ஐசிசி நடுவர்கள் குழாத்தில் இரண்டு புதுமுகங்கள்

ICC Elite Panel of Umpires

61
Allahudien Paleker and Alex Wharf

2025-26 ஆம் ஆண்டுக்கான 12 பேர் கொண்ட ஐசிசி நடுவர்கள் குழாத்தில் புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது எலைட் நடுவர்கள் விபரத்தை அறிவித்துள்ளது. அதில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அல்லாவுதீன் பலேகர் மற்றும் இங்கிலாந்தைச் சேர்;ந்த அலெக்ஸ் வார்ஃப் ஆகியோர் ஐசிசி எலைட் நடுவர்களாக பெயரிடப்பட்;டுள்ளனர் 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரான அல்லாவுதீன் பலேகர், நான்கு டெஸ்ட், 23 ஒருநாள் மற்றும் 67 T20I போட்டிகள் மற்றும் மொத்தம் 17 பெண்களுக்கான போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். இவர் 2024 ஆம் ஆண்டு ஐசிசி T20 உலகக் கிண்ணம், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் போன்ற முக்கிய ஐசிசி தொடர்களிலும் நடுவராக பணியாற்றியுள்ளார். 

இதனிடையே, இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ் வார்ஃப் தனது 16 வருட முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான அனுபவங்களைக் கொண்டுள்ளார். அதேபோல, அவர் இங்கிலாந்துக்காக 2004 மற்றும் 2005 காலப்பகுதியில் 13 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் 

வார்ஃப் ஆண்களுக்கான 7 டெஸ்ட் போட்டிகள், 33 ஒருநாள் போட்டிகள் மற்றும் 45 T20I போட்டிகளில் களநடுவராக பணியாற்றியுள்ளார். ஐசிசி ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கிண்ணத் தொடர்கள், 2024 இல் நடைபெற்ற ஐசிசி ஆண்கள் மற்றும் பெண்கள் T20 உலகக் கிண்ணத் தொடர்கள், அதேபோல, அண்மையில் நடைபெற்ற ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் ஆகியவற்றில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். 

அதே நேரத்தில் இந்த குழுவில் மொத்தம் 12 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் இலங்கையில் இருந்து குமார் தர்மசேன மட்டும் இடம் பிடித்துள்ளார். இந்தக் குழுவில் அதிகபட்சமாக இங்கிலாந்தில் இருந்து 3 பேரும், அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவில் இருந்து தலா 2 பேரும் இடம் பிடித்துள்ளனர். 

இதேவேளை, இந்தக் குழுவில் இதற்கு முன்னர் இடம் பெற்றிருந்த மைக்கேல் காப் (இங்கிலாந்து), ஜோயல் வில்சன் (மேற்கிந்தியத் தீவுகள்) ஆகிய இருவரும் தற்போது இந்த குழுவில் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐ.சி.சி. எலைட் நடுவர்கள் குழு (2025-2026) விபரம்: 

குமார் தர்மசேன (இலங்கை), கிறிஸ்டோபர் கஃபானி (நியூசிலாந்து), அட்ரியன் ஹோல்ட்ஸ்டொக் (தென்னாப்பிரிக்கா), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்கிலாந்து), நிதின் மேனன் (இந்தியா), அல்லாவுதீன் பலேகர் (தென்னாப்பிரிக்கா), அஹ்சன் ராசா (பாகிஸ்தான்), போல் ரீஃபெல் (அவுஸ்திரேலியா), ஷர்புதூலா இப்னே ஷாஹித் (பங்கதேளாதேஷ்), ரொட் டக்கர் (அவுஸ்திரேலியா), அலெக்ஸ் வார்ஃப் (இங்கிலாந்து). 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<