தென்கொரியாவில் நடைபெற்று முடிந்திருக்கும் ஆசிய எழுவர் ரக்பி தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகளில் பிளேட் இறுதி ஆட்டத்தில் மலேசியாவை 41-07 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியிருக்கும் இலங்கை ரக்பி அணி தொடரில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாம் கட்டப்போட்டிகளிலும் இலங்கை ரக்பி அணி ஐந்தாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மலேசியா எதிர் இலங்கை
போட்டியின் ஆரம்ப நிமிடங்கள் இலங்கை எழுவர் ரக்பி அணிக்கு ட்ரை விருந்தாக அமைந்திருந்து. சுதம் சூரியராச்சி மூலம் புள்ளிகள் பெறுவதை ஆரம்பித்த இலங்கை தனுஷ் தயான் பெற்ற கொன்வெர்சன் மூலம் மேலும் வலுவடைந்தது.
போட்டியின் மூன்றாவது ட்ரையை தனுஷ்க ரஞ்சன் மூலம் இலங்கை அணி பெற்றுக்கொண்டது. முதல் பாதி நிறைவடைய சில நிமிடங்களுக்கு முன்னர் செருபெபலி நகாசிமா மலேசிய அணிக்காக முதல் புள்ளிகளை சேர்த்தார்.
முதல் பாதி: இலங்கை 19 – 07 மலேசியா
இரண்டாம் பாதியின் ஆதிக்கமும் இலங்கை அணியினால் விரைவான முறையில் பெறப்பட்டது. இலங்கைக்காக போட்டியின் நான்காவது ட்ரையை ஜேசன் திஸநாயக்க பெற்றுக்கொண்டார். மலேசிய அணிக்கு வெற்றியாளராக மாறும் சந்தர்ப்பம் இருந்த போதும் இலங்கை அணி அதற்கு இடம் தரவில்லை.
காலிறுதியில் இலங்கை எழுவர் ரக்பி அணி
சைனீஸ் தாய்பேய் அணியினருடன் கிடைத்திருக்கும்…
மேலும் போட்டியின் ஐந்தாவது ட்ரையை மாற்று வீரராக மைதானம் நுழைந்த ஹிரந்த பெரேரா பெற்றுக் கொண்டார். போட்டியின் முழு நேரம் நிறைவடைய சிறிது நேரத்துக்கு முன்பாக இன்னுமொரு ட்ரையும் பெரேராவினால் பெறப்பட்டது. இத்தோடு போட்டியின் வெற்றியாளர்களாக மாறிய இலங்கை எழுவர் ரக்பி அணி, ஆசிய எழுவர் ரக்பி தொடரின் இரண்டாம் கட்டப்போட்டிகளில் தமது நிலை என்னவென்பதை உறுதி செய்து கொண்டது.
இன்னும் மூன்று வாரங்களில் ஆசிய எழுவர் ரக்பி கிண்ண தொடரின் மூன்றாம் கட்டப்போட்டிகள் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழு நேரம்: இலங்கை 41 – 07 மலேசியா
இலங்கை எதிர் பிலிப்பைன்ஸ்
நவீன் ஹேனக்கன்கனம்கே இலங்கை அணிக்கு போட்டியின் முதல் நிமிடத்திலேயே புள்ளிகளை பெற்று அசத்தியிருந்தார். தொடர்ந்து ஜேசன் திஸநாயக்க பெற்ற கொன்வெர்சன் மூலம் இலங்கை புள்ளிகளை அதிகரித்துக் கொண்டது. இன்னும் எதிரணியின் மத்திய களத்தினை சிறப்பான முறையில் கடந்த சுதம் சூரியராச்சி மற்றுமொரு ட்ரையை இலங்கை அணி சார்பாக பெற்றுக்கொள்ள போட்டியின் முதற்பாதி இலங்கை முன்னிலையுடன் நிறைவுபெற்றது.
முதல் பாதி: இலங்கை 14 – 00 பிலிப்பைன்ஸ்
இரண்டாம் பாதியும் இலங்கை வீரர்களின் ஆதிக்கத்துடனேயே மீண்டும் காணப்பட்டிருந்தது. தனுஷ் தயான் தனக்கு கிடைத்த இடைவெளிகளின் ஊடாக சென்று இலங்கைக்காக மூன்றாவது ட்ரையை வைத்தார். பிலிப்பைன்ஸ் ரக்பி வீரர்களுக்கு தொடர்ந்து இலங்கை வீரர்களை சமாளிப்பது மிகவும் கடினமாக அமைந்தது. தொடர்ந்து நிமிடங்கள் செல்ல தரிந்த ரத்வத்த மூலமும் ஒரு ட்ரையை இலங்கை பெற்றுக் கொண்டது.
16 வயதிற்குட்பட்ட பாடசாலை ரக்பி லீக் தொடர் ஒத்திவைப்பு
இலங்கை பாடசாலைகள் ரக்பி சம்மேளனத்தால்…
இறுதி நேரத்தில் இலங்கை வீரர்கள் ட்ரை மழை பொழிந்து போட்டியில் முன்னேறினர். ஜேசன் திஸநாயக்க மற்றும் தனுஷ்க ரஞ்சன் ஆகியோரின் ட்ரைகளுடன் போட்டியின் வெற்றியாளராக இலங்கை அணி மாறிக்கொண்டது. பிலிப்பைன்ஸ் வீரர்களால் இலங்கையின் தடுப்பை தாண்டி எந்தவித புள்ளிகளையும் பெற முடியவில்லை.
முழு நேரம்: இலங்கை 42 – 00 பிலிப்பைன்ஸ்
ஹொங்கொங் எதிர் இலங்கை
இந்த தொடரின் காலிறுதிப் போட்டியின் முதல் நிமிடத்தில் ஹொங்கொங் சார்பாக முதல் ட்ரையை டொபி பென் வைத்தார். தொடர்ந்து இரண்டு நிமிடங்களில் ஜெக் நேவில் குழம்பியிருந்த இலங்கயின் தடுப்பை தாண்டி புள்ளிகளைப் பெற்றார்.
முதுதந்திரி மூலம் இலங்கை தமது முதல் ட்ரையை பெற்றுக்கொண்டது. போட்டியின் முதற்பாதி நிறைவடைய சொற்ப நேரங்களுக்கு முன்னர் செபஸ்டியன் பிரையன் மூலம் ஹொங்கொங் அணி மேலதிக ட்ரை ஒன்றைப் பெற்றுக்கொண்டது.
முதல் பாதி: ஹொங்கொங் 17 – 07 இலங்கை
இரண்டாம் பாதி ஹொங்கொங் வீரர்களுக்கு முழுமையாக உரித்தானது போன்றே காணப்பட்டது. ஜெக் நெவில் இந்தப்பாதியில் பெற்ற இரண்டு ட்ரைகளின் மூலம் ஹொங்கொங் அணி மேலும் வலுவடைந்தது. தனது தனிப்பட்ட திறமை மூலம் ஸ்ரீனாத் சூரியபண்டார இலங்கைக்கு வலுச் சேர்த்தாலும் அது போட்டியின் வெற்றியாளராக மாற இலங்கைக்கு போதுமானதாக அமையவில்லை.
முழு நேரம்: ஹொங்கொங் 31 – 14 இலங்கை