சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் கீழ் 9 போட்டிகள் ஆரம்பமாகியதுடன், 2 போட்டிகள் இன்று (08) நிறைவுக்கு வந்தன. இதில் தர்ஸ்ட்டன் கல்லூரியின் நிபுன் லக்ஷான் மற்றும் மஹாநாம கல்லூரியின் செனால் தினூஷ ஆகியோர் சதங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மலியதேவ கல்லூரி, குருநாகல் எதிர் தர்ஸ்ட்டன் கல்லூரி, கொழும்பு
மலியதேவ கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்ஸ்ட்டன் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை மலியதேவ கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மலியதேவ கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக சாலக அத்தபத்து 42 ஓட்டங்களைப் பெற்று அவ்வணிக்கு வலுசேர்த்தாலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் தர்ஸ்ட்டன் கல்லூரியின் யெஷான் விக்ரமாரச்சி 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.
டெஸ்ட் விளையாடும் இளம் வீரர்களுக்காக களத்தில் குதித்த சங்கக்கார
பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் தர்ஸ்ட்டன் கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 313 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் நிபுன் லக்ஷான் ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, நிமேஷ் பெரேரா (57), பவன்த ஜயசிங்க (51) ஆகியோர் அரைச்சதங்களைக் கடந்தனர்.
போட்டியின் சுருக்கம்
மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 135 (33.5) – சலக அத்தபத்து 42, பிரையன் கருணாநாயக்க 41, யெஷான் விக்ரமாரச்சி 5/26, பிமர ரணதுங்க 3/31
தர்ஸ்ட்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 313/9 (61) – நிபுன் லக்ஷான் 107*, நிமேஷ் பெரேரா 57, பவந்த ஜயசிங்க 51, யெஷான் விக்ரமாரச்சி 27, பசிந்து தென்னகோன் 2/40
மஹாநாம கல்லூரி, கொழும்பு எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு
கதிரான மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மஹாநாம கல்லூரி, சொனால் தினூஷவினால் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அபார சதத்தின் (123) உதவியுடன் 250 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் மாரிஸ் ஸ்டெல்லா அணியின் பசிந்து உசேட்டி 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடி வரும் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பின்றி 2 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
மஹாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 250 (91) – சொனால் தினூஷ 123*, பவந்த வீரசிங்க 31, பெதும் பொதேஜு 23, பசிந்து உசேட்டி 4/68, ரவிந்து பெர்ணான்டோ 3/61, அவீஷ கேஷான் 2/37
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 2/0 (2)
புனித ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை எதிர் இசிபதன கல்லூரி, கொழும்பு
கொழும்பு தர்ஸ்ட்டன் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இசிபதன கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித ஜோன்ஸ் அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக பிரவீன் சந்தமால் 56 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று அவ்வணிக்கு வலுசேர்த்தார்.
பந்துவீச்சில் இசிபதன கல்லூரியின் மதுஷிக சந்தருவன் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.
பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இசிபதன கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 82 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
புனித ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 179 (62) – பிரவீன் சந்தமால் 56*, பசன் பெரேரா 42, ருக்ஷான் திஸாநாயக்க 20, அஷான் தில்ஹார 20, மதுஷிக சந்தருவன் 4/35, அயன சிறிவர்தன 3/37, இஷான் பெர்ணான்டோ 2/17
இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 82/3 (32.2) – சஞ்சுல பண்டார 32, தமிந்து விக்ரமாரச்சி 2/16
புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை எதிர் புனித மரியாள் கல்லூரி, கேகாலை
சஜீவ ரஞ்சித்தின் அபார பந்துவீச்சு மூலம் புனித அந்தோனியார் கல்லூரியை 174 ஓட்டங்களுக்கு சுருட்டிய மரியாள் கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது.
மோசமான துடுப்பாட்டத்திற்கு பந்துவீச்சில் பதில் கொடுத்த இலங்கை
மோதர முத்துவெல்ல மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மரியாள் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய அந்தோனியார் கல்லூரியின் 5 விக்கெட்டுகளை சஜீவ ரஞ்சித் பதம்பார்த்தார். இதில் மரியாள் கல்லூரிக்காக வேகமாக துடுப்பெடுத்தாடிய சங்க மதுபாஷன 69 ஓட்டங்களை அதிபட்சமாகாப் பெற்று அவ்வணிக்கு வலுசேர்த்தார்.
பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த மரியாள் கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 213 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது. கஜித கொடுவேகொட ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளனர்.
போட்டியின் சுருக்கம்
புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 174 (39.1) – சங்க மதுபாஷன 69, ஹரிந்த பசிந்து 26, கவீஷான் துலாஞ்ச 21, சஜீவ ரஞ்சித் 5/69, இஷான் வீரசூரிய 2/13
புனித மரியாள் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 213/3 (40) – கஜித கொடுவேகொட 92*, திமிர குமார 64
தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை
செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற செபஸ்டியன் கல்லூரி அணி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய தர்மாசோக அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் செபஸ்டியன் கல்லூரியின் பிரவீன் ஜயவிக்ரம 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செபஸ்டியன் கல்லூரி அணி, நுவனிது பெர்ணான்டோவின் அரைச் சதத்தின் உதவியால் இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 321 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
போட்டியின் சுருக்கம்
தர்மாசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 76 (34) – சமிந்து டில்ஷான் 24, பிரவீன் ஜயவிக்ரம 4/23, தாசிக் பெரேரா 2/17
புனித செபஸ்டியன் கல்லூரி – 321 (60.4) – நுவனிது பெர்ணான்டோ 55, பிரவீன் குரே 46, ஷெனால் பெர்ணான்டோ 42, மலிந்த பீரிஸ் 42, தருஷ பெர்ணான்டோ 33, நிமேஷ் மெண்டிஸ் 3/36, சன்ஜன மெண்டிஸ் 3/59, கவிந்து நதீஷான் 3/98
பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை
மலீஷ டி சேரமின் அதிரடி பந்துவிச்சு மூலம் பண்டாரநாயக்க கல்லூரியை 70 ஓட்டங்களுக்கு சுருட்டிய புனித தோமியர் கல்லூரி தமது முதல் இன்னிங்சில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது.
மாத்தறை உயன்வத்த மைதானத்தில் அரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தோமியர் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய பண்டாரநாயக்க கல்லூரியின் 5 விக்கெட்டுக்களை மலீஷ டி சேரம் கைப்பற்றினார்.
சுப்பர் 8 போட்டிகளில் வெற்றியை தமதாக்கிய SSC, NCC, துறைமுக அணிகள்
பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரி மழை காரணமாக இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 124 ஓட்டங்களை பெற்றுள்ளது. மிஹிசல் அமோத ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களுடனும், ஹிரந்த லக்ஷான் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் பெற்று களத்தில் உள்ளனர்.
போட்டியின் சுருக்கம்
பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 70 (28.5) – ஹசித திமால் 29, மலீஷ டி சேரம் 5/23, சினெத் சிதார 3/08
புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 124/2 (33) – மிஹிசல் அமோத 66*, ஹிரந்த லக்ஷான் 51*, அரோஷ மதுஷான் 2/22
புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு
புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனித பெனடிக்ட் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித பேதுரு அணி, ஷனோன் பெர்ணான்டோ (77), மற்றும் ரன்மித் ஜயசேன (58) அரைச்சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்சுக்காக 7 விக்கெட்டடுக்களை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடி வரும் பெனடிக்ட் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 259/7d (61) – ஷனோன் பெர்ணான்டோ 77, ரன்மித் ஜயசேன 58, ஷிவான் பெரேரா 37*, பிருத்வி ஜகராஜசிங்கம் 2/40, இந்திக வீரசிங்க 2/58, மஹேஷ் தீக்ஷ 2/78
புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 65/3 (34)
புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி
முரளி – வாஸ் கிண்ணத்திற்காக புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி, தமது முதல் இன்னிங்சுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
புனித ஜோசப் கல்லூரி சார்பாக பாடசாலை அரங்கில் அண்மைக்காலமாக ஜொலித்து வருகின்ற ஜெஹான் டேனியல் 77 ஓட்டங்களையும், நிபுன் சுமனசிங்க 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணிக்கு வலுச்சேர்த்தனர்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடி வரும் புனித அந்தோனியார் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 299/7d (70) – ஜெஹான் டேனியல் 77, நிபுன் சுமனசிங்க 63, தினெத் ஜயகொடி 53, கல்ஹார சேனாரத்ன 3/79
புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 93/4 (19)
அனைத்து போட்டிகளினதும் இரண்டாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்.