ஐசிசி உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட ட்ரெவர் பெய்லிஸ், இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி, அவுஸ்திரேலியாவின் முன்னணி பயிற்றுவிப்பாளர் டொம் மூடிக்கு பதிலாக 2019ம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற பயிற்றுவிப்பாளர் ட்ரெவர் பெய்லிஸை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளது.
தனது பதவியில் நீடிக்கப்போவிதில்லை என்கிறார் இன்சமாம் உல் ஹக்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய….
இவ்வாறான நிலையில், இங்கிலாந்து அணி தமது கன்னி உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு முக்கியமானவர்களில் ஒருவராக இருந்த தலைமை பயிற்றுவிப்பாளர் ட்ரெவர் பெய்லிஸ் தற்போது டொம் மூடியின் இடத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ட்ரெவர் பெய்லிஸை பொருத்தவரை ஐ.பி.எல். அணியொன்றுக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றவுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. இதற்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இவர் செயற்பட்டதுடன், இவரது பயிற்றுவிப்பின் கீழ் அந்த அணி 2 முறை சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதுமாத்திரமின்றி அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இவர் செயற்பட்டதுடன், அந்த அணியும் சம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மஹேலவும் விண்ணப்பிப்பாரா?
இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன….
இப்படி, சிறந்த முடிவுகளை தந்துள்ள பயிற்றுவிப்பாளர் என்ற அடிப்படையில் சன்ரைஸர்ஸ் அணி ட்ரெவர் பெய்லிஸை அணியில் இணைத்துள்ளதுடன், அவரது இணைப்பு குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,
“அணி புதிய பாதையை நோக்கி நகர்வதற்காக மிகவும் கவனமாக எடுக்கப்பட்ட முடிவின் படி, அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக டொம் மூடிக்கு பதிலாக, 2019ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ட்ரெவர் பெய்லிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இவர் ஐ.பி.எல். தொடரில் 2 கிண்ணங்களையும், பிக்பேஷ் லீக்கில் ஒரு கிண்ணத்தையும் வெல்ல காரணமாகியிருக்கிறார். வெற்றியாளராக அவர் தன்னை அடையாளப்படுத்தி வரும் நிலையில், அவரது வெற்றி பாதை சன்ரைஸர்ஸ் அணிக்கு முக்கியமான ஒன்றாக அமையும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 7 வருடங்களாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு, அதில் 5 முறை ப்ளே-ஓஃப் சுற்றுக்கும் 2016ம் ஆண்டு சம்பியனாகவும் மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த டொம் மூடிக்கு தங்களது நன்றிகளை ஹைதராபாத் அணி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சன்ரைஸர்ஸ் அணியின் தலைவரான நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான ட்ரெவர் பெய்லிஸ் ஆகியோர் ஒரே அணியில் இணையவுள்ளமை இரசிகர்கள் மத்தியில் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க