ஐக்கிய அரபு இராச்சியத்தின், அபு தாபியில் நடைபெற்றுவரும் T10 லீக் தொடரில் மேலும் இரண்டு இலங்கை வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் நுவான் பிரதீப் மற்றும் இளம் சுழல் பந்துவீச்சாளர் கெவின் கொத்திகொட ஆகியோரே இவ்வாறு, T10 லீக் தொடரில் புதிதாக இணைந்து விளையாடவுள்ளனர்.
தற்போது, அபு தாபியில் தங்கியிருக்கும் கெவின் கொத்திகொட, தசுன் ஷானக தலைமையிலான சென்னை பிரேவ்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டுள்ளார். இவர் உடனடியாக அணியுடன் இணைந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், நுவான் பிரதீப் இலங்கையிலிருந்து எதிர்வரும் 23ம் திகதி புறப்பட்டுச்சென்று, அபு தாபி T10 லீக் தொடரில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
அபு தாபி T10 தொடரில், இலங்கை அணியைச் சேர்ந்த தனன்ஜய லக்ஷான், தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ, அஞ்செலோ பெரேரா ஆகியோர் சென்னை பிரேவ்ஸ் அணிக்காக விளையாடி வருவதுடன், டெக்கன் கிளேடியேட்டர் அணிக்காக வனிந்து ஹஸரங்க, பங்ளா டைகர்ஸ் அணிக்காக இசுரு உதான, நொர்தென் வொரியர்ஸ் அணிக்காக உபுல் தரங்க மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் ஏற்கனவே விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<