இளையோர் உலகக் கிண்ணத்தில் அசத்தவுள்ள இளம் நட்சத்திரங்கள்

951

2018ஆம் ஆண்டில் நடைபெறுகின்ற முதலாவது சர்வதேசப் போட்டித் தொடராக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நாளை (13) ஆரம்பமாகவுள்ளன.

19 வருடகால கிரிக்கெட் படிப்பினை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட்டில் பட்டப்படிப்பினை வழங்குகின்ற முக்கிய நிகழ்வாக இளையோர் உலகக் கிண்ணம் விளங்குகின்றது.

வரலாற்றில் முதல்முறை இடம்பெற்ற இளையோர் உலகக் கிண்ண ஆரம்ப விழா

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படுகின்ற 19…..

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 12ஆவது அத்தியாயமாக இது அமையவுள்ளது. முன்னதாக 2002, 2010ஆம் ஆண்டுகளில் இத்தொடரை நியூசிலாந்து நடாத்தியிருந்த நிலையில், மூன்றாவது முறையாக இத்தொடர் நியூசிலாந்தில் இம்முறை நடைபெறுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இம்முறை உலகக் கிண்ணத்துக்கு 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையில் முழு அங்கத்துவ நாடுகளாக இருந்த அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய 10 நாடுகளும் நேரடியகாகத் தகுதிபெற்றிருந்தன. கடந்த 2016ஆம் ஆண்டு தொடரில் துணை அங்கத்துவ நாடுகளில் முன்னிலை பெற்ற நமீபியாவும் நேரடியாகத் தகுதிபெற்றிருந்தது.

இவற்றுக்கு மேலதிகமாக, பிராந்தியங்களில் இடம்பெற்ற தொடர்களின் வெற்றியாளர்களான ஆப்கானிஸ்தான், கென்யா, கனடா, பப்புவா நியூ கினி, அயர்லாந்து ஆகியவையும் இம்முறை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன.

இதில், இங்கிலாந்து மற்றும் கனேடிய அணிகளில் இலங்கையில் பிறந்தவர்களும், இலங்கை வம்சாவளி வீரர்களும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். குறிப்பிடத்தக்க இங்கிலாந்து அணியில் சவின் பெரேராவும், கனடா அணியில் காவியன் நரேஷ், ஆரண் பத்மநாதன் மற்றும் கிரிஷான் செமுவேல் ஆகிய மூன்று இலங்கை வம்சாவளி தமிழ் வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, 16 அணிகளின் பங்குபற்றலுடன் நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச், குயீன்ஸ் டவுன், தவுரங்கா மற்றும் வங்கராய் ஆகிய நகரங்களில் உள்ள 7 முக்கிய மைதானங்களில் தொடரந்து 21 நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி தவுரங்காவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் வரவேற்பு நாடான நியூசிலாந்து அணி, நடப்புச் சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியை சந்திக்கவுள்ளது. மறுபுறத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானையும், பங்களாதேஷ் அணி நமீபியாவையும், ஜிம்பாப்வே அணி பபுவா நியூகினியாவையும் எதிர்த்து போட்டியிடவுள்ளன. டி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, 14ஆம் திகதி அயர்லாந்து அணியை சந்திக்கவுள்ளது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க சங்கக்காரவினால் யோசனை

கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக் கொள்வதற்கான …..

அண்மைக்காலமாக உலக கிரிக்கெட் அரங்கில் சாதனைக்கு மேல் சாதனை படைத்து ஜொலித்துக் கொண்டிருக்கின்ற விராத் கோஹ்லி, கிறிஸ் கெய்ல், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன், குயின்டன் டி கொக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைந்த போட்டித் தொடராக விளங்கிய இளையோர் உலகக் கிண்ணத்தில் இம்முறையும் குறிப்பிட்டு சொல்கின்ற ஒரு சில வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி எதிர்காலத்தில் நட்சத்திர வீரர்களாக ஜொலிப்பார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறு இம்முறை உலகக் கிண்ணத்தில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என நம்பப்படுகின்ற வீரர்கள் தொடர்பான தகவல்களை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.


கமிந்து மெண்டிஸ்

கிரிக்கெட் அரங்கில் இரு கைகளினாலும் பந்துவீசுவதென்பது இலகுவான விடயமல்ல. ஆனாலும் இரு கைகளையும் பயன்படுத்தி ஒரே பாணியில், எந்தவொரு வித்தியாசமுமின்றி பந்து வீசுவதென்பது அசாத்தியமான திறமை என்றே சொல்லாம்.

அந்த வகையில் 2016ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இரு கைகளாலும் பந்துவீசி உலகின் கவனத்தை ஈர்த்த வீரராக கமிந்து மெண்டிஸ் அனைவராலும் பேசப்பட்டார்.

இந்நிலையில், இடதுகை சுழற்பந்து வீச்சையும், வலதுகை சுழற்பந்து வீச்சையும் மேற்கொள்ளக்கூடிய காலி ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த கமிந்து மென்டிஸ் இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை இளம் அணிக்கு தலைமை தாங்குகிறார்.

பல சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் மிக்க சகலதுறை வீரரான இவரது பங்களிப்பை இலங்கை அணி பெரிதும் எதிர்பார்த்துள்ளது.


முஜீப் சத்ரான்

21ஆம் நூற்றாண்டில் பிறந்த முதல் வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆப்கானிஸ்தான் தேசிய அணிக்காக அண்மையில் விளையாடிய முஜீப் சத்ரான், இளையோர் உலகக் கிண்ணத்தில் முதற்தடவையாக விளையாடவுள்ளார்.

அயர்லாந்து அணியுடன் இடம்பெற்ற 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடிய வலதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், 16.57 என்ற சராசரியுடன் 7 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

முன்னதாக கடந்த வருடம் மலேஷியாவில் நடைபெற்ற இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில், நேபாளத்துக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இவர், பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியிலும் சிறப்பாகப் பந்துவீசி அவ்வணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

எனவே, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஒரேயொரு வீரராக களமிறங்கவுள்ள சத்ரான், ஆப்கானிஸ்தானுக்காக அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதியன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கலாம் என்ற நிலையில், ஆப்கானிஸ்தான் சார்பாக கடந்தாண்டு பிரகாசித்த சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான் இத்தொடரில் பங்கேற்கக்கூடியவாறு இருந்தபோதும் அவரை அந்நாட்டு தேர்வாளர்கள் தெரிவுசெய்திருக்கவில்லை.


சஹீன் அப்ரிடி

6 அடி 6 அங்குல உயரத்தைக் கொண்ட பாகிஸ்தான் அணியின் உயரமான இடதுகை இளம் வேகப்பந்து வீச்சாளரான சஹீன் அப்ரிடி, அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தானின் குவைட் ஈ அசாம் உள்ளூர் போட்டியில் முதல்தடவையாக களமிறங்கி 39 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து கடந்த வருட இறுதியில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக முதற்தடவையாக விளையாடியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் வாரிய மாகாண தொடரில் சம்பியனாகிய ஏறாவூர் யங் ஹீரோஸ்

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் டிவிஷன்.. ஏனைய போட்டிகள்…..

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வசீம் அக்ரமின் பாணியில் பந்துவீசுகின்ற 17 வயதான சஹீன், நியூசிலாந்தில் உள்ள வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ள ஆடுகளங்களில் புதிய பந்தில் சிறப்பாக செயற்பட்டு எதிரணிக்கு அச்சுறுத்தும் வீரராக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


பிரித்வி ஷா

இந்திய உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக ஓட்டங்களைக் குவித்து வருகின்ற இளம் வீரர்களில் ஒருவராக 18 வயதுடைய வலதுகை துடுப்பாட்ட வீரரான பிரித்வி ஷா விளங்குகிறார். கடந்த வருடம் நடைபெற்ற ரஞ்சி கிண்ணப் போட்டித் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய அவர், 18 இன்னிங்ஸ்களில் 56.52 என்ற சராசரியுடன் 961 ஓட்டங்களைக் குவித்தார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற துலிப் கிண்ணத் தொடரில் சதமடித்த இளம் வீரராகவும் மாறினார். முன்னதாக 2013ஆம் ஆண்டு தன்னுடைய 14 வயதில் இந்தியாவின் ஹரிஸ் சீல்ட் பாடாலை கிரிக்கெட் தொடரில் 330 பந்துகளில் 546 ஓட்டங்களைக் குவித்து புதிய சாதனை படைத்த வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.

எனவே, இம்முறை உலகக் கிண்ணத்தில் அனுபவமிக்க வீரராக உள்ள பிரித்வி ஷாவின் தலைமையில் களமிறங்கவுள்ள இந்திய அணி 4ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் விளையாடவுள்ளது.


ஒஸ்டின் வோ

ஆஷஸ் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த இந்திய வம்சாவளி இளம் வீரரான ஜேசன் சங்கா அவுஸ்திரேலிய இளம் அணிக்கு தலைவராக செயற்படவுள்ளார். இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவரான ஸ்டீவ் வோவின் மகன் ஒஸ்டின் வோ மற்றும் தற்போதைய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்டின் மகன் வில் சதர்லேண்ட் ஆகியோரும் விளையாடுகின்றனர்.

சந்திமாலின் திறமையை நாம் இன்னும் பார்க்கவில்லை

கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த ஜிம்பாப்வேயுக்கு எதிரான இலங்கை ஒரு நாள்…..

கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த ஜிம்பாப்வேயுக்கு எதிரான இலங்கை ஒரு நாள் குழாமில் இருந்து தினேஷ் சந்திமால் நீக்கப்பட்டபோது, அவரது ஓட்ட வேகம் 75 ஆக இருப்பதாகவும் அது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டுக்கு போதுமாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இதன்படி, 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை.. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ.. இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள்..

கடந்த வருடம் நடைபெற்ற 17 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய சம்பியன்ஷிப் தொடரில் சகலதுறை ஆட்டக்காரரான ஒஸ்டின் வோ சதம் அடித்து அசத்தியிருந்தார்.

கடந்த 1987இல் உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற ஸ்டீவ் வோக், 1999இல் அவுஸ்திரேலிய அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். தந்தை வழியில் மகன் அசத்துவாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.


தென்டோ நிடினி

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து நட்சத்திரம் மகாயா நிடினியின் மகன் தென்டோ நிடினி இம்முறை 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ண போட்டிகளில் தென்னாபிரிக்க அணிக்காக அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

17 வயதாகும் தென்டோ, முதன்முறையாக 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ண போட்டிகளுக்கான அணிக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான இவர், இடதுகை துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணிக்கெதிரான போட்டியின்மூலம் முதற்தடவையாக கடந்த வருடம் தென்னாபிரிக்காவுக்காக  விளையாடிய தென்டோ நிடினி 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

தந்தையைப் போல வேகப்பந்து வீச்சில் அசத்துகின்ற தென்டோவுக்கு, கிரிக்கெட் என்பது புதிதல்ல. தனது 3 வயதில் இருந்தே தந்தையுடன் ஒவ்வொரு சுற்றுப்பயணங்களின் போது இணைந்துகொண்டு கிரிக்கெட் குறித்து அதிக அனுபவம் பெற்ற இவர் நிச்சயம் எதிர்காலத்தில் தென்னாபிரிக்காவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கைலும் பொஷியர்

ரக்பி விளையாட்டைப் போல கிரிக்கெட்டிலும் அபாரமாக விளையாடி வருகின்ற 18 வயதான கைலும் பொஷியர், இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணியை வழிநடத்தவுள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மெக்கலம் போன்று ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அதிரடியாக விளையாடுகின்ற கைலும், பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுதுகின்ற ஆற்றல் கொண்டவர். இந்நிலையில் ஜிம்பாப்வே அணியுடனான உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டியில் 66 ஓட்டங்களைக் குவித்த அவர், 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

எனவே, இம்முறை உலகக் கிண்ணத்திற்குப் பிறகு கைலும் பொஷியர், கிரிக்கெட் அல்லது ரக்பி என ஒரு விளையாட்டை தெரிவு செய்வாரா? அல்லது இரண்டிலும் தனது வாழ்வைத் தொடர்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


பஷீர் ஷா

கிரிக்கெட் உலகின் நட்சத்திர ஜாம்பவான் டொன் பிரட்மனின் சாதனையை அண்மையில் முறியடித்த வீரராக அனைவராலும் பேசப்பட்டு வருகின்ற ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த பஷிர் ஷா, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் முதற்தடவையாக களமிறங்கவுள்ளார்.

இதுவரை 7 முதல்தர உள்ளூர் போட்டிகளில் 12 இன்னிங்ஸில் விளையாடி 121. 77 என்ற சராசரியுடன் 5 சதங்கள் மற்றும் 3 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 1,096 ஓட்டங்களை இவர் குவித்துள்ளார். இதன்படி, டொன் பிரட்மனின் 95.14 என்ற துடுப்பாட்ட சராசரியை அவர் முந்தி புதிய உலக சாதனை படைத்தார். அத்துடன், அறிமுக போட்டியில் 256 ஓட்டங்களைக் குவித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில், இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் நியூசிலாந்தின் சென்ட்ரல் பதினொருவர் அணியுடனான சதத்தையும் அவர் பெற்றுக்கொண்டார்.

எனவே, இம்முறை உலகக் கிண்ணமானது பஷிர் ஷாவுக்கு ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையவுள்ளது.

இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தை எந்த அணி கைப்பற்றும். உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.