்தீப 6/66, பவந்த வீரசிங்க 2/17

ஜனாதிபதி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 145/6 (43) – ஜனிது தெவ்மின 56*, தஷிக நிர்மால் 33, வத்சர பெரேரா 2/24, லஹிரு விதான 2/37

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.


புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை

புனித பெனடிக்ட் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித செபஸ்டியன் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித பெனடிக்ட் கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித பெனடிக்ட் அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக கவீஷ ஜயதிலக்க 54 ஓட்டங்களைப் பெற்று அவ்வணிக்கு வலுச்சேர்த்தாலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் செபஸ்டியன் கல்லூரியின் பிரவீன் ஜயவிக்ரம, 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் செபஸ்டியன் கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்களைப் பெற்றது. இதில் தருஷ பெர்ணாந்து 64 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

நாளை போட்டியின் இரண்டாவதும் கடைசியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 135 (44.5) – கவீஷ ஜயதிலக 54, நிசல்க துலாஜ் 23, பிரவீன் ஜயவிக்ரம 5/44, நுவனிது பெர்னாந்து 2/20

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 161/6 (37) – தருஷ பெர்னாந்து 64, நிஷித அபிலாஷ் 34, கவீஷ ஜயலதிக 3/26, மஹேஷ் தீக்ஷன 2/58