இலங்கையின் பாடசாலை அணிகளுக்கு இடையிலான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ள கொழும்பு, ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
சலன பிரமன்தவின் கடைசி நேர கோலினால் புனித ஜோசப் இறுதிப் போட்டியில்
சலன பிரமன்த கடைசி நேரத்தில் போட்ட அபார கோல் மூலம் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கு …
இதன்மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புனித ஜோசப் கல்லூரிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட ஹமீட் அல் ஹுஸைனி அணி தகுதி பெற்றுள்ளது.
சுகததாஸ அரங்கில் இரண்டாவது அரையிறுதியாக வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் கோல் பெற்று முன்னிலையை உறுதி செய்து கொண்ட ஹமீட் அல் ஹுஸைனி புனித பத்திரிசியார் கல்லூரியின் தாக்குதல் ஆட்டத்திற்கு முன் இரண்டாவது பாதியில் பல கோல் வாய்ப்புகளையும் தவறவிட்டது.
போட்டியின் ஆரம்பத்திலே ஒரு திறந்த ஆட்டமாகவே ஹமீட் அல் ஹுஸைனி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரிகளுக்கு இடையிலான மோதல் இருந்தது. இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுத்ததால் போட்டி பரபரப்பாக இருந்தது.
எனினும், முதல் கோல் முயற்சியை ஹமீட் அல் ஹுஸைனி முன்னெடுத்தது. ரிஷான் கோல் கம்பத்திற்கு இடதுபக்க மூலையில் இருந்து உதைத்த பந்து கம்பத்தை தொட்டுக் கொண்டு வெளியே சென்று.
புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்கள் ஆரம்பத்தில் அதிக வேகம் காட்டியதோடு எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிமிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மறுபுறம் பலம் கொண்ட ஹமீட் அல் ஹுஸைனி பந்தை பரிமாற்றி கோல் பெறும் முயற்சில் ஈடுபடுவதை காண முடிந்தது.
ஹமீட் அல் ஹுஸைனியின் அனுபவ ஆட்டத்திற்கு 29ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. புனித பத்திரிசியார் கோல் எல்லையை ஆக்கிரமித்த ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் எதிரணியின் பின்கள வீரர்களை தடுமாறச் செய்தனர். இதன்போது கோல் கம்பத்தின் இடதுபக்க மூலையில் இருந்து அமான் பைசர் பரிமாற்றிய பந்தை வலைக்கு நெருக்கமாக இருந்து பெற்ற மொஹமட் அப்கர் நெருக்கடி இன்றி பந்தை வலைக்குள் செலுத்தினார்.
இதன்மூலம் 1-0 என முன்னிலைபெற்ற கொழும்பு வீரர்கள் யாழ். வீரர்களுக்கு தமது நெருக்கடியை அதிகரித்தனர். மறுபுறம், புனித பத்திரிசியார் கல்லூரி பந்தை தம்வசம் பரிமாற்றி ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களுக்கு சவால் கொடுப்பதை பார்க்க முடிந்தது.
இதன்போது, புனித பத்திரிசியார் கல்லூரியின் சிறந்த கோல் முயற்சி ஒன்று பந்து கோல் கம்பத்திற்கு மேலால் சென்றது.
முதல் பாதி ஆட்டத்தின் கடைசி பத்து நிமிடங்களிலும் பந்து மத்திய களத்தில் சுழன்றுகொண்டிருந்தது. இதனால், ஆட்டம் மந்தமடைந்தபோதும் முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில் வைத்து ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரிக்கு கோல் பெற கிடைத்த பொன்னான வாய்ப்பு ஒன்று தவறியது.
முதல் பாதி – ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி 1 – 0 புனித பத்திரிசியார் கல்லூரி
இரண்டாவது பாதி ஆரம்பித்தபோதே புனித பத்திரிசியார் வீரர்கள் தமது முனையில் இருந்து எதிராணி முனை வரை பந்தை சிறப்பாக கடத்திச் சென்று இறுதியில் ஹமீட் அல் ஹுஸைனி கோல் காப்பளர் மொஹமட் சப்ரினின் கைகளுக்கே பந்தை கொடுத்தனர்.
த்ரில் ஆட்டத்தில் கம்பளை ஸாஹிராவை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது ஹமீட் அல் ஹுஸைனி
ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி வீரர்கள் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் …
தொடர்ந்து யாழ். வீரர்கள் எதிரணி பக்கத்தில் பந்தை வேகமாக கடத்திச் சென்றபோது ஹமீட் அல் ஹுஸைனி அரணை அவர்களால் முறிடிக்க முடியவில்லை.
மறுபுறம், ஹமீட் அல் ஹுஸைனி இரண்டாவது பாதியின் நடுப்பகுதியில் வைத்து கோல் வாய்ப்புகளை பெற்றபோதும் அதனை கோலாக்க முடியவில்லை.
64ஆவது நிமிடத்தில் அமான் பைசல் பரிமாற்றிய பந்தை மொஹமட் ரிஷான் கோலை நோக்கி உதைத்தபோதும் பந்து கம்பத்திற்கு வெளியால் சென்றது. அடுத்த இரண்டு நிமிடங்களில் மீண்டும் அமான் பைசல் உதைத்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியால் பறந்தது.
தொடர்ந்து 76ஆவது நிமிடத்தில் மொஹமட் ரிஷான் எதிரணியின் பின்கள வீரர்களை முறியடித்து பந்தை கடத்திச் சென்றபோதும் அவர் பந்தை கம்பத்திற்கு வெளியால் உதைத்தார்.
அடுத்த மூன்று நிமிடங்களுக்குள் ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களுக்கு கோல் பெறுவதற்கு மேலும் மூன்று பொன்னான வாய்ப்புகள் கிடைத்தபோதும் அந்த வாய்ப்புகளை அவர்களால் கோலாக மாற்ற முடியாமல் போனது.
Photos: Gampola Zahira College v Hameed Al Husseinie – Quarter Final | ThePapare Football Championship 2018
ThePapare.com | Waruna Lakmal | 24/11/2018 Editing and re-using images ….
இதனிடையே, கொழும்பு வீரர்கள் 83ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி வலையை நோக்கி செலுத்திய பந்தை புனித பத்திரிசியார் கல்லூரி கோல் காப்பாளர் கிஜுமன் உயரப் பாய்ந்து தட்டிவிட்டார். தொடர்ந்து கோணர் கிக்கை அடுத்து ஹமீட் அல் ஹுஸைனியின் மற்றொரு கோல் வாய்ப்பையும் யாழ். கோல் காப்பாளர் சிறப்பாக தடுத்தார்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் பல வீரர்களும் காயத்திற்கு உள்ளான நிலையில் மேலதிக நேரமாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. எனினும், அந்த நிமிடங்களிலும் புனித பத்திரிசியார் கல்லூரியினால் பதில் கோல் ஒன்றை திருப்ப முடியாமல்போனது.
எனவே, முதல் பாதியில் அப்கர் பெற்ற கோலினால் ஆட்டத்தை வெற்றி கொண்ட ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி, பாடசாலைகளுக்கு இடையிலான இந்த மிகப் பெரிய தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
- முழு நேரம் – ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி 1 – 0 புனித பத்திரிசியார் கல்லூரி
- இன் ஆட்ட நாயகன் – மொஹமட் அமான் (ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி)
கோல் பெற்றவர்கள்
- ஹமீட் அல் ஹுஸைனி – மொஹமட் அப்கர் 29′