ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இலங்கை கபடி வீரர்கள்

242

கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் போது இலங்கை கபடி அணிக்காக விளையாடிய வீரர்கள் இருவர் ஊக்கமருந்து பயன்படுத்தியமை கண்டயறிப்பட்டுள்ளதாக இலங்கை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த இரண்டு வீரர்களுக்கும் இடைக்காலத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை இலங்கை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்த அடைவுமட்டங்களை பெறத் தவறிய கனிஷ்ட மெய்வல்லுனர் வீர, வீராங்கனைகள்

இந்த வருடத்தின் முதலாவது சர்வதேச மெய்வல்லுனர் தொடராக எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் 19ஆம்

இதனிடையே, பி மாதிரி பரிசோதனை மேற்கொண்ட பிறகு குறித்த இருவருக்கும் எதிராக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரியவரும் என்று இலங்கை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.  

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் போதே குறித்த கபடி வீரர்களின் சிறுநீர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.   

அதனையடுத்து இந்தியாவின் டில்லியில் அமைந்துள்ள பரிசோதனைக் கூடத்தில் மேற்கொண்ட பரிசோதனைகளின் முடிவில் குறித்த இரண்டு வீரர்களும் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்ததாக இலங்கை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் செயலாளர் வைத்தியர் சீவலி ஜயவிக்ரம தெரிவித்தார்.

இதன்படி, ஊக்கமருந்து சர்ச்சையில் தென் மாகாணத்தைச் சேர்ந்த கபடி வீரர் ஒருவரும், சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவருமே இவ்வாறு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் இலங்கை கபடி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.  

விராட் கோஹ்லிக்கு நியூசிலாந்து தொடரில் திடீர் ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லியின் சுமையை கருத்திற்கொண்டு

எதுஎவ்வாறாயினும், குறித்த வீரர்களின் பெயர்களை விசாரணைகள் முடியும் வரை வெளியிட முடியாது என தெரிவித்த இலங்கை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம், அவர்களது விபரங்களை இலங்கை கபடி சம்மேளனத்துக்கு கடிதம் மூலம் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக அதன் செயலாளர் வைத்தியர் சீவலி ஜயவிக்ரம மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், குறித்த வீரர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள இறுதி தீர்மானத்தை இலங்கை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் ஒழுக்காற்றுக் குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.

எனினும், இந்த முடிவை எதிர்த்து ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்திடம் குறித்த வீரர்கள் மேன்முறையீடு செய்யலாம். ஆனால், அதில் அவர்கள் தோல்வியடைந்தால், கடந்த வருடம் தேசிய விளையாட்டு விழாவில் பெற்றுக்கொண்ட பதக்கங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க