அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் டிராவிஷ் ஹெட், ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசையை பொருத்தவரை அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசேங் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் அகியோரைப் பின்தள்ளி டிராவிஷ் ஹெட் இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டார்.
பாகிஸ்தான் வீரர்களின் அரைச்சதங்களோடு நிறைவடைந்த பயிற்சிப் போட்டி
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஆஷஷ் டெஸ்ட் போட்டியில் 39 மற்றும் 77 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம் இவர் தரவரிசையில் 874 மதிப்பீட்டு புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன், கேன் வில்லியம்சனின் முதலாவது இடத்தையும் நெருங்கியுள்ளார்.
கேன் வில்லியம்சன் உபாதை காரணமாக போட்டிகளில் விளையாடாத நிலையில், அவருடைய மதிப்பீட்டு புள்ளி 883 ஆக உள்ளது. எனவே வெறும் 9 புள்ளிகளால் டிராவிஷ் ஹெட் இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டுள்ளார்.
டிராவிஷ் ஹெட் இதற்கு முன்னர் இந்திய அணிக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 163 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் 2வது இடத்தை பிடித்திருந்தார்.
அதேநேரம் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 75 ஓட்டங்களை விளாசிய இங்கிலாந்து வீரர் ஹெரி புரூக் 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 5 இடங்களுடன் 18வது இடத்துக்கு முன்னேறினார்.
இதேவேளை பந்துவீச்சாளர்கள் தரவரிசையை பொருத்தவரை உபாதையிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வூட் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், 9 இடங்கள் முன்னேறி 26வது இடத்தை பிடித்துள்ளார்.
இவரை தவிர்த்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டுவர்ட் புரோட் 4 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் பெட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி 2வது இடத்தையும், மிச்சல் ஸ்டார்க் 3 இடங்கள் முன்னேறி 11வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<