மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தான் இவ்வார இறுதியில் பார்வையாளர்களுடன் அந்நாட்டு கால்பந்து பருவத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்மூலம், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ரசிகர்களுடன் கால்பந்து தொடரொன்றை நடாத்தும் உலகின் இரண்டாவது நாடாக துர்க்மெனிஸ்தான் இடம்பிடிக்கவுள்ளது.
அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் பார்சிலோனா கழகம்
பார்சிலோனா கழகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு அதன் ஆறு பணிப்பாளர்கள் கடந்த வாரம் பதவி விலகிய…
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் விளையாட்டுத் துறையையே புரட்டி போட்டுவிட்டது. 2-3 மாதங்களுக்கு எந்த போட்டிகளும் கிடையாது என்ற நிலைமை உருவாகி உள்ளது.
ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொரோனாவில் இருந்து மீள போராடி வருகின்றதுடன், ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகள் எப்போது தொடங்கும் என்பதை உறுதியாக கூறு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்தப் பதட்டம் எதுவும் இல்லாமல் ஐரோப்பிய நாடான பெலரசில் வழக்கம் போல ப்ரீமியர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகின்றது.
இதனால் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தற்போது நடைபெற்றுவரும் ஒரேயொரு கால்பந்து தொடர் என்பதால் உலகம் முழுவதும் பெரும் அவதானத்தைப் பெற்றுள்ளது.
இதில் கடந்த வாரம் மின்ஸ்க், டைனமோ அணிகள் மோதிய போட்டியைக்காண 3 ஆயிரம் இரசிகர்கள் வருகை தந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதுஇவ்வாறிருக்க, பெலரசில் பெண்களுக்கான கால்பந்து லீக் தொடர் நேற்றுமுன்தினம் (15) ஆரம்பமாக இருந்தது. ஆனால் வீராங்கனைகள் சிலருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் குறித்த தொடரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், ஒரு கோடி மக்களைக் கொண்ட பெலரசில், கொரோனாவினால் 42 பேர் பாதிக்கப்பட்டு 40 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான துர்க்மெனிஸ்தான், அதன் கால்பந்து லீக்கை இவ்வார இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு அந்நாட்டு இரசிகர்களுக்கு அனுமதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துர்க்மெனிஸ்தான் கால்பந்து சம்மேளனம் (FFT) எட்டு அணிகள் பங்குபற்றுகின்ற உள்நாட்டு கால்பந்து லீக்கை கடந்த மார்ச் 24ஆம் திகதி இடைநிறுத்தியது. ஆனால் அதன் முடிவுக்கு உத்தியோகபூர்வ காரணம் எதுவும் கூறவில்லை.
முன்னாள் சோவியத் குடியரசின் ஒரு நாடாக விளங்கிய துர்க்மெனிஸ்தான் (6 கோடி மக்கள் தொகை) கடந்த 1991இல் சுதந்திரம் பெற்றது.
கொரோனாவால் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த மகளிருக்கான 17 வயதுக்குட்பட்ட உலகக்…
எனினும், உலகின் ஏனைய நாடுகளைப் போல துர்க்மெனிஸ்தானில் இதுவரை எந்தவொரு கொரோனா வைரஸ் நோயாளியும் பதிவாகவில்லை.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டு அரசாங்கம் பயணிகள் போக்குவரத்திற்கு அதன் எல்லைகளை ஏற்கனவே மூடியிருந்தது.
இதனிடையே, நிகரகுவா மற்றும் தஜிகிஸ்தானில் நடைபெறுகின்ற கால்பந்து லீக் போட்டிகள், இரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகின்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று நோயால் தொடர்ந்து கால்பந்து போட்டிகள் நடைபெற்றுவந்த ஒரேயொரு ஆபிரிக்க நாடான புருண்டி, திங்களன்று தனது லீக்கை இடைநிறுத்தியது. இருப்பினும் இது வைரஸின் அச்சுறுத்தலினால் நிறுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<