Sports Vision இல் பயன்படும் பயிற்சி முறைகள்

319

Vision Care நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்திருக்கும் Sports Vision தொழில்நுட்ப முறைமை விளையாட்டு வீர வீராங்கனைகளின் பார்வைத்திறன் விருத்திக்கு உதவுகின்றது. இந்த தொழில்நுட்ப முறைமையில் கிட்டத்தட்ட 45,000 இற்கு மேற்பட்ட தரவு உள்ளடக்கங்களின் உதவியோடு விளையாட்டு வீர வீராங்கனைகளின் பார்வையுடன் தொடர்புபட்ட 10 வெவ்வேறு வகையான ஆற்றல்கள் பரிசோதிக்கப்படவிருக்கின்றன. 

இந்த தொழில்நுட்ப முறைமையில் பார்வைத்திறன் ஆற்றல் விருத்திக்கான விஷேட பயிற்சித் திட்டம் ஒன்று வடிவமைக்கப்பட்டு அதன் மூலம் வீர வீராங்கனைகளின் திறமைகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. 

>> விளையாட்டு வீரர்களுக்காக புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் Vision Care

நாம் Sports Vision தொழில்நுட்ப முறைமையில் பயன்படுத்தப்படுகின்ற சில பயிற்சி முறைகள் பற்றி நோக்குவோம். 

Senaptec Sensory Station 

வீர வீராங்கனைகளின் பார்வையுடன் தொடர்புடைய உணர்வுவாங்கிகள் பற்றிய விடயங்களை மதிப்பிட்டு அதனை விருத்தி செய்வதற்கான உயர்தர தொழில்நுட்பமுறையாக Sensory Station அமைகின்றது. 

இதில் கிடைக்கப்பெறும் உடனடித் தகவல்களை, உலகில் கிடைக்கின்ற தரவுகளுடன் மூன்று வெவ்வேறு கோணங்களில் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும். இங்கே, விளையாடப்படும் விளையாட்டு, போட்டித்தன்மையின் அளவு மற்றும் நிலைகள் என்பன ஒப்பிடப்படவுள்ளன. 

அதேநேரம் இந்த தொழில்நுட்பத்தில், ஏற்கனவே செய்யப்பட்ட மதிப்பீடு மூலம் வீர வீராங்கனைகள் தங்களது பலம், பலவீனம் என்பன தொடர்பில் பார்த்துக்கொள்ள முடியும். இந்த Sensory Station தொழில்நுட்பத்தில் இங்கே குறிப்பிடப்படும் 10 வகையான பார்வை ஆற்றல்களை விருத்தி செய்து கொள்ள முடியும். 

Strobe Eyewear 

Strobe எனக் குறிப்பிடப்படுகின்ற உபகரணம் Sports Vision தொழில்நுட்ப முறைமையில் அடிக்கடி உபயோகம் செய்யப்படுகின்ற ஒரு உபகரணமாக இருக்கின்றது. இங்கே அணிவிக்கப்படும் விசேடவகை மூக்குக்கண்ணாடி மூலம் மூளை, உடல் மற்றும் கண்கள் இடையிலான தொடர்புகள் வினைத்திறனான முறையில் அதிகரிக்கப்படுகின்றது. 

இந்த மூக்குக் கண்ணாடியில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் மூலம் பார்வை தொடர்பான தகவல்களை பார்ப்பது கடினமாக்கப்படுகின்றது. இதன் காரணமாக, மூளை, உடல் மற்றும் கண்கள் என அனைத்தும் வினைத்திறனான முறையில் பார்வை தொடர்பான தகவல்களை செயன்முறைக்கு உட்படுத்தும்.  

இங்கே வழங்கப்படும் மூக்கு கண்ணாடியினை உபயோகம் செய்த பின்னர் விளையாட்டுக்களில் ஈடுபடுவர்கள், பார்வையுடன் தொடர்புபட்ட தகவல்களை விரைவான முறையில் செயன்முறைக்கு உட்படுத்துவதாக அறியப்பட்டிருக்கின்றது. 

இந்த Strobe உபகரணம் துலங்கல் வழங்குவதற்கான நேரத்தினை குறைக்க உதவுவதோடு, பார்வையுடன் தொடர்புபட்ட ஞாபகசக்தி, கண்கள்-கைகள் இடையிலான தொடர்பு மற்றும் நரம்பு இயைபாக்கம் போன்ற விடயங்களையும் விருத்தி செய்ய உதவுகின்றது. 

மறுமுனையில், Strobe தொழில்நுட்பம் இரண்டு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது.  முதல்வழி யாதெனில், Sport Vision நிலையத்தில் பயன்படுவது, இரண்டாவது பயிற்சி பார்வை தொடர்பான பயிற்சிகளின் போது பயன்படுத்தப்படுவதாகும். 

Virtual Reality

Virtual Reality தொழில்நுட்பம் கடந்த காலங்களில் இருந்தே விளையாடுப் பயிற்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த  Virtual Reality தொழில்நுட்பம் இங்கே Sports Vision தொழில்நுட்ப முறைமையில் பார்வையுடன் தொடர்புபட்ட ஞாபகசக்தி, கண்கள்-கைகள் இடையிலான தொடர்பு, துலங்கல் நேரம் மற்றும் தூரம் கணிக்கும் திறன் என்பவற்றினை வினைத்திறனாக மாற்றுகின்றது. 

The Fitlight Trainer

கம்பிகள் எதுவும் கொண்டிராத ஒரு பயிற்சித் தொகுதியாக, The Fitlight Trainer தொகுதி காணப்படுகின்றது. இந்த பயிற்சித்தொகுதியின் மூலம் இலக்குகளை வினைத்திறனாக எட்டுவதற்கான விடயங்களை விருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த பயிற்சித் தொகுதி மூலம் வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டின் கற்பனையான ஆடுகளம் ஒன்றினை செயற்கையான முறையில் உருவாக்கி கொடுத்து அதன் மூலம் அவர்கள் முன்னேற வேண்டிய இடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. இந்த தொழில்நுட்பம் மூலம் மிகவும் ஆழமான முறையில், பார்வை விருத்தியானது மேற்கொள்ளப்படுகின்றது. 

Synchrony

எதிர்பார்ப்புடன் உள்ள புலன் உணர்வுகள், அத்தியாவசிய வாழ்க்கைக்கு இன்றியமையாத விடயங்களாக இருக்கின்றன. உதாரணமாக பந்து ஒன்றை பிடியெடுப்பு செய்யும் விடயத்தினை கருதலாம். இதில், உங்கள் கண்கள் பந்தின் இயக்கத்தை கணித்து அது இருக்கும் தூரத்தினைக் கணித்து, உங்கள் தசைகளுக்கு துலங்கலை வழங்கி செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. 

இவ்வாறான விடயங்களை விருத்தி செய்வதற்காகவே, Sports Vision தொழில்நுட்ப முறைமையில் Synchrony தொழில்நுட்பமானது பயன்படுகின்றது. இந்த Synchrony மூலம் துலங்கல் வழங்குவதற்கான நேரம் முன்னேற்றகரமான முறையில் குறைக்கும். மேலும், இந்த தொழில்நுட்பம் கண்கள்-கைகள் இடையிலான தொடர்பினையும் விருத்தி செய்யவும் உதவுகின்றது. 

Binovi Technology

Binovi Technology ஆனது பார்வையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறுவகையான தரவுகளை உள்ளடக்கிய ஒரு மென்பொருள் தளமாகும்.  

Sports Vision தொழில்நுட்ப முறைமையில், Binovi Technology ஆனது கண்கள்-கைகள் இடையிலான தொடர்பு, நினைவாற்றல், வேகம் மற்றும் இன்னும் பல விடயங்களை விருத்தி செய்கின்றது. இந்த தொழில்நுட்பத்தினை பயனாளர் ஒருவர் அவரின் தேவைக்கு ஏற்ப, ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கான App ஒன்றின் மூலம் முகாமைத்துவம் செய்து கொள்ள முடியும்..

நீங்கள் ஒரு விளையாட்டு வீரரா? அல்லது வீராங்கனையா? உங்களை அதிக போட்டித்தன்மை கொண்ட ஒருவராக மாற்றிக்கொள்ள விரும்புகின்றீர்களா? இந்த கேள்விகளுக்கு விடை ஆம் என்றால், நீங்கள் தெரிவு செய்ய வேண்டியது Vision Care நிறுவனத்தின் Sports Vision இணையே.

Sports Vision தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமா? +94 76 697 628 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள் அல்லது கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். உங்களுடன் Vision Care நிறுவனத்தின் Sports Vision பிரிவு தொடர்பை ஏற்படுத்தும்.